கோவையில் ஒரு “புடி”.. 65 கிலோ “பீஃப்” பிரியாணி! 40 நிமிடத்தில் காலி - பெரியார் பிறந்தநாள் விருந்து
கோவை: தந்தை பெரியாரின் பிறந்தநாளை முன்னிட்டு கோவையில் 65 கிலோ மாட்டுக்கறி பிரியாணியை விருந்ந்தாக வழங்கி பெரியாரிய உணர்வாளர்கள் கொண்டாடி இருக்கிறார்கள்.
திராவிடர் கழக நிறுவனரும், சமூக நீதி போராளியுமான தந்தை பெரியாரின் 144 வது பிறந்தநாள் இன்று தமிழ்நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. பலரும் பெரியார் பிறந்தநாளை முன்னிட்டு அவரை நினைவுகூர்ந்து வருகிறார்கள்.
கடந்த ஆண்டு தமிழ்நாட்டில் ஆட்சிப்பொறுப்பேற்ற திமுக, தந்தை பெரியார் பிறந்தநாளான செப்டம்பர் 17 ஆம் தேதி சமூகநீதி நாளாக கொண்டாடப்படும் என்று அறிவித்தார்.

திமுக மரியாதை
அந்த வகையில் சென்னை அண்ணா சாலை சிம்சன் பகுதியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெரியார் சிலைக்கு மரியாதை செலுத்தினார். அவருடன் திமுக மூத்த நிர்வாகிகளும் கலந்துகொண்டு மலர்தூவி பெரியார் சிலைக்கு மரியாதை செலுத்தி சமூக நீதி உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர்.

ஸ்டாலின் வாழ்த்து
இதுகுறித்து மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், "பிறப்பால் பேதம் கற்பித்து, தீண்டாமை நிலவிய சமூகத்தில், புரட்டுகளுக்குள் புதைந்துகிடந்த அழுக்குகளை அம்பலப்படுத்தி, இந்த மண்ணில் வாழும் பெரும்பான்மையான மக்களும் சுயமரியாதையோடு வாழ்ந்திடும் வரலாற்றைப் படைத்த புரட்சியாளர் தந்தை பெரியார் வழிநடப்போம்! தமிழர் இனமானம் காப்போம்." என்றார்.

கோவை விருந்து
இந்த நிலையில் கோவையில் பெரியார் பிறந்தநாளை முன்னிட்டு பெரியார் படிப்பகத்தில் சிறப்பு விருந்து நடைபெற்றது. இதில் தந்தை பெரியார் திராவிடர் கழக தலைவர் கோவை கு.ராமகிருட்டிணன் மற்றும் பெரியரிய அமைப்பு தலைவர்கள், பெரியாரிய உணவாளர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

மாட்டிறைச்சி பிரியாணி
இந்த விருந்துக்காக 65 கிலோ மாட்டிறைச்சி பிரியாணி மற்றும் 10 கிலோ கோழி குழம்பு தயாரிக்கப்பட்டு உள்ளது. ஆனால், இதற்காக அங்கு கூடிய கூட்டத்தால் உடனக்குடன் பிரியாணி குறையத் தொடங்கியது. சுமார் 40 நிமிடத்தில் 65 கிலோ பிரியாணி காலியாகிவிட்டதாக இதன் ஏற்பட்டாளர்கள் தெரிவித்து இருக்கிறார்கள்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications