சொத்து வரி.. கோவை மக்களுக்கு குட் நியூஸ்.. சனி, ஞாயிறை மறந்துடாதீங்க
கோவை: கோவையில் சொத்து வரி, காலியிட வரி, தொழில் வரி உள்ளிட்ட வரிகளை செலுத்தும் வகையில், சிறப்பு முகாம் நாளை (சனிக்கிழமை), நாளை மறுநாள் (ஞாயிறு) ஆகிய நாட்களில் நடைபெற உள்ளதாக மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் தெரிவித்துள்ளார்.
கோவை மாநகராட்சி சார்பில் சொத்து வரி, காலியிட வரி, தொழில் வரி, குடிநீர் கட்டணம் மற்றும் வரியில்லா இனங்கள் அவ்வப்போது சிறப்பு முகாம் அமைத்து வசூலிக்கப்படுகின்றன. இதில், சொத்து வரி ஆறு மாதத்துக்கு ஒருமுறையும், குடிநீர் கட்டணம் இரு மாதத்துக்கு ஒருமுறையும் வசூலிக்கப்படுகிறது.

கோயம்புத்தூர் மாநகராட்சியின் கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு மற்றும் மத்தியம் என ஐந்து மண்டலங்களுக்கு உட்பட்ட வரிவசூல் மையங்கள் மற்றும் சிறப்பு வரிவசூல் முகாம்களில் அக்டோபர் 5, 6 ஆம் தேதிகளில் காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை செயல்படும் என மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன் தெரிவித்துள்ளார்.
கோவை மாநகராட்சி ஆணையர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது: கோயம்புத்தூர் மாநகராட்சியில் நடப்பு 2024-25 ஆம் நிதியாண்டின் இரண்டாம் அரையாண்டு வரையிலான கோயம்புத்தூர் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி, காலியிட வரி, தொழில் வரி மற்றும் குடிநீர் கட்டணம் முதலிய அனைத்து வரியினங்களை பொதுமக்கள் செலுத்துவதற்கு ஏதுவாக சிறப்பு வரிவசூல் முகாம் அனைத்து சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் (அரசு விடுமுறை நாட்கள் நீங்கலாக) வரிவசூல் பணி நடைபெறும்.
மேலும், அனைத்து மண்டல வரிவசூல் மையங்கள் மற்றும் சிறப்பு வரிவசூல் முகாம்களில் அக்டோபர் 5, 6 ஆம் தேதிகளில் காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை செயல்படும். அதன்படி, இந்த சிறப்பு வரிவசூல் முகாம்கள் நடைபெறும் இடங்களான கிழக்கு மண்டலத்தில், வார்டு எண்.24க்கு உட்பட்ட குருசாமி நகர், வார்டு எண். 53 க்கு உட்பட்ட காந்தி நகர், சுகாதார ஆய்வாளர் அலுவலகம், வார்டு எண். 7க்கு உட்பட்ட நேரு நகர், பேருந்து நிலையத்திலும் முகாம் நடக்கிறது.
மேற்கு மண்டலத்தில் அக்டோபர் 5 ஆம் தேதி (சனிக்கிழமை) அன்று வார்டு எண்.36க்கு உட்பட்ட ரவி முருகன் அபார்ட்மெண்ட், வார்டு எண்.39க்கு உட்பட்ட பெருமாள் கோவில் வீதி, சுண்டப்பாளையம் பகுதியிலும், அக்டோபர் 6 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) அன்று வார்டு எண்.42க்கு உட்பட்ட மருதகோனார் வீதியில், வார்டு எண்.75க்கு உட்பட்ட மாரியம்மன் கோவில் வீதி, சீரநாயக்கன்பாளையம் பகுதியில், வார்டு எண்.35க்கு உட்பட்ட தேவாங்க நகர், கற்பக விநாயகர் கோவில் பகுதியில், வார்டு எண்.38க்கு உட்பட்ட ஓணாப்பாளையம். விநாயகர் கோவிலில் முகாம் நடக்கிறது.
வடக்கு மண்டலத்தில், வார்டு எண்.19க்கு உட்பட்ட மணியகாரம்பாளையம், அம்மா உணவகம், வார்டு எண்.28க்கு உட்பட்ட காமதேனு நகர், சுகாதார ஆய்வாளர் அலுவலகம், தெற்கு மண்டலத்தில், வார்டு எண்.85க்கு உட்பட்ட கோனவாய்க்கால்பாளையம், மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, வார்டு எண்.97க்கு உட்பட்ட கம்பீர விநாயகர் கோவில் மண்டபம், ஹவுசிங்யூனிட் பேஸ்-1, வார்டு எண்.89க்கு உட்பட்ட கண்டக்காமுத்தூர், சுகாதார ஆய்வாளர் அலுவலகத்தில் மற்றும் மத்திய மண்டலம் ஆகிய இடங்களில் முகாம் நடக்கிறது.
அதேபோல, வார்டு எண்.32க்கு உட்பட்ட நாராயணசாமி லே-அவுட், சிறுவர் பூங்கா, வார்டு எண். 70க்கு உட்பட்ட எம்.என்.ஜி.வீதி மாநகராட்சி நடுநிலைப் பள்ளி, வார்டு எண்.63க்கு உட்பட்ட 80 அடி சாலை, பெருமாள் கோவில் வீதி மாநகராட்சி வணிக வளாகம், வார்டு எண்.80க்கு உட்பட்ட கெம்பட்டி காலனி மாநகராட்சி உயர்நிலைப் பள்ளி ஆகிய இடங்களில் சிறப்பு வரிவசூல் முகாம்கள் நடைபெறும்.
மேலும், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை (அரசு விடுமுறை நாட்கள் நீங்கலாக) உட்பட அனைத்து நாட்களிலும், வரிவசூல் மையங்கள் வழக்கம்போல் காலை 9 மணி முதல் மாலை 4.00 மணி வரை செயல்படும். எனவே, பொதுமக்கள் இந்த வசதியைப் பயன்படுத்தி மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரியினங்களை செலுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications