ஐயோ.. மனம் கவர்ந்த மதன் "இவரா.." அதிர்ந்து போன ரசிகைகள்.. பயங்கர வித்தியாசம் இருக்குதே, என்னாச்சு?
சென்னை: பாலியல் ஆபாச பேச்சுக்கள் மூலம் பல கோடி சம்பாதித்த பப்ஜி மதன் கைது செய்யப்பட்டுள்ளார். ஆனால் மனிதனை பார்க்க, ஆளே மாறிப்போய், அவரா இவர் என நினைக்கும் அளவுக்கு பரிதாபமாக காட்சியளிக்கிறார்.
Recommended Video
ஆன்லைனில் புலி மாதிரி வாய் சவடால் பேசிய மதனா இப்போது எலி மாதிரி பம்மிக் கொண்டு இருக்கிறார் என்று ஆச்சரியப்படுகிறார்கள் மக்கள். அது மட்டுமல்ல, அவர் தன்னை அறிமுகம் செய்ய வைத்திருந்த போட்டோவுக்கும், கைதான மதன் போட்டோவுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது.

ஆபாச பேச்சு
பப்ஜி விளையாட்டுக்கு டிப்ஸ் கொடுப்பதாகக் கூறிக் கொண்டு, மதன், ஆபாசமாக பேசி வந்தது அம்பலத்திற்கு வந்தது முதல் அதிர்ந்து கிடக்கிறது தமிழ்நாடு. பப்ஜி விளையாட்டுக்கு டிப்ஸ் தருவதாக கூறிக் கொண்டு யூடியூப் ஆப் மூலம், மிக மோசமான கெட்ட வார்த்தைகளில் பெண்களை திட்டுவார். காது கொடுத்துக் கேட்க முடியாத அளவுக்கு மோசமான வார்த்தைகள் பேசுபவர்.

மனைவி பங்கு
இந்த வீடியோவில் பெண்களும் ஆபசமாக பேசுவது வழக்கம். அதில் ஒரு பெண் மனைவி கிருத்திகாவின் குரல். எனவே அவரை நேற்று முன்தினம் சேலத்தில் காவல்துறை கைது செய்தனர். மதன் தனது வீடியோவை பிரபலம் செய்யச் சிலருக்குக் காசு கொடுத்து வீடியோ வெளியிட வைத்துள்ளார். அந்த தோழிகளை தேடி வருகிறார்கள்.

ஆணழகன் மாதிரி பில்ட்அப்
மதன் இன்ஸ்டாகிராம் மூலம், இளம் பெண்கள், சிறுமிகளிடம் பணம் பறித்துள்ளார். தன்னை ஆணழகன் போல புகைப்படத்தில் காட்டிக் கொள்வது மதன் வழக்கம். ஆடி கார் முன்பாக நின்ற படத்தை வெளியிட்டும் மயக்கியுள்ளார். அதில் கூலிங் கிளாஸ் போட்டு, ஜிம் பாடி மாதிரி தோற்றத்தில் இருந்தார் மதன். ஆனால் இதெல்லாம் போட்டோ ஷாப் மூலம் செய்யப்பட்டதா என்ற சந்தேகம் இப்போது எழுந்துள்ளது.

மதன் போட்டோ
தருமபுரி அருகே மதன் கைது செய்யப்பட்டாரல்லவா. பிறகு, அவரது படம் வெளியானது. அதில் பார்க்க 10 நாள் தூங்காதவர் முகம் மாதிரி தோற்றத்தில் உள்ளார் மதன். உடம்பு பெருத்துப் போயுள்ளது. ஜிம் சென்ற உடம்பு என்றால் நெஞ்சு பகுதி வலிமையாக இருக்கும். ஆனால் இவருக்கு உடல் மிகவும் தளர்வாக காணப்படுகிறது.

ஆன்லைனை பார்த்து நம்பினால்
ஆன்லைனில் வேறு மாதிரியும், நிஜத்தில் மிக மோசமான தோற்றத்திலும் இருக்கிறார் மதன். ஆன்லைனில் பழக்கமாகிறவர்களை நம்பக் கூடாது. அவர்கள் குணம் மட்டுமல்ல, முகம் கூட வேறு மாதிரிதான் இருக்கும் என்பதற்கு மதன் ஒரு நல்ல உதாரணம். இப்படி சேஞ்ச் ஓவர் ஆகியிருப்பதை பார்த்து நெட்டிசன்கள் அவர் போட்டோக்களை வைத்து மீம்ஸ் போட ஆரம்பித்துவிட்டனர்.

இப்படித்தான் ஜிம்முக்கு போயிட்டு
ஜிம்முக்கு போகும்போது இப்படித்தான் ஆக வேண்டும் என்று நினைப்போம். ஜிம் போய் 1 மாசமாகியிருக்கும். ஆனால் நாம் 2வது போட்டோவில் இருப்பதை போலத்தான் இருப்போம். இப்படித்தான் மதன் இருக்கிறார் என்று கிண்டல் செய்கிறார் இந்த நெட்டிசன்.

நினைப்பது வேறு
நாமளும் இப்படித்தான் உடம்பு இருக்கனும்னு ஆசைப்படுவோம். ஆனால் ரியாலிட்டி அடுத்த போட்டோ மாதிரிதான் வருகிறது என்று கிண்டல் செய்கிறார் இந்த நெட்டிசன்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications