அற்புதமான வெற்றி போங்க.. உலக நாடுகளில் முதல் ஆளாய் மோடிக்கு வாழ்த்து சொன்ன இலங்கை

Subscribe to Oneindia Tamil

கொழும்பு: இந்தியாவில் மக்களவை தேர்தல் முடிவுகள் வெளிவந்து கொணடிருக்கும் சூழலில், 345 தொகுதிகளில் முன்னிலை பெற்று வெற்றிப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி. இந்நிலையில் மீண்டும் பிரதமராக உள்ள மோடிக்கு உலக நாடுகளில் முதல் ஆளாய் இலங்கை வாழ்த்து தெரிவித்துள்ளது.

மக்களவை தேர்தல் முன்னிலை நிலவரங்கள் வெளிவந்து கொண்டிருக்கிறது. தற்போதைய நிலவரப்படி கிட்டத்தட்ட 345-க்கும் மேற்பட்ட இடங்களில் பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி முன்னிலை வகிக்கிறது. இதில் கடந்த 2014 தேர்தலை போலவே இந்த முறையும் பாரதிய ஜனதா பெரும்பான்மைக்கு தேவையான இடங்களை விட அதிக இடங்களில் தனித்தே முன்னிலை பெற்றுள்ளது.

Wonderful Success .. Sri Lanka the first country in the world to congratulate Modi

இதனையடுத்து மத்தியில் மீண்டும் பாஜக ஆட்சியமைப்பது உறுதியாகியுள்ளது இந்நிலையில் சர்வதேச நாடுகளில் முதல் முதலாக இலங்கை நாட்டின் அதிபர் மற்றும் பிரதமர் ஆகியோர் தேர்தல் வெற்றிக்காக மோடிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ள இலங்கை பிரதமர் ரணில் விக்கரமசிங்கே அற்புதமான வெற்றியை பெற்றுள்ள உங்களுக்கு வாழ்த்துகள் இந்த வெற்றியை அடுத்து இந்தியாவுடன் மேலும் நெருக்கமாக பணியாற்ற காத்திருக்கிறோம் என கூறியுள்ளார்

மோடியின் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்துள்ள இலங்கை அதிபரான மைத்ரிபால சிறிசேன, ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார். அதில் உங்கள் வெற்றிக்கு எனது வாழ்த்துகள். உங்கள் தலைமைக்கு இந்திய மக்கள் மீண்டும் அங்கீகாரம் அளித்துள்ளனர். எதிர்காலத்தில் இந்தியாவுடன் மிதமான மற்றும் ஆக்கபூர்வமான உறவுகளை தொடர இலங்கை ஆவலுடன் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

வேறு எந்த சர்வதேச தலைவர்களும் இதுவரை மோடிக்கு வாழ்த்து தெரிவிக்காத நிலையில் இலங்கை அதிபரும் பிரதமரும் அடுத்தடுத்து தங்களது வாழ்த்துகளை மோடிக்கு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+