கோயம்புத்தூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அமித் ஷாவுக்கு என்ன கவலை? இந்து ஓட்டுதான் முக்கியம்.. ஒற்றுமை தேவை இல்லை! வெளுத்து வாங்கிய திருமா..!

Google Oneindia Tamil News

கோவை : பாஜக இந்து ஒற்றுமையை விரும்பவில்லை, இந்து வாக்குகளை தான் விரும்புகிறார்கள் எனவும், சேரர் சோழர் பாண்டியர் முழு வரலாறு பற்றி அமித் ஷாவுக்கு என்ன கவலை என கோவையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.

Recommended Video

    அமித் ஷாவுக்கு என்ன கவலை? இந்து ஒட்டுதான் முக்கியம்.. ஒற்றுமை தேவை இல்லை - திருமா..!

    கடந்த வெள்ளிக்கிழமை டெல்லியில் நடைபெற்ற, எழுத்தாளர் ஓமேந்திர ரத்னுவின் மஹாராணா: சஹஸ்த்ர வர்ஷா கா தர்ம யுத்தம் புத்தக வெளியீட்டு விழாவில் அமைச்சர் அமித் ஷா கலந்துகொண்டார்.

    நிகழ்ச்சியில் பேசிய அவர்,"இன்று நாம் படிக்கும் வரலாற்றை எழுதிய வரலாற்றாசிரியர்கள் முகலாய ஆட்சியை பற்றி மட்டுமே விவாதித்துள்ளனர். அவர்களைத் தாண்டி பாண்டியப் பேரரசு 800 ஆண்டுகள் ஆட்சி செய்தது" என்றார்.

    இந்து என்பது ஒரு மதமே இல்லை.. மதவாதிகள் யார்? திருமாவளவன் இதை புரிஞ்சிக்கணும்.. பாஜக அட்டாக் இந்து என்பது ஒரு மதமே இல்லை.. மதவாதிகள் யார்? திருமாவளவன் இதை புரிஞ்சிக்கணும்.. பாஜக அட்டாக்

     அமைச்சர் அமித் ஷா

    அமைச்சர் அமித் ஷா

    மேலும், "பல்லவப் பேரரசு 600 ஆண்டுகள் ஆட்சி செய்தது. சோழர்கள் 600 ஆண்டுகள் ஆட்சி செய்தனர். நாம் வாழ்வது சுதந்திர நாடு. உண்மையை எழுத யாருக்கும் தடை இல்லை. யாரும் நம்மை தடுக்க மாட்டார்கள். அதனால் வரலாற்றாசிரியர்கள் மறைக்கப்பட்ட வரலாறுகளை வெளிப்படுத்த வேண்டும் என்றும் அவர் பேசினார். அமித் ஷாவின் கருத்து முஸ்லிம்கள் எதிர்ப்பையும், வரலாற்றை காவியாக்கும் எண்ணமோ என ஒரு தரப்பினர் விமர்சனத்தை முன்வைத்துள்ளனர்.

     சேரர் சோழர் பாண்டியர் வரலாறு

    சேரர் சோழர் பாண்டியர் வரலாறு

    இந்நிலையில், சேரர் சோழர் பாண்டியர் முழு வரலாறு பற்றி அமித் ஷாவுக்கு என்ன கவலை என கோவையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். கோவை காந்திபுரத்தில் மே பதினேழு இயக்கம் சார்பில் கோவை மறந்த விடுதலைப் போர் வரலாறு என்ற தலைப்பில் மே 17 இயக்கம் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி தலைமையில் மாநாடு நடைபெற்றது.

    தொல்.திருமாவளவன்

    தொல்.திருமாவளவன்

    இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் எம்.பி. மாநாட்டில் பேசும்போது," கோவையை மையமாக வைத்து முதல் சுதந்திர போராட்டத்தில் 42 பேரில் 36 பேர் இஸ்லாமியர்கள் படுகொலை செய்யப்பட்டு உள்ளனர். வரலாற்று இருட்டடிப்பும்,வரலாற்று திரிப்பும் காலம் காலமாக உள்ளது. ஒரே தேசம் ஒரே கலாச்சாரம் அடிப்படையில் பாஜக பன்மைதன்மையை சிதைத்து விடுகிறார்கள்.

    என்ன கவலை?

    என்ன கவலை?

    மதம் மொழி சாதியை கடந்து ஆங்கிலேயரை எதிர்த்து அன்று ஒன்று சேர்ந்து செயல்பட்டார்கள். சேரர் சோழர் பாண்டியர் முழு வரலாறு பற்றி அமித் ஷாவுக்கு என்ன கவலை. கோவையை அடித்தளமாக வைக்க பாஜக செயல்படுகிறது" என்றார். இந்த நிகழ்ச்சியில் மே 17 இயக்கம் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    English summary
    VCK leader Thirumavalavan has said that the BJP does not want Hindu unity, it wants Hindu votes and what Amit Shah cares about the whole history of the Cheras Chola Pandya.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X