கோவை அருகே.. பதுங்கி, பதுங்கி டிமிக்கி கொடுக்கும் பாகுபலி.. திணறும் வனத்துறை!
கோவை: வனத்துறையினருக்கு தொடர்ந்து டிமிக்கி கொடுத்து தினம் தினம் ஓரிடத்திற்கு, நகர்ந்துகொண்டிருக்கிறது பாகுபலி யானை.
யானை தொடர்ந்து காட்டினுள் முன்னேறி செல்வதால் மயக்க ஊசி போட முடியவில்லை. இருப்பினும், தொடர்ந்து யானையின் நடமாட்டத்தை கண்காணித்து வரும் வனக்குழு.
கோவை மாவட்டத்தில்தான் பாகுபலி இப்படி பயங்கர கலாட்டா செய்து வருகிறதாம்.

மேட்டுப்பாளையத்தில் யானை
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் விவசாய பயிர்களை சேதப்படுத்தி வந்தது ஒரு காட்டு யானை. தகவல் கிடைத்து வந்த வனத்துறையினர் நடத்திய விசாரணையில், அது பாகுபலி ஆண் யானை செய்யும் வேலை என்று தெரியவந்தது. எனவே அதை பிடிக்கும் பணி இன்று காலை துவங்கியது.

வனத்துறை குழு
50 வனத்துறை அதிகாரிகள் 7 குழுக்களாக பிரிந்து யானையை தேடி வந்த நிலையில் இன்று காலை பாகுபலி யானை வேடர் காலனி வனப்பகுதியில் இருந்தது தெரியவந்தது.

காட்டுக்குள் சென்ற யானை
இதனையடுத்து வனத்துறை கால்நடை மருத்துவர் சுகுமார் தலைமையிலான மருத்துவ குழு காட்டினுள் மயக்க ஊசி செலுத்த சென்ற நிலையில் யானை சுதாரித்து தொடர்ந்து கட்டினுள் முன்னேறிச் சென்றது. இதனால் யானைக்கு மயக்க ஊசி செலுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் பாகுபலி யானையை பிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

காலர் ஐடி பொருத்தும் பணி
இதுகுறித்து, கோவை மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் அளித்த பேட்டியில், கடந்த மூன்று நாட்களாக யானை காட்டை விட்டு வெளிவரவில்லை
சமதள பரப்பிற்கு வரும்போது மட்டுமே காலர் ஐடி பொருத்தமுடியும். சாலையில் இருந்து மூன்று கிலோ மீட்டர் தொலைவில் உள்ள காட்டில் பாகுபலி யானை தற்போது உள்ளது. யானை நல்ல ஆரோக்கியத்துடன் உள்ளது.

யானை உணர் திறன்
யானையின் நடமாட்டம் மற்றும் அதன் செயல்பாடுகளைக் கண்கானிக்கவே இந்த காலர் ஐடி பொருத்தப்படுகிறது. இந்த யானைக்கும் உணரும்திறன் அதிகமாக இருப்பதால் அது வெளியில் வரத் தயங்குகிறது. தொடர்ந்து யானையின் நடமாட்டத்தைக் காண்கானிக்கும் பணி தொடரும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications