அரசியல் கிடையாது.. இதுதாங்க உண்மையான அன்பு.. வானதி சீனிவாசன் ஒரே போடு!

Subscribe to Oneindia Tamil

கோவை: அரசியலுக்காக இல்லாமல் தமிழ் மொழியின் மீதான உண்மையான அன்பை எப்போதும் வெளிப்படுத்துபவர் நமது பிரதமர் நரேந்திர மோடி என்று தெரிவித்துள்ளார், கோவை தெற்கு பாஜக எம்எல்ஏ வானதி சீனிவசான்.

பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது வானொலி உரையில் தமிழ்மொழியின் ரசிகன் என்று தெரிவித்தார்.

உலகத்திலேயே பழமையான மொழி தமிழ் மொழி, நமது ஒவ்வொரு இந்தியர்களும் அது குறித்து பெருமைப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

தமிழ் பற்றி மோடி

தமிழ் பற்றி மோடி

தமிழகத்தை சேர்ந்த குருபிரசாத் என்பவர் இதுவரை பிரதமர் நரேந்திர மோடி தமிழ் தொடர்பாக பேசிய பேச்சுகளை தொகுத்து தொகுப்பாக தயாரித்துள்ளார். இதனை பிரதமர் நரேந்திர மோடி தனது நமோ செயலியில் வெளியிடுவதற்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மோடி ட்வீட்

மோடி ட்வீட்

மேலும் நரேந்திர மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் குருபிரசாத் வெளியிட்ட தகவல்களை பிடிஎஃப் பார்மெட்டில் பகிர்ந்துள்ளார். இந்த நிலையில்தான் வானதி சீனிவாசன் பிரதமரின் இந்த நடவடிக்கைகளுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சில ட்வீட்டுகளை தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி மன் கி பாத் நிகழ்ச்சியில் பேசிய சில விஷயங்களை அதில் அவர் தெரிவித்துள்ளார்.

 எப்போதும் அன்பு

எப்போதும் அன்பு

மேலும், அரசியலுக்காக இல்லாமல், தமிழ் மொழியின் மீதான உண்மையான அன்பை எப்போதும் வெளிப்படுத்துபவர் நமது பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் என்று அவர் ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

தேர்தல் காலம் இல்லை

தேர்தல் காலம் இல்லை

தேர்தல் நேரங்களில் மட்டும் தமிழ் மொழி பற்றி பெருமையாக பேசுவதும், பிறகு மறந்து விடுவதும் என்றில்லாமல் எப்போதுமே அதை மனதில் வைத்திருக்கிறார் என்பதை மறைமுகமாகக் குறிப்பிடுகிறார் வானதி.

வானதி சீனிவாசன் பதிலடி

வானதி சீனிவாசன் பதிலடி

மோடி இன்று வானொலி உரையில் தமிழ் பற்றி பேசியதும், எதிர்க்கட்சிகளை சேர்ந்த சில பிரமுகர்கள், இது அரசியல் என விமர்சனம் செய்து சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்ததை பார்க்க முடிந்தது. அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் வானதி சீனிவாசன் இந்த ட்விட்டர் பதிவை வெளியிட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+