கொச்சி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பரிதாபத்தில் பாஜக... திருச்சூர் மாநகராட்சியில் ... மாநில பாஜக செய்தி தொடர்பாளர் தோல்வி!

Google Oneindia Tamil News

கொச்சி: கேரளா உள்ளாட்சி தேர்தலில் திருச்சூர் மேயர் பதவிக்கு போட்டியிட்ட அந்த மாநில பாஜக செய்தி தொடர்பாளர் பாலகிருஷ்ணன் தோல்வி அடைந்தார்.

கேரளா உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் இடது சாரி கூட்டணி கட்சிகள் முன்னணியில் உள்ளன. காங்கிரஸ் கூட்டணியும் அதற்கு போட்டி கொடுத்து வருகிறது.

BJP leader B Gopalakrishnan defeated in Thrissur

கேரளாவில் மூன்று கட்டமாக உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்தது. அதில் பதிவான வாக்குகள் என்னும் பணி தற்போது நடந்து வருகிறது. மாநகராட்சி, ஊராட்சி என அனைத்து இடங்களிலும் ஆளும் இடது சாரி கூட்டணி முன்னணி வகிக்கிறது. காங்கிரஸ் கூட்டணியும் நிறைய இடங்கள் பிடித்து அதற்கு டப் கொடுத்து வருகிறது.

ஆனால் பாஜக நிலைமைதான் மிகவும் பரிதாபமாக உள்ளது. அந்த கட்சி அனைத்து இடங்களிலும் பின்தங்கியே உள்ளது. திருச்சூர் மாநகராட்சியில் பாஜக 6 வார்டுகளில் மட்டும் முன்னிலையில் உள்ளது. டிஎப் (13) மற்றும் எல்.டி.எப் (16) இடங்களை முன்னிலையில் உளள்து.

கொச்சி மாநகராட்சி காங்கிரஸ் மேயர் வேட்பாளர் வேணுகோபால், பாஜக வேட்பாளரிடம் ஒரு ஓட்டில் தோல்வி கொச்சி மாநகராட்சி காங்கிரஸ் மேயர் வேட்பாளர் வேணுகோபால், பாஜக வேட்பாளரிடம் ஒரு ஓட்டில் தோல்வி

பாஜகவின் மாநில செய்தி தொடர்பாளர் பி.பாலகிருஷ்ணன் திருச்சூரின் குஜராத் என அழைக்கப்படும் குட்டங்குலங்கரா வார்டில் மேயர் பதவிக்கு போட்டியிட்டார். ஆனால் அவர் படுதோல்வி அடைந்துள்ளார்.பி. பாலகிருஷ்ணன், யுடிஎப் வேட்பாளர் ஏ.கே சுரேஷுடம் 200 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். இதே போல் பல இடங்களிலும் பாஜக நிலைமை பரிதாபமாக உள்ளது.

English summary
Balakrishnan, the state BJP spokesperson who contested for the post of mayor of Thrissur in the Kerala local body elections, lost
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X