• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அமெரிக்கத் தெருக்களில் தமிழக பாரம்பரியப் பண்டங்கள்.. ஆன்லைன் டெலிவரியில் சாதிக்கும் தமிழக இளைஞர்கள்

சென்னை: உள்நாடு, வெளிநாடுகளில் அதி விரைவாக தமிழ்நாட்டு பாரம்பரிய உணவுப் பண்டங்களை ஆன்லைன் மூலம் டெலிவெரி செய்து அசத்தி வருகிறார்கள் தமிழக இளைஞர் குழுவினர்.

அமெரிக்கா, கனடா, லண்டன் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள், ஆஸ்திரேலியா என அனைத்து வெளிநாடுகளுக்கும் நம் பாரம்பரிய பண்டங்களை ஐந்தே நாளில் டெலிவரி செய்கிறார்கள் 98% ஐந்தே நாளில் டெலிவரி செய்து வெற்றி அடைகின்றனர். மிக அரிதாக கூடுதலாக ஒருநாள் தேவைப்படும். மேலும் தமிழக நகரங்கள் மற்றும் பெங்களூர் ஆகிய நகரங்களுக்கும் ஆன்லைனில் ஆர்டர் செய்த ஒரே நாளில் டெலிவரி செய்கிறார்கள்.

Deepavali Special Sweets and snacks order to nativespecial

அமெரிக்கா, லண்டன் என வெளிநாடுகளில் உயர் பதவிகளில் வேலை செய்து வந்த மூன்று இளைஞர்கள் தங்களின் கனவு ப்ராஜக்ட் ஆன நேட்டிவ்ஸ்பெஷல்.காம் (nativespecial.com) இணையத்தை வெற்றி பெற செய்ய தங்களின் அதி உயர் சம்பள வேலையினை உதறித் தள்ளி விட்டுத் தங்களை இதில் முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு உலகத் தர சேவையினை வழங்கும் நோக்குடன் செயல்படுகிறார்கள்.

Deepavali Special Sweets and snacks order to nativespecial

நேட்டிவ்ஸ்பெஷல்.காம் பற்றி அவர்களிடம் கேட்டபோது இவ்வாறு கூறினர்: "மொழி, கலை, இலக்கியம் ஆகியவை நம் பண்பாட்டுச் சங்கிலித் தொடர்ச்சிக்கு எவ்வளவு முக்கியமோ அதே அளவு நமது உணவுக் கலாச்சாரமும் முக்கியம். தித்திக்கும் சுவை, மருத்துவ குணம், என அனைத்து அம்சங்களும் இருந்தும் நமது உணவுப் பண்டங்கள் தனக்கான இடத்தினை இன்று மெல்ல இழந்து வருகின்றன. எனவே இதனை மீட்கும் நோக்கில், சத்தான, சுவையான நம்ம ஊர்ப் பண்டங்களை அவை புகழ்பெற்ற ஊர்களில் இருந்து மக்களிடம் நேரடியாக கொண்டு சேர்க்கும் முதல் முயற்சியாக தொடங்கப்பட்டதே நேட்டிவ்ஸ்பெஷல்.காம் (nativespecial.com) இணையம்.

Deepavali Special Sweets and snacks order to nativespecial

அடுத்து தரமான நம் பண்டங்களை ப்ரெஷ்ஷாக வாடிக்கையாளரிடம் கொண்டு சேர்க்க வேண்டிய அவசியத்தை உணர்ந்து அதற்கென தனித்த வழிமுறைகளை ஏற்படுத்தி இன்று வெற்றிகரமாக முன்னணி ஈ-காமர்ஸ் நிறுவனங்களை மிஞ்சும் அதிவேக டெலிவரியினை சாத்தியப் படுத்தி இருக்கிறோம். பிஸ்ஸா, குர்குரே, லேஸ், ஐஸ்க்ரீம் போன்ற பண்டங்கள் ஆக்கிரமித்திருந்த எங்கள் வாடிக்கையாளர்கள் குழந்தைகளின் எண்ணங்களில், இப்போது, கை முறுக்கு, எள்ளு மிட்டாய், கடலை மிட்டாய், ஓட்டுப் பக்கோடா போன்ற சுவை மிகுந்த சத்தான நம்ம ஊர்ப் பண்டங்களைக் கொண்டு சேர்த்திருப்பது மிகுந்த மன நிறைவை ஏற்படுத்தி இருக்கிறது" என்று தங்களின் நோக்கத்தைத் தெளிவாக எடுத்துரைத்தனர்.

Deepavali Special Sweets and snacks order to nativespecial

நாட்டுக் கருப்பட்டி, கரூர் தேங்காமிட்டாய், மணவாசி முறுக்கு, கருப்பட்டி மைசூர்பாக், நாட்டுக் கோழி சிக்கன் மசாலா, திருநெல்வேலி அல்வா.. இப்படி பெயரைக் கேட்டதும் நாவில் நீர் ஊற வைக்கும் நம்ம ஊர் சிறப்புமிக்க அனைத்துப் பண்டங்களையும் ஒரே இடத்தில் கிடைக்கச் செய்திருக்கும் நேட்டிவ்ஸ்பெஷல்.காம்(nativespecial.com) இணைய முயற்சி நமது அடுத்த தலைமுறை குழந்தைகளுக்கு நம் பாரம்பரிய பண்டங்களை அறிமுகப்படுத்தும் பெரு வாய்ப்பினை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்தியா மட்டுமின்றி அமெரிக்கா, லண்டன், கனடா என அனைத்து நாடுகளுக்கும் அதிவேக ஐந்து நாள் டெலிவரி மற்றும் உலகத் தர ப்ரொபெஷனல் சேவை என நாளைய நடைமுறை மாற்றத்துக்கான வித்துக்களான இத்தகைய புதிய முயற்சிகள் நிச்சயமாக நம் பாராட்டுக்கும், ஆதரவுக்கும் உரியவை. பீசா, பர்கர் களின் மணம் வீசும் தெருக்களில் நம்ம ஊர்ப் பாரம்பரிய பண்டங்களின் மண் வாசனையினை மெல்லிய தென்றலாய்க் கொணர்ந்து சேர்க்கிறது நேட்டிவ்ஸ்பெஷல்.காம். வாழ்த்துக்கள்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X