கோவை தனது 17 வயது மகளை பலாத்காரத்திற்குப் பலி கொடுத்த தருணத்தில் இந்த விழா தேவையா?ஜெயக்குமார் கோபம்
கோவை : கோவை மாவட்டம் தனது 17 வயது மகளைப் பள்ளி மாணவியைப் பாலியல் பலாத்காரத்திற்குப் பலி கொடுத்து விட்டு துக்க வீடாகத் துயரும் இந்தத் தருணத்தில் நாளைய தினம் இந்த மாவட்டத்தில் குழந்தைகள் தின விழா நடத்துவது முறை தானா ? திமுக அரசின் இந்தச் செயல் வெந்த புண்ணில் வேல் பாய்சுவதைப் போல உள்ளது என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.
கோவை மாவட்டம் சர்க்கார் சாமக்குளம் ஒன்றியம் ஷாஜகான் நகரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நாளை குழந்தைகள் தினவிழா நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
இந்நிகழ்ச்சியில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பங்கேற்கிறார்கள். இதேபோல் கோவை தொகுதி எம்பி நடராஜன், கவுண்டம்பாளையம் தொகுதி எம்எல்எ அருண்குமார் (அதிமுக) ஆகியோரும் பங்கேற்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளை நடக்கிறது
இதேபோல் கோவை மாவட்ட ஆட்சி தலைவர் சமீரன், கோவை மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுங்கரா, கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கீதா, தொடக்க கல்வி அலுவலர் அறிவொளி உள்பட பல்வேறு அதிகாரிகள் பங்கேற்கிறார்கள். இந்த விழா ஞாயிறு காலை 8.30 மணிக்கு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

துக்க வீடு
இந்த விழா அழைப்பிதழை பதிவிட்டு அதற்கு மேல் தனது கருத்தை பதிவிட்டுள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், கோவை மாவட்டம் தனது 17 வயது மகளைப் பள்ளி மாணவியைப் பாலியல் பலாத்காரத்திற்குப் பலி கொடுத்து விட்டு துக்க வீடாகத் துயரும் இந்தத் தருணத்தில் நாளைய தினம் இந்த மாவட்டத்தில் குழந்தைகள் தின விழா நடத்துவது முறை தானா ? திமுக அரசின் இந்தச் செயல் வெந்த புண்ணில் வேல் பாய்சுவதைப் போல உள்ளது என்று கூறியுள்ளார்.

ராமதாஸ் சீமான்
முன்னதாக கோவை மாணவி மரண விவகாரத்தில் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்பட பல்வேறு அரசியல் கட்சியினர் வலியுறுத்தி உள்ளனர். இதேபோல் மாணவர்கள் அமைப்பினரும் தொடர் போராட்டம் நடத்தி வந்தனர். இதையடுத்து பள்ளி ஆசிரியர் மிதுன் கைது செய்யப்பட்ட நிலையில், பள்ளியின் முதல்வரை பிடிக்க போலீசார் இரண்டு தனிப்படை அமைத்துள்ளனர்.

குற்றவாளிகள் கைது
இந்த விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவித்த முதல்வர் ஸ்டாலின், கோவை மாணவியின் மரணம் மனதை வருந்தச் செய்துள்ளது. சில மனித மிருகங்களின் வக்கிரமும் வன்மமும் ஒரு உயிரைப் பறித்துள்ளது. பாலியல் வன்செயல்கள் நடக்காமல் பள்ளி நிர்வாகங்கள் உறுதி செய்ய வேண்டும். குற்றவாளிகளைக் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துவோம்; பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வோம்! என்று கூறினார்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications