கோயம்புத்தூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வாழ்விடத்தை விட்டு தர முடியாது.. ஒற்றை யானை நடத்தும் போராட்டம்.. ஒரு பாடம்.. நெட்டிசன்கள் பஞ்ச்!

Google Oneindia Tamil News

Recommended Video

    கோவையை கலக்கும் சின்னத்தம்பி யானை- வீடியோ

    கோவை: ஒற்றை யானை தன் வாழ்விடத்தை விட்டுத் தர முடியாது என நடத்தும் போராட்டம் நமக்கான பாடம் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

    மயக்க ஊசி போட்டு காட்டுக்கு விரட்டப்பட்ட சின்னத்தம்பி என்ற யானை உடுமலை பகுதிக்கு மீண்டும் வந்துவிட்டது. இந்த நிலையில் அந்த யானையை கும்கியாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு உத்தரவிட்டது.

    இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வன உயிரின ஆர்வலர்கள் வழக்கு தொடர்ந்ததன் விளைவு சின்னத்தம்பியை கும்கியாக மாற்றும் எண்ணம் இல்லை என தமிழக அரசு கூறியுள்ளது. இதற்கு நெட்டிசன்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

    மண்டியிட்டு

    #சின்னத்தம்பி கற்றுத்தந்த பாடம்.

    மதம் பிடித்து யாரையும் கொல்லவும் இல்லை!

    மண்டியிட்டு கும்கியாக, கோவில் யானையாக பிச்சை எடுக்கவும் இல்லை!

    யானை தன் பலம் அறிந்து அதன் போக்கில் சென்றால் மக்களின் ஆதரவு என்றும் இருக்கும்.

    இது எல்லோருக்கும் பொருந்தும்!

    இயற்கை

    பூமி மனிதர்கள் மட்டும் வாழும் இடம் இல்லை என்பதை மனிதன் உணர்ந்தாலே, இயற்கை காப்பாற்றப்படும்...
    கட்டுக்குள் இருக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்றுவோம், இயற்க்கையை மீட்போம்...

    சின்னத்தம்பி

    ஒற்றை யானை தன் வாழ்விடத்தை விட்டுத் தர முடியாது என நடத்தும் போராட்டம் நிச்சயம் நமக்கான பாடம்!.

    ஹைட்ரோகார்பன், 8 வழிச்சாலை, ஸ்டெர்லைட், மணல் கொள்ளை என்று நம்மை துரத்திக் கொண்டிருக்கும் கார்ப்பரேட் மிருகங்களை எதிர்க்கும் தைரியத்தை நாம் சின்னத்தம்பியிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டும்.

    நண்பேன்டா

    காட்டுக்குள் விரட்டலாம் என்று எண்ணிய வனத்துறை, சலீம், மாரியப்பன் என்னும் 2 கும்கி யானைகளை கொண்டு வந்தது. ஆனால்,இருவரையும் நட்பாக்கிக் கொண்ட #சின்னத்தம்பி, இருவருடனும் விளையாடி வருகிறான். அந்த யானைகள், #சின்னத்தம்பி ஐ காட்டுக்குள் விரட்டும் என்று தெரியவில்லை. #bringbackchinnathambi

    நீதிமன்றம்

    கொன்ற கன்றுக்கு நீதி கொடுத்த மனுநீதி சோழனின் வாரிசுகள், மயிலுக்கு போர்வை தந்த பாரியின் குடிகள் அப்படிதான் உயிர்நேயவாதிகளாக இருப்பார்கள் சின்னதம்பியை கும்கியாக மாற்றக்கூடாது என்று நீதிமன்றம் சென்று நீதி வாங்கியுள்ளார்கள்..

    English summary
    Netisans shared their happiness about TN government reply to Chennai HC about Chinnathambi should not be made as Kumki.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X