கோயம்புத்தூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பார்த்தாலே பச்சை முகம்! ஆனா கோபம் மட்டும் வந்துச்சுனா வேற லெவல்தான்! யார் இந்த “பாகுபலி”? பரபர கோவை

Google Oneindia Tamil News

கோவை : ஒரு வருடத்துக்கு பிறகு காட்டை விட்டு வெளியேறி மங்களக்கரைபுதூர் பகுதியில் நேற்றிரவு விவசாய நிலங்களில் நுழைந்த பாகுபலி காட்டுயானை 300க்கும் மேற்பட்ட வாழைகளை சேதப்படுத்திய காட்டு யானை பாகுபலியை வனப்பகுதிக்குள் விரட்ட அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Recommended Video

    ஒரு வருடத்துக்கு பிறகு காட்டை விட்டு வெளியேறிய பாகுபலி காட்டுயானை - வீடியோ

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள தேக்கம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் நெல்லிமலை உள்ளது.

    இப்பகுதியை சுற்றி குரும்பனூர், பஞ்சுக்காடு, சமயபுரம், பத்திரகாளியம்மன் கோயில் பகுதி, தேக்கம்பட்டி, கிட்டாம்பாளையம், மங்களக்கரைபுதூர், தாசம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்கள் உள்ளது.

    அய்யோ வலிக்குமே பிள்ளைகளுக்கு! யானை கூட்டத்திற்காக பரிதவித்து பதறிய கிராமமக்கள்! கோவை மனமே தனிதான்.! அய்யோ வலிக்குமே பிள்ளைகளுக்கு! யானை கூட்டத்திற்காக பரிதவித்து பதறிய கிராமமக்கள்! கோவை மனமே தனிதான்.!

    ஒற்றை காட்டு யானை

    ஒற்றை காட்டு யானை

    இந்நிலையில் மேட்டுப்பாளையம், சிறுமுகை வனப்பகுதியில் நடமாடி வந்த பாகுபலி என பொதுமக்களால் அழைக்கப்படும் ஒற்றை காட்டு யானை கடந்த 3 நாட்களாக மேற்கண்ட பகுதியில் முகாமிட்டு விவசாய பயிர்களை நாசப்படுத்தி வருகிறது. தொடர்ந்து அப்பகுதியிலேயே முகாமிட்டுள்ள பாகுபலி யானை தினசரி மாலை 7 மணிக்கு மேல் நெல்லிமலை பகுதியில் இருந்து குரும்பனூர் வழியாக வெளியே வந்து விளை நிலங்களில் பயிர்களை சேதப்படுத்தி செல்கிறது.

    வாழை மரங்கள் சேதம்

    வாழை மரங்கள் சேதம்

    இந்நிலையில் நேற்றிரவு வனத்தை விட்டு வெளியேறிய காட்டுயானை பாகுபலி வனத்துறையினரையும் மீறி மங்களக்கரைபுதூர் பகுதியில் உள்ள வாழை தோட்டத்திற்குள் நுழைந்தது. இதில் அப்பகுதியில் பயிரிடப்பட்டிருந்த கதளி, செவ்வாழை தோட்டங்களில் இருந்த 300க்கும் மேற்பட்ட வாழைகளை சேதப்படுத்தியது. இதனால் விசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டது.

    பாகுபலி யானை

    பாகுபலி யானை

    எனவே,விளை நிலங்களை சேதப்படுத்தும் காட்டுயானையை அடர் வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டுமென அப்பகுதி விவசாயிகள் வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். உருவத்தில் பெரிதாக காணப்பட்டதால் இந்த யானையை மக்கள் பாகுபலி யானை என பெயர் வைத்து அழைத்து வந்தனர். யானைகளின் இயல்பை மீறி இந்த பாகுபலி யானை பிற யானைக்கூட்டங்களோடு சேராமலும், வேறு பகுதிக்கு இடம் பெயர்ந்து செல்லாமலும் தொடர்ச்சியாக குறிப்பிட்ட கிராமப் பகுதிகளில் மட்டும் சுற்றி வந்தது.

    காட்டுக்குள் மாயம்

    காட்டுக்குள் மாயம்

    அங்குள்ள விவசாய நிலங்களில் புகுந்து தனக்கு பிடித்த வாழை, மக்காசோளம், கரும்பு போன்ற உணவு பயிர்களை சாப்பிட்டும் வந்தது. இந்த யானையை பிடிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து பாகுபலி யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிப்பதற்காக டாக்டர்களுக்கு உதவியாக டாப்சிலிப்பில் இருந்து கலீம், மாரியப்பன், வெங்கடேஷ் என்ற 3 கும்கிகளும் வரவழைக்கப்பட்டது. கும்கி யானைகள், 50 வேட்டை தடுப்பு காவலர்களுடன் யானையை தேடி அலைந்தனர். ஆனால் யானை பிடிபட்டால் அவர்களுக்கு போக்கு காட்டியது. இதையடுத்து வனத்துறையினர் பாகுபலி யானையை பிடிப்பதை தற்காலிகமாக கைவிட்டனர்.

    மக்கள் கோரிக்கை

    மக்கள் கோரிக்கை

    அதன்பின்னர் கடந்த சில மாதங்களாக பாகுபலி யானையின் நடமாட்டம் அந்த பகுதியில் இல்லை. மேலும் யார் கண்ணிலும் யானை தென்படவில்லை. இதனால் மக்களும் நிம்மதியாக இருந்தனர். இந்நிலையில் மீண்டும் நெல்லிமலை வனப்பகுதியிலேயே முகாமிட்டுள்ள பாகுபலி யானை இதுவரை மனிதர்கள் எவரையும் தாக்கியதில்லை என்றாலும் பெரும் அசம்பாவிதம் ஏற்படும் முன் அடர் வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது.

    English summary
    The people of the area have demanded that the wild elephant named bahubali, which left the forest after a year and entered the agricultural lands in the Mangalakaraiputhur area last night, drive the wild elephant into the forest, destroying more than 300 banana trees.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X