ஓசூர் வங்கி அதிகாரி நித்யாவுக்கு ஒரே எஸ்எம்எஸ்சில் வந்து விழுந்த 50 லட்சம்.. ஏமாந்த கோவை இளைஞர்
கோவை: கோவை கணபதி கே.ஆர்.ஜி.நகரை சேர்ந்த ஜோஜூ மேத்யூ என்பவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவருடைய செல்போனுக்கு ஒரு குறுஞ்செய்தி வந்தது. அந்த எஸ்எம்எஸ்க்கு பின்னர் அவருக்கு 50 லட்சம் பறிபோனது. இந்த மோசடி செய்த வழக்கில் வங்கி பெண் அதிகாரி உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து செல்போன், ஏ.டி.எம். கார்டு உள்பட 129 பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கோவை கணபதி கே.ஆர்.ஜி.நகரை சேர்ந்த 51 வயதாகும் ஜோஜூ மேத்யூ என்பவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவருடைய செல்போனுக்கு சம்பவம் நடந்த அன்று குறுஞ்செய்தி வந்தது. அதில் ஆன்லைன் மூலம் முதலீடு செய்தால் கூடுதல் லாபம் கிடைக்கும் என்று கூறப்பட்டு இருந்தது. உடனே அதில் இருந்த எண்ணுக்கு ஜோஜூ மேத்யூ தொடர்பு கொண்டார்.

அப்போது மறுமுனையில் பேசிய நபர், தங்கள் நிறுவனத்தில் முதலீடு செய்தால் அதிகமாக லாபம் பெறலாம் என்று கூறினார். அதை நம்பிய அவர் முதலீடு செய்ய சம்மதித்தார். உடனே ஜோஜூ மேத்யூக்கு செல்போன் செயலியின் ஐ.டி. மற்றும் ரகசிய எண் கொடுக்கப்பட்டது. அதில் அவர் பல்வேறு தவணைகளாக ரூ.50 லட்சம் முதலீடு செய்திருக்கிறாராம்.
அவர் ஒவ்வொரு முறையும் முதலீடு செய்த போதும் லாபத் தொகை சேர்க்கப்பட்டதாக ஆப்பில் காட்டியது. அவர் அந்த பணத்தை தனது வங்கி கணக்குக்கு மாற்ற முயன்ற போது முடியவில்லை. அப்போது ஏமாற்றப்பட்டதை அறிந்த அவர், கொடுத்த புகாரின் பேரில் கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளார். விசாரணையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்த சிவக்குமார் (27), ஓசூரை சேர்ந்த குமரேசன் (29), ஓசூர் கரப்பள்ளியை சேர்ந்த நித்யா (32) ஆகிய 3 பேர் சேர்ந்து இந்த மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதில் ஓசூரைச் சேர்ந்த நித்யா தனியார் வங்கியில் உதவி மேலாளராக வேலை செய்து வருகிறார். இந்த 3 பேரும் சேர்ந்து ஒரு நிறுவனம் நடத்துவது போல் ஜோஜூ மேத்யூவிடம் பேசி ரூ.50 லட்சம் மோசடி செய்தது விசாரணையில் தெரிய வந்தது. உடனே போலீசார் அந்த 3 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 5 செல்போன்கள், 9 சிம்கார்டு, 25 ஏ.டி.எம். கார்டுகள், 23 வங்கி கணக்கு புத்தகம், 62 காசோலை புத்தகம் உள்பட 129 பொருட்கள் பறிமுதல் செய்துள்ளனர். பின்னர் 3 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
இது குறித்து கோவை போலீசார் கூறும்போது, கைதான 3 பேரும் சேர்ந்து பலரிடம் பேசி பணத்தை வசூல் செய்து கம்போடியாவில் இருக்கும் நபருக்கு கொடுத்துள்ளதாக தெரிகிறது. 3 பேரும் மொத்தம் ரூ.90 லட்சம் வரை மோசடி செய்திருப்பது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக விசாரித்து வருகிறோம் என்று கூறினார்கள்.
ஆன்லைனில் முதலீடு செய்தால் லாபம் வரும் என்று யாராவது எஸ்எம்எஸ் அனுப்பினால் எந்த காரணம் கொண்டு நம்பிவிட வேண்டாம். ஆப்பில் அதிக பணம் சேர்ந்ததாக கூட நண்பர்கள், உறவினர்கள் சொல்வார்கள்.. கண்முன்னே பணம் எவ்வளவு உயர்ந்துள்ளது பாருங்கள் என்று ஆப்பில் காட்டுவார்கள்.. அதனை உண்மை என்று நம்ப வேண்டாம். அப்படி ஆப்பில் காட்டும் பணத்தை உங்களால் வங்கி கணக்குக்கு மாற்றவே முடியாது.. அப்போது தான் இது ஏமாற்று வேலை என்பது தெரியும்.இப்படி பலர் தற்போது ஏமாந்து வருகிறார்கள். ரிசர்வ் வங்கி அனுமதி இல்லாத எந்த முதலீட்டு நிறுவனத்திலும் முதலீடு செய்ய வேண்டாம். ரிசர்வ் வங்கியின் அதிகாரப்பூர்வ நிறுவனங்களிடம் தான் பணம் தொடர்பான பரிவர்த்தனைகளை மேற்கொள்ள வேண்டும்.. இல்லாவிட்டால் ஏமாறுவது நடக்கும்.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications