ராஜபக்சே அரசுக்கான ஆதரவை வாபஸ் பெற்ற இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் - ஜீவன் தொண்டமான் ராஜினாமா
இலங்கை பிரதமர் ராஜபக்சே அரசுக்கு அளித்து வந்த ஆதரவை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் திரும்ப பெறுவதாக அறிவித்திருக்கிறது.
கொழும்பு: இலங்கை பிரதமர் ராஜபக்சே அரசுக்கு அளித்து வந்த ஆதரவை தொழிலாளர் காங்கிரஸ் திரும்ப பெறுவதாக அறிவித்திருக்கிறது. இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் ஜீவன் தொண்டமான் சமுதாய உட்கட்டமைப்பு இணை அமைச்சர் பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். ஜீவன் தொண்டமானுடன் எம்.பி. மருதபாண்டி ராமேஸ்வரமும் சுயேச்சையாக செயல்பட தீர்மானம் செய்யப்பட்டிருக்கிறது.
இலங்கையில் சுதந்திரத்திற்கு பின்னர் இதுவரை இல்லாத அளவுக்கு பொருளாதாரம் மோசமான நிலையை சந்தித்துள்ளது. இலங்கையில் நிலவும் பொருளாதார சிக்கலால் கடந்த சில மாதங்களாக அத்தியாவசிய பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
பொருளாதார சரிவு, விலைவாசி உயர்வை கண்டித்து இலங்கையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போராட்டங்களால் பிரதமர் மகிந்த ராஜபக்சே தலைமையிலான அமைச்சரவையில் அனைத்து அமைச்சர்களும் ராஜினாமா செய்துள்ளனர்.

தீவிரமடையும் போராட்டம்
அமைச்சர்கள் ராஜினாமா வெறும் கண் துடைப்பு என்று அதிபர் கோத்தபய ராஜபக்சேவும் பிரதமர் மகிந்த ராஜபக்சேவும் பதவி விலக வேண்டும் என்றும் போராட்டக்காரர்கள் வலியுறுத்தி வருகின்றன. சுதந்திர தின சதுக்கத்தில் கூடியிருந்த போராட்டக்காரர்கள் செல்போன்களில் டார்ச் விளக்குகளை ஒளிரவிட்டபடி முழக்கம் எழுப்பினர். மக்களின் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில் ராஜபக்ச அரசுக்கு அளித்து வந்த ஆதரவை கட்சிகள் ஆதரவு பெற்று வருகின்றன.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்
இந்த நிலையில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் செந்தில் தொண்டமான் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கட்சியின் ஏகமனதான தீர்மானத்துக்கிணங்க, அரசாங்கத்திலிருந்து வெளியேறுவதற்கு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தீர்மானித்தது. நேற்றைய தினம் அதிபர் கோட்டாபய ராஜபக்ச அவர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் அதன் நிலைப்பாட்டைத் தெரிவித்தது.

ஜீவன் தொண்டமான் ராஜினாமா
இதேவேளை, தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் பதவியை இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான் அவர்கள் ராஜினாமா செய்வதோடு, அவரும் இ.தொ.காவின் பாராளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ராமேஸ்வரன் அவர்களும், பாராளுமன்றத்தில் சுயேச்சையாக செயற்படுவதற்கும் தீர்மானித்தனர்.
Recommended Video

செந்தில் தொண்டமான்
நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலைமை மற்றும் மக்களின் எதிர்பார்ப்புக்கு தலைசாய்த்தே இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளதென்று தெரிவித்த அக்கட்சியின் தலைவர் செந்தில் தொண்டமான், தொடர்ந்தும் மக்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யும் தீர்மானங்களை எடுக்கவும் மக்களுக்காக முன்னிற்கவும் இ.தொ.கா தயாராக இருக்கின்றதென்றும் குறிப்பிட்டார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications