100க்கு 100... பிளஸ் 2, எஸ்எஸ்எல்சி தேர்வில் அனைவரும் தேர்ச்சி... கோவை மத்திய சிறை கைதிகள் அசத்தல்
கோவை: கோவை மத்திய சிறையில் 12 மற்றும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய அனைவரும் தேர்ச்சி அடைந்துள்ளனர். இதன்மூலம் கோவை மத்திய சிறையில் தேர்வு எழுதிய கைதிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தமிழகத்தில் 12 மற்றும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று ஒரேநாளில் வெளியிடப்பட்டுள்ளன. 12ம் வகுப்பில் 93.76 சதவீத மாணவர்களுகம், 10ம் வகுப்பில் 94.07 சதவீத மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இந்த பொதுத்தேர்வை தமிழகத்தில் உள்ள பல்வேறு சிறை கைதிகளும் எழுதி இருந்தனர்கள். இதில் கோவை மத்திய சிறை கைதிகள் சாதனை படைத்துள்ளனர். அதன் விபரம் வருமாறு:

தேர்வெழுதிய சிறை கைதிகள்
கோவை மத்திய சிறையில் இருந்து 12ம் வகுப்பு பொதுத்தேர்வை 20 கைதிகளும், 10ம் வகுப்பு பொதுத்தேர்வை 33 கைதிகளும் எழுதினர். இன்று தேர்வு முடிவுகள் வெளியாகின. இதனால் தேர்வு முடிவை அறிந்து கொள்வதில் மாணவர்களை போல் கைதிகளுக்கும் ஆவலாக இருந்தனர். இதையடுத்து சிறை நிர்வாகம் கைதிகளுக்கான தேர்வு முடிவை பார்த்து கூறியது.

100 சதவீத தேர்ச்சி
அதன்படி சிறையில் 12ம் வகுப்பு தேர்வு எழுதிய 20 கைதிகளும், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய 33 கைதிகள் என மொத்தம் 53 பேரும் தேர்ச்சி அடைந்திருந்தனர். இதுபற்றி சிறை நிர்வாகம் சார்பில், ‛‛தேர்வு எழுதிய அனைவரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மதுரை மத்திய சிறை 100 சதவீத தேர்ச்சியை பெற்றுள்ளது'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் தேர்ச்சி எவ்வளவு?
மேலும் கோவை மாவட்டத்தில் கோவை மாநகர், பொள்ளாச்சி, எஸ் எஸ் குளம், பேரூர் ஆகிய நான்கு கல்வி மாவட்டங்கள் உள்ளது. இந்த கல்வி மாவட்டங்களில் எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வை 524 பள்ளிகளை சேர்ந்த 19 ஆயிரத்து 827 மாணவர்கள், 19 ஆயிரத்து 804 மாணவிகள் என மொத்தம் 39 ஆயிரத்து 636 பேர் எழுதினர். இதில் 17 ஆயிரத்து 584 மாணவர்களும் 19 ஆயிரத்து 27 மாணவிகளும் என மொத்தம் 36 ஆயிரத்து 661 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

9 வது இடத்தில் கோவை
மாவட்டத்தில் மாணவர்கள் தேர்ச்சி விகிதம் 88.69 மாணவிகள் தேர்ச்சி வீதம் 92.38 ஆக உள்ளது. மொத்தமாக மாவட்டத்தில் தேர்ச்சி விகிதம் 92.38. கடந்த 2019ஆம் ஆண்டு நடந்த எஸ்எஸ்எல்சி பொதுத் தேர்வில் கோவை மாவட்டம் 14வது இடத்தில் இருந்தது இந்த ஆண்டு பொதுத் தேர்வு முடிவில் கோவை மாவட்டம் 9வது இடத்திற்கு முன்னேறியுள்ளது குறிப்பிட்டத்தக்கது.
-
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications