புதரில் இளம்பெண்.. எப்போது கூப்பிட்டாலும் வரணும்.. 2019ல் கோவையை அதிர வைத்த மணிகண்டன் கும்பல்!
கோவை: காதலனை தாக்கிவிட்டு.. இளம்பெண்ணை புதருக்குள் தூக்கி சென்று ஆடைகளை அகற்றி.. சீரழித்து வீடியோ எடுத்ததுடன், "எப்போது கூப்பிட்டாலும் வரணும்" என்று மிரட்டிய மணிகண்டன் கும்பல் 2019ல் கோவையை பதற வைத்து விட்டது.
கோவை சீரநாயக்கன் பாளையத்தில் சிறுவர் பூங்கா உள்ளது.. இங்கு ஒரு காதல் ஜோடி போன 26ஆம் தேதி வந்துள்ளது. காதலி 11-ம் வகுப்பு படிக்கும் சிறுமி ஆவார்.. அன்று அவளுக்கு பிறந்த நாள்.. அதனால் தனிமையில் பேச பள்ளி முடிந்து மாலை இருட்டும் நேரம் பார்க்கிற்கு வந்துள்ளனர்.
அப்போது அங்கு திடீரென வந்த 6 இளைஞர்கள், காதலனை தாக்கிவிட்டு அந்த சிறுமியை பார்க்குக்கு பின்பக்கம் புதர் போல இருந்த ஒரு காட்டுப்பகுதிக்கு இழுத்து சென்றுள்ளனர். அங்கு அந்த பெண்ணின் ஆடைகளை மிரட்டி கழட்டி வீடியோ எடுத்ததுடன், அந்த பெண்ணையும் சீரழித்துள்ளனர்.

வீடியோ
இந்த 6 பேரில் மணிகண்டன் என்பவன்தான் முதலில் வன்கொடுமை செய்துள்ளான். ஒருவர் சிறுமியை சீரழிக்க, இன்னொருவர் வீடியோ எடுக்க, மற்றவர்கள் யாராவது வருகிறார்களா என காவல் காக்க.. என்று படுபாதக செயல் அரங்கேறியது. அது மட்டுமல்ல.. வீட்டுக்கு அனுப்பி வைக்கும்போது, "எங்களிடம் வீடியோ இருக்கு.. எப்ப கூப்பிட்டாலும் வரணும்" என்று சொல்லிதான் இவர்கள் அனுப்பி உள்ளனர்.

விசாரணை
இறுதியில் அந்த பெண் உருக்குலைந்த நிலையில் தன் வீட்டிற்கு சென்று பெற்றோரிடம் சொல்லி கதற, அதிர்ந்த பெற்றோர், உடனடியாக ஆர்எஸ்புரம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்யவும், கார்த்தி, மணிகண்டன், ராகுல், பிரகாஷ், கார்த்திகேயன், நாராயண மூர்த்தி ஆகியோரை போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

பலாத்காரம்
முக்கிய குற்றவாளியான மணிகண்டன் சில தினங்களுக்கு முன்பு கோவை மகளிர் கோர்ட்டில் சரணடைந்தான். இதையடுத்து, குற்றவாளிகள் இந்த 6 பேர் மீதும் போக்சோ சட்டம், கொலை மிரட்டல், பலாத்காரம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும், இவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சொல்லப்பட்டது.

மணிகண்டன் & கோ
இந்த சம்பவத்தில் இன்னொரு குற்றவாளியான மணிகண்டன் என்பவருக்கும் தொடர்பு உள்ளது தெரிய வந்துள்ளதையடுத்து, அந்த மணிகண்டனையும் போலீசார் கைது செய்தனர். இந்த 6 பேரில், மணிகண்டன், பப்ஸ் கார்த்தி, ராகுல் உள்ளிட்ட 3 பேரை குண்டர் சட்டத்தில் கைது செய்வதற்கு அனைத்து மகளிர் போலீசார், மாநகர போலீஸ் கமிஷனர் சுமித் சரணுக்கு பரிந்துரை செய்திருந்தனர்.

நடவடிக்கை
இதனையடுத்து, இந்த 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்வதற்கான உத்தரவு நகல், கோவை சிறைக்கு அனுப்பப்பட்டுள்ளது... எனினும் இதில் தொடர்புடைய மற்ற 3 பேர் மீதும் குண்டர் சட்டம் பாய்வதற்கான நடவடிக்கையை போலீசார் எடுத்து வருகின்றனர். கோவையை இந்த ஆண்டு பதற வைத்த அதிர்ச்சி சம்பவங்களில் இதுவும் முக்கியமானது.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications