இலங்கை அதிபர் வீட்டு முன்பு நடந்த போராட்ட பின்னணியில் தீவிரவாத சதி என்ற ஆளும் கட்சி.. ரணில் கண்டனம்
கொழும்பு: ‛‛இலங்கையில் மக்கள் பிரச்சனையை தீர்க்காததால் தான் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இது இனம், பயங்கரவாத செயற்பாடு அல்ல'' என இலங்கையின் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே கூறியுள்ளார்.
Recommended Video
இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவுகிறது. அத்தியாவசிய பொருட்களின் விலைகள் உச்சமடைந்துள்ளன. பொதுமக்கள் உணவு, பெட்ரோல், டீசல், எரிவாயு சிலிண்டர் இன்றி தவித்து வருகின்றனர்.
இலங்கை தலைநகர் கொழும்பு உள்பட பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மிர்ஹானா நகரில் உள்ள கோத்தபய ராஜபக்சேவின் வீட்டை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

ரணில் விக்ரமசிங்கே
இந்த போராட்டத்தை தொடர்ந்து தான் அங்கு அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் அங்கு அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. முன்னதாக நேற்று இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே இலங்கையில் நடக்கும் போராட்டம் குறித்து கூறியுள்ளதாவது:

அரசியல் நெருக்கடி
இலங்கையின் மிர்ஹானா பகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதுவரை காணப்பட்ட பொருளாதார நெருக்கடிகள் அரசியல் நெருக்கடியாக மாற்றமடைந்துள்ளது. தற்போதைய நிலை அரசியல் நடைமுறையின் வீழ்ச்சியாக மாற்றமடையும். மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு வழங்குவதில் அரசும், எதிர்க்கட்சியும் தோல்வியடைந்துள்ளது.

பயங்கரவாத செயற்பாடு அல்ல
இது இனவாதம், பயங்கராத செயற்பாடு அல்ல. இதுபோன்ற கருத்துகளை வெளியிடுவதன் மூலம் நிலைமை வேறு விதமாக மாறிவிடும். நாம் ஒன்றை நினைவில் வைத்து கொள்ள வேண்டும். அமைதியான ஆர்ப்பாட்டத்தின்போது எந்தவொரு நபருக்கும் பாதிப்பு ஏற்படக்கூடாது. அதேபோன்று வன்முறைக்கும் இடமளிக்கப்படக் கூடாது.

ஆர்ப்பாட்டங்களுக்கு உரிமை
மக்களுக்கு அமைதியான முறையில் சுதந்திரமாக நமது எதிர்ப்பினை வெளிப்படுத்துவதற்கும், ஆர்ப்பாட்டங்களை முன்னெடுப்பதற்கு உரிமை உள்ளது. மக்களின் இந்த ஆர்ப்பாட்டங்களுக்கு அரசியல் கட்சிகள் கலந்து கொள்ளக்கூடாது. ஆனால் அரசியல் கட்சிகளுக்கு கண்டன பொதுக்கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்களை முன்னெடுப்பதற்கான உரிமை உள்ளது. அதனால் கட்சி பேதமின்றி, தேசிய இணக்கப்பாட்டுடன் நாம் செயற்பட வேண்டியுள்ளது. அடுத்த வாரம் பாராளுமன்றம் கூடும்போது நாம் இந்த பொறுப்பை நிறைவேற்ற வேண்டும். நமது பிரச்சனைகளை வன்முறையின்றி அமைதியாக தீர்த்து கொள்வோம்'' என்றார்.

காரணம் என்ன
இலங்கை அதிபரின் வீட்டு முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்தில் பயங்கரவாத சக்திகள் தான் முன்னெடுத்தன என ஆளும் கோத்தபய ராஜபக்சேவின் தரப்பு கூறியதை கண்டித்து தான் ரணில் விக்ரமசிங் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
-
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
அமெரிக்காவை அலறவிட்ட பிரான்ஸ்! 129 டன் தங்கத்தை மீட்க "கோல்டன்" ஸ்கெட்ச்.. அப்போ இந்தியா பிளான் என்ன -
சிறகடிக்க ஆசை: விஜயாவின் மாற்றம்! முத்து, மீனாவை பெருமையாக பேசுறாங்களே! குடும்பத்தில் கொண்டாட்டம் -
ரஷ்யா மாஸ்டர் பிளான்: இந்தியாவுக்கு ஜாக்பாட்.. சீனா உதவி.. ஒன்று கூடிய BRICS நாடுகளால் டிரம்ப் ஷாக்! -
மொத்தமாக மாறிய டிரம்ப்.. ஈரான் விஷயத்தில் தொனியை மாற்றிய அமெரிக்க அதிபர்.. அடேங்கப்பா! -
2 வெர்ஷன்.. ஜனநாயகன் படம் இணையத்தில் லீக்கானது எப்படி? அதிகம் பலன் அடைவது யார்? அந்த மர்ம கை -
23000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த பின்பும்.. டிசிஎஸ் நிறுவனத்தில் கட்டுப்படுத்த முடியாத செலவு! -
லீக் ஆன ஜனநாயகன்.. நானே ரீலிஸ் பண்ணித்தரேன்னு சொன்னேனே விஜய்.. விட்டு விளாசிய சாட்டை! -
செந்தில் பாலாஜி பெயரை சொல்லும்போது ‘டங் ஸ்லிப்’.. கோவை தெற்கில் உளறிய பியூஷ் கோயல் -
மும்பை ரெஸ்டாரண்டில் நடந்த சந்திப்பு.. சமாதானமான ஸ்மிருதி மந்தனா குடும்பம்.. மீண்டும் திருமணம்? -
ஜனநாயகன் ரூ.500 கோடி பட்ஜெட் படம்! HD பிரிண்ட்டில் வெளியானது எப்படி? தமிழக டிஜிபியிடம் புகார் -
நம்பர் 5.. அடித்து சொல்லும் சர்வேக்கள்! திமுக+ 180 இடங்களை தாண்டுகிறது! அதிமுக ஓவர்? முக்கிய கணிப்பு












Click it and Unblock the Notifications