Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கோவை பெண் கோச் மர்ம மரணம்! பிடி உஷா பயிற்சி மையத்தில் ஷாக் சம்பவம்! தமிழக அரசுக்கு பெற்றோர் கோரிக்கை

Subscribe to Oneindia Tamil

கோவை : பிரபல முன்னால் தடகள வீராங்கனையான பிடி உஷாவின் பயிற்சி மையத்தில் தங்கி பயிற்சி அளித்து வந்த கோவையைச் சேர்ந்த வீராங்கனை மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில் இது தொடர்பாக நீதி விசாரணை நடத்த வேண்டும் என பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்தியாவின் பிரபலமான தடகள வீராங்கனைகளில் ஒருவர் பிடி உஷா. தேசிய அளவில் மட்டுமல்லாது உலக அளவிலும் பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு இந்தியாவுக்காக பல பதக்கங்களை வென்று தந்திருக்கிறார்.

விளையாட்டுத்துறையில் இவரது சாதனையை பாராட்டி பாஜக அரசு மாநிலங்களவை உறுப்பினராக நியமனம் செய்துள்ள நிலையில் கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியில் உஷா ஸ்கூல் ஆப் அத்தலடிக்ஸ் என்ற அகாடமியை நடத்தி வருகிறார்.

பிடி உஷா

பிடி உஷா

இந்த பயிற்சி மையத்தில் கோவை தொண்டாமுத்தூரைச் சேர்ந்த பிரபல விளையாட்டு வீராங்கனையான ஜெயந்தி என்பவரும் பயிற்சியாளராக பணியாற்றி வந்திருக்கிறார். ஜெயந்தியும் விளையாட்டு துறையில் சிறந்து விளங்கியவர் என்பதோடு தேசிய அளவில் பல்வேறு போட்டிகளை கலந்து கொண்டு பதக்கங்களை வென்றுள்ளார். மேலும் ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ளவும் முயற்சி செய்து வந்ததாக கூறப்படுகிறது.

கோவை வீராங்கனை

கோவை வீராங்கனை

இந்நிலையில் கடந்த 28ஆம் தேதி பயிற்சியாளர் ஜெயந்தியின் தாயாரான கவிதாவுக்கு உஷா அதலடிக் அகாடமி நிர்வாகிகள் தொலைபேசியில் தொடர்பு கொண்டுள்ளனர். அதில் ஜெயந்திக்கு திடீர் உடல்நல குறைவு ஏற்பட்டுள்ளதாகவும் எனவே மருத்துவமனைக்கு வருமாறு கூறியுள்ளனர். இதனால் அதிர்ச்சியில் உறைந்த ஜெயந்தியின் தம்பி மணிகண்டன் மற்றும் அவரது உறவினர்கள் இரு சக்கர வாகனத்தில் மருத்துவமனைக்கு சென்றுள்ளனர். அப்போது ஜெயந்தியின் உடலானது மருத்துவமனையில் வைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து இது குறித்து விளக்கம் கேட்டுள்ளனர்.

மர்ம மரணம்

மர்ம மரணம்

அப்போது ஜெயந்தி தற்கொலை செய்து கொண்டதாக உஷா அகாடமி அதலடிக்ஸ் நிர்வாகிகள் கூறியுள்ளனர். மேலும் அவசர அவசரமாக அவரது உடலை உடற்கூறு ஆய்வு செய்து கேரளா போலீசார் அவரது தம்பி மணிகண்டனிடம் ஒப்படைத்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் அவரிடம் பிரேத பரிசோதனை செய்த அதற்கான சான்றிதழை கொடுத்துள்ளனர். சொந்த ஊரில் அடக்கம் செய்ய கொண்டு செல்லப்பட்ட நிலையில் உரிய ஆவணங்கள் இல்லாததால் மின் மயானத்தில் அடக்கம் செய்ய முடியாது எனக் கூறியுள்ளனர். இதை அடுத்து உள்ளூர் பிரமுகர்கள் சிலர் உதவியோடு ஜெயந்தியின் உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

உறவினர்கள் கோரிக்கை

உறவினர்கள் கோரிக்கை

இந்த நிலையில் ஜெயந்தி தற்கொலை செய்திருக்க வாய்ப்பில்லை எனவும் காவல்துறையினர் இது குறித்து உரிய முறையில் விசாரணை நடத்தாமல், அவசர அவசரமாக உடலை உடற்கூறு ஆய்வுக்கு ஒப்படைத்துள்ளதாகவும் நாட்டிற்காக பதக்கம் வெல்ல வேண்டும் என நினைப்பு காட்டிய ஜெயந்தி தற்கொலை செய்ய வாய்ப்பு இல்லாததால் இது குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் எனவும் தமிழக அரசு ஜெயந்தியின் குடும்பத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர். தற்போது கேளமாநிலத்தில் பறவை காய்ச்சல் பரவி வரும் நிலையில் உரிய ஆவணங்களின் கேரளாவில் இருந்து ஜெயந்தியின் உடல் கொண்டுவரப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில் இது தொடர்பாகவும் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+