நோ பற்றாக்குறை - மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் 1.24 கோடி கொரோனா தடுப்பூசிகள்: மத்திய அரசு
டெல்லி: மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிடம் மொத்தம் 1.24 கோடி கொரோனா தடுப்பூசிகள் கையிருப்பில் இருப்பதாக மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை: நாடு தழுவிய தடுப்பூசித் திட்டத்தின் ஒரு பகுதியாக மத்திய அரசு இதுவரை, 32.92 கோடிக்கும் அதிகமான (32,92,01,800) கொவிட் தடுப்பூசி டோஸ்களை, மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும், இலவசமாக வழங்கியுள்ளது.
இன்று காலை 8 மணி வரையிலான தரவுகளின் அடிப்படையில், மொத்தம் 31,67,50,891 டோஸ் தடுப்பூசி (வீணானவை உட்பட) பயன்படுத்தப்பட்டுள்ளன.

மாநிலங்களில் 1.24 கோடி தடுப்பூசிகள்
சுமார் 1.24 கோடி (1,24,50,909) கொவிட் தடுப்பூசி டோஸ்கள், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் கையிருப்பில் உள்ளன. அடுத்த மூன்று நாட்களில் கூடுதலாக 94,66,420 தடுப்பூசி டோஸ்களை மத்திய அரசு, மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் வழங்கவிருக்கிறது.

50,000க்கும் கீழ் பாதிப்பு
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 48,786 பேர் புதிதாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, தொடர்ந்து நான்காவது நாளாக அன்றாட புதிய பாதிப்புகள் 50,000-க்கும் கீழ் பதிவாகியுள்ளது.

கொரோனா ஆக்டிவ் கேஸ்கள்
நம் நாட்டில் கொவிட் தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 5,23,257 ஆகக் குறைந்துள்ளது. இது, நாட்டின் மொத்த பாதிப்பில் வெறும் 1.72 சதவீதமாகும். சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையில் கடந்த 24 மணி நேரத்தில் 13,807 சரிந்துள்ளது.

டிஸ்சார்ஜ் அதிகரிப்பு
தொடர்ந்து 49-வது நாளாக, புதிய பாதிப்புகளை விட தினசரி குணமடைவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 61,588 பேர் குணமடைந்தனர். கடந்த 24 மணி நேரத்தில் புதிதாகத் தொற்றுக்கு ஆளானவர்களை விடக் கூடுதலாக 12,802 பேர் குணமடைந்தனர். இதுவரை மொத்தம் 2,94,88,918 பேர் கொவிட்-19 தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். இதன்படி குணமடைந்தவர்களின் விழுக்காடு 96.97 சதவீதமாக அதிகரித்துள்ளது.

41 கோடி பரிசோதனைகள்
கடந்த 24 மணி நேரத்தில் 19,21,450 பரிசோதனைகளும், இந்தியாவில் இதுவரை மொத்தம் 41,20,21,494 பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வாராந்திர தொற்று உறுதி விழுக்காடு 2.64 சதவீதமாகவும், தினசரி தொற்று உறுதி விகிதம் 2.54 சதவீதமாகவும் இன்று பதிவாகியுள்ளது. தொடர்ந்து 24 நாட்களாக இந்த எண்ணிக்கை 5 சதவீதத்திற்கும் குறைவாக உள்ளது.
-
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ்












Click it and Unblock the Notifications