வில்லனான பேஸ்புக் காதலன்.. கோவை வந்த மும்பை பெண் “ஷாக்”! பாலியல் உறவு வைத்து பண மோசடி என புகார்
கோவை: பேஸ்புக்கில் அறிமுகமாகி 4 ஆண்டு காலமாக பழகி வந்த கோவையை சேர்ந்த காதலனை தேடி மும்பையை சேர்ந்த பெண் ஒருவர் கோவைக்கு வந்த நிலையில் அவரை திருமணம் செய்துகொள்வதாக ஏமாற்றி பாலியல் உறவு வைத்து மோசடி செய்த இளைஞர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
கோவை மாவட்டம் ஒண்டிப்புதூர் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார். 24 வயதான இவருக்கும் 27 வயதான மும்பை பெண்ணுக்கும் பேஸ்புக் மூலம் பழக்கம் ஏற்பட்டு இருக்கிறது. 4 ஆண்டுகளாக இருவரும் பழகி வந்து இருக்கின்றனர்.
தங்களின் செல்போன் எண்களை மாற்றிக்கொண்டு இருவரும் நட்போடு பேசி வந்து இருக்கின்றனர். இவர்களின் நட்பு நாளடைவில் காதலாக மாறி இருக்கிறது. இந்த நிலையில் மும்பையை சேர்ந்த பெண்ணை நேரில் பார்க்க ஆசையாக உள்ளது என அவரிடம் தெரிவித்து உள்ளார் செந்தில்குமார்.

கோவைக்கு அழைத்த செந்தில்குமார்
அந்த பெண்ணை கோவைக்கு வருமாறும் அவர் அழைப்பு விடுத்து உள்ளார். முக்கியமாக ஏதேனும் நிகழ்ச்சி இருந்து அதற்கு அழைத்தால் கோவை வருவதாக செந்தில்குமார் மும்பை பெண்ணிடம் தெரிவித்து உள்ளார். இந்த நிலையில் தனக்கு பிறந்தநாள் என்று கூறி அந்த பெண்ணை கோவைக்கு வர சொல்லி அழைத்து இருக்கிறார்.

பிறந்த நாள் விழாவுக்கு வந்த பெண்
அந்த பெண்ணும் செந்தில்குமாரை நம்பி அவரது பிறந்தநாள் விழாவில் கலந்துகொள்வதற்காக விமானம் மூலமாக கோவைக்கு வந்து உள்ளார். அவரை அழைத்துக் கொண்டு கோவையின் பல பகுதிகளில் சுற்றிக்காட்டிய செந்தில்குமார், இரவில் அவர் தங்குவதற்காக ஆர்.எஸ்.புரத்தில் உள்ள ஒரு விடுதியில் அறை எடுத்துக்கொடுத்து தங்க வைத்து உள்ளார்.

திருமணம் செய்வதாக மோசடி
அப்போது அந்த பெண்ணிடம் செந்தில்குமார் திருமணம் செய்துகொள்வதாக உறுதியளித்து நெருக்கமாக இருந்து உள்ளார். அதன் தொடர்ச்சியாக அந்த பெண்ணிடம் ரூ.70 ஆயிரம் பணத்தை பல கட்டங்களாக செந்தில்குமார் வாங்கி உள்ளார். ஆனால், அதன் பிறகு அவரிடம் பேசுவதை கொஞ்சம் கொஞ்சமாக குறைக்க செந்தில்குமார் குறைத்துக்கொள்ள தொடங்கினார்.

பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி
வாக்குறுதி அளித்ததைபோல் திருமணமும் செய்துகொள்ளவில்லை. இதனால் மும்பையை சேர்ந்த பெண் அதிர்ச்சி அடைந்து உள்ளார். தன்னுடைய செல்போன் அழைப்புகளை எடுக்காமல் செந்தில்குமார் தவிர்த்து வந்ததால் வேறொரு எண்ணில் இருந்து செந்தில்குமாரை பாதிக்கப்பட்ட மும்பை பெண் தொடர்புகொண்டு இருக்கிறார். அந்த அழைப்புகளையும் செந்தில்குமார் எடுக்கவில்லை.

போலீஸ் வழக்குப்பதிவு
இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அந்த மும்பை பெண் கோவை மாநகர மேற்கு பகுதி மகளிர் காவல் நிலையத்தில் செந்தில்குமார் மீது புகார் அளித்தார். அதன் அடிப்படையில் அவர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்ஒண்டு வருகிறார்கள். மும்பையை சேர்ந்த பெண்ணிடம் பேஸ்புக்கில் பழகி கோவை இளைஞர் ஏமாற்றியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை












Click it and Unblock the Notifications