சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஆஹா இது வேற லெவலுங்க! ஓசில சாப்ட்டு இர்பான் ரிவ்யூ கொடுத்தாரே.. ரோஸ்வாட்டர் ஹோட்டலுக்கு சீல்!

Google Oneindia Tamil News

சென்னை: சென்னை அண்ணாநகரில் 45 கிலோ கெட்டு போன இறைச்சியை வைத்திருந்ததாக உணவு பாதுகாப்பு துறையால் சீலிடப்பட்ட ஹோட்டல் ரோஸ் வாட்டர் உணவகத்தில் உணவு ஆஹா ஓஹோ என இருப்பதாக யூடியூபர் புகழ்ந்திருந்தார்.

Recommended Video

    ஒரே வயிற்று வலி! Anna Nagar Hotel-லில் அழுகிய இறைச்சியில் உணவு *TamilNadu

    கொரோனா காலத்திற்கு முன்பு வெகு சில யூடியூப் சேனல்களே இருந்தன. இவற்றில் உணவு குறித்த ரிவ்யூ, படங்களின் ரிவ்யூ, சமையல், அழகு குறிப்புகள், ஆடைகள் வாங்குவது, கைவேலைப்பாடுகளை சொல்லிக் கொடுத்தல், கோலமிடுதல், டெக்னாலஜி குறித்த அப்டேட், கேட்ஜட் குறித்த அப்டேட் உள்ளிட்டவை மிகவும் பிரபலமானவை.

    ஆனால் தற்போது கொரோனாவுக்கு பிறகு ஏகப்பட்ட யூடியூப் சேனல்கள் வந்துவிட்டன. இந்த யூடியூப் சேனல்களில் மிகவும் பிரபலமானவர் இர்பான். இவர் தமிழகம் மட்டுமல்லாமல் வெளிமாநிலம், வெளிநாடுகளிலும் உள்ள ஹோட்டல்கள், தெருக்கடைகள், தள்ளுவண்டி கடைகளில் சாப்பிட்டுவிட்டு ரிவ்யூ சொல்வதை வழக்கமாக கொண்டிருந்தார்.

    டிடிஎஃப் வாசனின் பிறந்தநாள் கொண்டாட்டம்.. ஸ்தம்பித்த கோவை.. நீண்ட நாள் சீக்ரெட்டை உடைத்த யூடியூபர்டிடிஎஃப் வாசனின் பிறந்தநாள் கொண்டாட்டம்.. ஸ்தம்பித்த கோவை.. நீண்ட நாள் சீக்ரெட்டை உடைத்த யூடியூபர்

    உணவு ரிவ்யூ

    உணவு ரிவ்யூ

    இவரை பார்த்து விட்டு நிறைய பேர் இது போல் உணவு ரிவ்யூ கொடுத்து வருகிறார்கள். பொதுவாக இது போல் பிரபலமானவர்கள், அதிக சப்ஸ்கிரைபர்களை கொண்டவர்களை உணவு ரிவ்யூ சொல்ல ஹோட்டல் நிர்வாகத்தினர் அழைப்பதுண்டு. அவர்கள் அந்த ஹோட்டலில் இருக்கும் அனைத்து உணவு பொருட்களையும் ஓசியில் சாப்பிட்டு பார்த்துவிட்டு உணவு எத்தனை மோசமாக இருந்தாலும் ஆஹா ஓஹோ என புகழ்ந்து தள்ளுவார்கள்.

     ஹோட்டல் நிர்வாகம்

    ஹோட்டல் நிர்வாகம்

    அது போல் இவர்களுக்கு சில ஹோட்டல் நிர்வாகத்தினர் ஓசியில் உணவையும் கொடுத்து ரிவ்யூ செய்ய குறிப்பிட்ட தொகையையும் கொடுப்பதாகவும் சொல்லப்படுகிறது. இதனால் வாங்கிய காசுக்கு நிர்வாகத்திற்கு விசுவாசமாக இவர்கள் ரிவ்யூ கொடுப்பதாக சொல்லப்படுகிறது. அந்த வகையில் இர்பானால் கடந்த ஆண்டு புகழப்பட்ட ஹோட்டல்தான் அண்ணாநகரில் உள்ள ரோஸ் வாட்டர். அந்த ஹோட்டலில் கடல் வாழ் உயிரினங்கள் நன்றாக இருக்கும் என்றும் அவை பதப்பட்டிருந்த ப்ரீசரில் இருந்து பச்சை மீனை எடுத்து சூப்பராக இருக்கிறது என்றும் கூறியிருந்தார் இர்பான்.

    யூடியூபர் இர்பான்

    யூடியூபர் இர்பான்

    யூடியூபர்களின் பேச்சை கேட்டுக் கொண்டு இங்கு சாப்பிட சென்ற ஒருவர் இறால் கிரேவியை ஆர்டர் செய்துள்ளார். சாப்பிட ஆசை ஆசையாய் காத்திருந்த நிலையில் அந்த இறால் அழுகிய வாடை வந்தது. இதையடுத்து அந்த வாடிக்கையாளரின் புகாரின் பேரில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஹோட்டலில் ஆய்வு நடத்தினர். அப்போது அங்குள்ள உணவு தயாரிப்பு கூடம், இறைச்சி பதப்படுத்தும் இயந்திரங்களை பார்வையிட்டனர்.

    10 கிலோ இறால்

    10 கிலோ இறால்

    அவையெல்லாம் பராமரிக்கப்படாமல் துர்நாற்றம் வீசியது. மேலும் 10 கிலோ கெட்டு போன இறால், அழுகிய 45 கிலோ மீன், சிக்கன், மட்டன் உள்ளிட்ட உணவு பொருட்களை அதிகாரி சதீஷ் குமார் ஆய்வுக்கு அனுப்பி வைத்துள்ளார். மேலும் இது போன்ற அழுகிய உணவை நீ சாப்பிடுவியா என சமையல் மாஸ்டரிடம் கடிந்து கொண்டார்.

    ஹோட்டலுக்கு சீல்

    ஹோட்டலுக்கு சீல்

    இதையடுத்து அந்த உணவகத்திற்கு 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து உணவு பதப்படுத்தும் இடங்களை பராமரிக்கவும் எல்லாவற்றையும் மீண்டும் சுத்தம் செயது, அதிகாரிகள் ஆய்வு செய்த பின்னரே உணவகம் செயல்பட வேண்டும். அது வரை ஹோட்டலை திறக்க கூடாது என சதீஷ் குமார் உத்தரவிட்டார். அந்த ஹோட்டலுக்கு சீலும் வைக்கப்பட்டது.

    English summary
    Chennai Annanagar Hotel Rosewater was sealed by food safety officials for possessing 45 kg of rotten meat. This hotel was given review by You tuber Irfan.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X