கோயம்புத்தூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஆன்மீக பக்தர்களே குட் நியூஸ்..கோவையில் இருந்து ஷீரடிக்கு தனியார் ரயில்.. ராமாயண சுற்றுலாவும் உண்டு

இந்திய ரயில்வே துறையின் பாரத் கவுரவ் திட்டத்தின் முதல் தனியார் ரயில் தமிழகத்தின் கோவையிலிருந்து தனது முதல் சேவையை வரும் 14ம் தேதி தொடங்குகிறது.

Google Oneindia Tamil News

கோவை: இந்திய ரயில்வே துறையின் பாரத் கவுரவ் திட்டத்தின் முதல் தனியார் ரயில் தமிழகத்தின் கோவையிலிருந்து தனது முதல் சேவையை வரும் 14ம் தேதி தொடங்குகிறது. இதே போல டெல்லியில் இருந்து நேபாள நாட்டிற்கும் தனியார் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.

Recommended Video

    June 16 | காலை முக்கியச்செய்திகள் | Oneindia Tamil

    தெற்கு ரயில்வே வெளியிட்ட கால அட்டவணையில் , கோவை - ஷீரடி சிறப்பு ரயில் வரும் ஜூன் 14 அன்று கோவையிலிருந்து மகாராஷ்டிரா மாநிலம் சாய்நகர் ஷீரடி வரை செல்கிறது. இது முழுக்க முழுக்க தனியார் சார்பில் இயக்கப்படுகிறது.

    கோவையிலிருந்து 14ஆம் தேதி மாலை 6 மணிக்கு புறப்படும் இந்த ரயில், திருப்பூருக்கு 7 மணி ஈரோடு 8 மணி, சேலம் 9.15, (15.6.2022) அன்று ஜோலார்பேட்டை இரவு 00.10, எலகங்கா அதிகாலை 5 மணிக்கும், தர்மாவரம் 6.20, மந்த்ராலயம் ரோடு 11.00 மணிக்கும், மாலை 4.00 மணிக்கு மந்த்ரா ரோட்டிலிருந்து புறப்பட்டு வாடி இரவு 7.15க்கும், 16ஆம் தேதியன்று அன்று காலை 7.25க்கு சாய்நகர் ஷீரடியை சென்றடையும்.

    வைகாசி விசாகம்: மதுரையில் இருந்து பழனிக்கு சிறப்பு ரயில் - எங்கெங்கு நிற்கும் தெரியுமா? வைகாசி விசாகம்: மதுரையில் இருந்து பழனிக்கு சிறப்பு ரயில் - எங்கெங்கு நிற்கும் தெரியுமா?

     ஷீரடி - கோவை

    ஷீரடி - கோவை

    அதேபோல் மறுநாள் 17.6.2022 அன்று காலை 7.25க்கு சாய்நகர் ஷீரடியிலிருந்து புறப்பட்டு வாடி ரயில் நிலையத்திற்கு மாலை 4.30 க்கும், தர்மாவரத்திற்கு இரவு 11.10க்கும், எலங்காவிற்கு 18.6.2022 காலை 2.10க்கும், ஜோலார்பேட்டைக்கு காலை 5.55க்கும், சேலம் 7.30க்கும், ஈரோடு 8.30க்கும், திருப்பூர் 10.25க்கும், கோவைக்கு நண்பகல் 12.00 மணிக்கு வந்து சேரும் என தெற்கு ரயில்வே தலைமை அலுவலக கால அட்டவணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ராமாயண யாத்ரா

    ராமாயண யாத்ரா

    மற்றொரு தனியார் ரயில் வரும் ஜூன் 21ம் தேதி டெல்லியிலிருந்து புறப்பட்டு நேபாளம் நாட்டில் நுழைந்து 12 முக்கிய ராமர் ஸ்தலங்களில் பயணிக்கிறது. ராமாயண யாத்ரா சர்க்யூட்டின் ஒரு பகுதியாக இந்த ரயில் நேபாளத்திற்கு செல்லும் என்று இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன் (IRCTC) அறிவித்துள்ளது. இந்த ஐஆர்சிடிசியின் 'பாரத் கவுரவ்' ரயில், இந்தியாவிலிருந்து சர்வதேச எல்லையைக் கடந்து அண்டை நாட்டிற்குச் செல்லும் முதல் சுற்றுலா ரயிலாக மாற உள்ளது.

     டெல்லி டூ நேபாளம்

    டெல்லி டூ நேபாளம்

    ஜூன் 21ஆம் தேதி புது டெல்லியில் இருந்து புறப்பட்ட பிறகு, நேபாளத்தில் உள்ள ராமருடன் தொடர்புடைய இடங்களான தனுஷா பஹார், பவன் பிகா க்ஷேத்ரா, மா ஜாங்கி ஜன்மஸ்தலி மந்திர் மற்றும் ஸ்ரீ ராம் விவா ஸ்தல் ஆகிய இடங்களுக்கு ரயில் பயணிக்கும். பின்னர், ராமாயண சர்க்யூட்டில் உள்ள பல இந்திய மாநிலங்களையும் பாரத் கவுரவ் சுற்றுலா ரயில் பயணிக்கும்.

    எத்தனை நகரங்கள்

    எத்தனை நகரங்கள்

    ராமரோடு தொடர்புடைய உத்தரப் பிரதேசம், பீகார், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, கர்நாடகா, தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்கள், மற்றும் 12 முக்கிய நகரங்களான அயோத்தி, பக்சர், ஜனக்பூர், சீதாமர்ஹி, காசி, பிரயாக், சித்ரகூட், நாசிக், ஹம்பி, ராமேஸ்வரம், காஞ்சிபுரம் மற்றும் பத்ராசலம் ஆகிய இடங்களை இந்த ரயில் பயணிக்கிறது.

    கட்டணம் எவ்வளவு

    கட்டணம் எவ்வளவு

    இது சுமார் 8,000 கி.மீ. வழித்தடங்களை கடந்து செல்கிறது. இந்த ரயிலில் மொத்தம் 600 பயணிகள் பயணிக்க முடியும், ஒரு நபருக்கு தோராயமாக ரூ.65,000 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

    English summary
    The first private train of the Indian Railways' Bharat Gaurav project will start its first service from Coimbatore in Tamil Nadu on the 14th. Another train will leave Delhi on June 21 and enter Nepal, traveling to 12 major Ramar destinations.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X