கோயம்புத்தூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

திருப்தியில்லை..போட்டு தாக்கிய பிடிஆர்! கொந்தளித்த ஐபி! ஆதரவாய் வந்த செந்தில் பாலாஜி! என்ன சொன்னார்?

Google Oneindia Tamil News

கோவை : கூட்டுறவுத்துறை சிறப்பாக செயல்படவில்லை என நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் ஐ.பெரியசாமி நேற்று பதில் அளித்திருந்த நிலையில், கூட்டுறவு துறையை தலைநிமிர்ந்து நிற்கக் கூடிய துறையாக ஐ.பெரியசாமி உருவாக்கி இருக்கிறார் என தமிழக மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியிருக்கிறார்.

நேற்று மதுரை மாவட்ட கூட்டுறவு துறை சார்பில் அனைத்திந்திய கூட்டுறவு வார விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழக நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் அவர் பேசிய பேச்சு தான் திமுகவுக்குள்ளேயே சலசலப்பை ஏற்படுத்தியது. கூட்டுறவு மற்றும் உணவு வழங்கல் துறை அமைச்சர்களான ஐ.பெரியசாமி, சக்கரபாணியை அவர் விமர்சித்துள்ளதாக உடன்பிறப்புகள் பொங்கி வருகின்றனர்.

100 யூனிட் இலவச மின்சாரத்திற்கு ஆதார் இணைப்பு கட்டாயமா? அமைச்சர் செந்தில் பாலாஜி தந்த முக்கிய தகவல்100 யூனிட் இலவச மின்சாரத்திற்கு ஆதார் இணைப்பு கட்டாயமா? அமைச்சர் செந்தில் பாலாஜி தந்த முக்கிய தகவல்

பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்

பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்

அப்படி என்னதான் பேசினார் பிடி.ஆர் பழனிவேல் தியாகராஜன் கூட்டுறவு துறையின் செயல்பாடு கொள்கை மற்றும் வரலாற்று ரீதியாக சிறப்பாக தான் உள்ளது ஆனால் கூட்டுறவுத்துறையில் தினமும் ரயில்கள் நடத்தப்படுவது ரேஷன் அரிசி கடத்தல் அதிகரிப்பது என பல்வேறு செய்திகள் வருகிறது கூட்டுறவுத்துறை வளர்ச்சிக்கான செயல்பாடுகள் தனக்கு திருப்திகரமாக இல்லை என கூறினார். ஒரு துறை அமைச்சர் மற்றொரு துறை அமைச்சரை விமர்சித்துப் பேசியது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

ஐ.பெரியசாமி

ஐ.பெரியசாமி

இதற்கு நேற்றே பதிலளித்த அமைச்சர் ஐ.பெரியசாமி மக்கள் திருப்தி அடைய வேண்டும். முதல்வர் ஸ்டாலின் திருப்தி அடைய வேண்டும். வேறு யாரையும் திருப்தி படுத்த வேண்டிய அவசியம் எனக்கில்லை. நான் 50 ஆண்டுகாலம் அரசியலில் இருக்கிறேன். ரேஷன் கடையை பற்றி தெரியாதவர்கள் குறித்து எங்களுக்கு கவலை இல்லை. நாங்கள் நிதியே கேட்கவில்லை என ஆவேசமாகப் பதிலளித்தார்.

செந்தில் பாலாஜி

செந்தில் பாலாஜி

இந்நிலையில் கூட்டுறவு துறை தலைநிமிர்ந்து கூடிய துறையாக ஐ. பெரியசாமி உருவாக்கி இருக்கிறார் தமிழக மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியிருக்கிறார். 69 வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா - 2022, மாநில அளவிலான விழா கோவை கொடிசியா அரங்கில் நடை பெற்றது. தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கூட்டுறவு கொடியேற்றி வைத்து விழாவை துவக்கி வைத்தார். உடன், தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

சிறப்பாக செயல்படும் துறை

சிறப்பாக செயல்படும் துறை

நிகழ்ச்சியில் பேசிய மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி," கூட்டுறவுத்துறையின் அமைச்சராக பொறுப்பேற்ற அமைச்சர் பெரியசாமி, முன்பு இருந்த கூட்டுறவு நிலையை மாற்றி தலை நிமிர்ந்து நிற்கக் கூடிய துறையாக ஐ. பெரியசாமி உருவாக்கி இருக்கிறார். மேலும் கோவை மாவட்டத்தில் மகளிர் சுய உதவி குழுவிற்கு ஆயிரம் கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு மாவட்ட் ஆட்சியர் கண்காணிப்பில் வழங்கப்பட்டு வருகிறது" என புகழாரம் சூட்டினார்.

English summary
Tamil Nadu Electricity Minister Senthil Balaji has said that while Finance Minister PDR Palanivel Thiagarajan has accused the cooperative sector of not working well, I. Periyasamy has made the cooperative sector a sustainable sector.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X