கோயம்புத்தூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மேட்டுப்பாளையத்தில் சுவர் இடிந்த விபத்தில் 17 பேரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலி

Google Oneindia Tamil News

Recommended Video

    17 பேரை பலிவாங்கிய கருங்கல் சுற்றுச்சுவரை நீக்க மக்கள் கோரிக்கை

    கோவை: கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் சுவர் இடிந்த விபத்தில் 17 பேரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் கிழக்கு திசை காற்றால் தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்து வந்தது. இந்த நிலையில் மேட்டுப்பாளையத்தில் பேய் மழை பெய்தது.

    இந்த நிலையில் நடூர் பகுதியில் கண்ணப்பன் லே அவுட் பகுதியைச் சேர்ந்தவர் சிவசுப்பிரமணியன். இவர் இவரது வீட்டை சுற்றிலும் கருங்கற்களால் ஆன 20 அடி உயர காம்பவுண்ட் சுவரை கட்டியுள்ளார்.

    17 பேரை பலிவாங்கிய 20 அடி கருங்கல் சுற்றுச்சுவர்.. முழுமையாக நீக்க மக்கள் கோரிக்கை17 பேரை பலிவாங்கிய 20 அடி கருங்கல் சுற்றுச்சுவர்.. முழுமையாக நீக்க மக்கள் கோரிக்கை

    17 பேர்

    17 பேர்

    இந்த சுவரில் மழை நீர் தேங்கியதால் இதன் ஒரு பகுதி இடிந்து அருகில் உள்ள 4 வீடுகளின் மீது விழுந்தது. இந்த விபத்தில் வீடுகளில் தூங்கிக் கொண்டிருந்த 17 பேர் மண்ணில் புதைந்து உயிரிழந்தனர்.

    4 பேர்

    4 பேர்

    அவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் 17 பேரில் 4 பேர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர் என கூறப்படுகிறது.

    4 பேர் பலி

    4 பேர் பலி

    அதில் நதியா (30), அவரது மகள் அட்சயா (7), மகன் லோகுராம் (7), உறவினர் ஆனந்தகுமார் (46) ஆகிய 4 பேர் இறந்தனர். இந்த விபத்தில் பலியான 17 பேருக்கும் தலா ரூ 4 லட்சம் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.

    நடூர் செல்லும் முதல்வர்

    நடூர் செல்லும் முதல்வர்

    அத்துடன் நாளை விபத்து நடந்த இடத்தை பார்வையிட முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நடூர் செல்கிறார். இதனிடையே வீட்டு உரிமையாளர் சிவசுப்பிரமணியன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    English summary
    4 members from same family died in Mettupalayam compound wall collapsed accident.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X