டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

1,000 கி.மீ தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்க 100 நாள் திட்டம் தயார்.. பதவியேற்றதும் அசத்த போகும் மோடி

Google Oneindia Tamil News

டெல்லி: மக்களவை தேர்தலில் அபார வெற்றி பெற்று மீண்டும் பிரதமராக நாளை பெறுப்பேற்க உள்ளார் மோடி. இந்நிலையில் புதிய அரசு பதவியேற்ற பின்னர் 100 நாட்களில், சுமார் ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்திற்கு தேசிய நெடுஞ்சாலை அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மக்களை பற்றியெல்லாம் கவலைபடாதவர் மோடி, அவரது ஆட்சி தொழிலதிபர்களுக்கானது. ஏழை மக்களுக்கானது அல்ல என்றும், ரபேல் குறித்த ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்தும் கடந்த முறை போல இந்த முறையும் தேசிய ஜனநாயக கூட்டணி அபார வெற்றி பெற்றுள்ளது. ராகுல் தலைமையில் தேர்தலில் களம் கண்ட காங்கிரஸ் 2014-ம் ஆண்டை போலவே இம்முறையும் எதிர்கட்சி அந்தஸ்தை கூட பெற முடியாமல் விக்கித்து நிற்கிறது.

இந்நிலையில் நாளை மாலை 7 மணியளில் பிரதமராக மோடியும், மற்ற அமைச்சர்களும் பதவியேற்க உள்ளனர். இதற்காக பல்வேறு நாட்டு தலைவர்கள் மற்றும் பிரபலங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

போராட்டத்துல கலந்துக்க மாட்டீங்க.. அரசியலுக்கு மட்டும் வந்துடுவீங்களா? நடிகர்களை விளாசிய சீமான்! போராட்டத்துல கலந்துக்க மாட்டீங்க.. அரசியலுக்கு மட்டும் வந்துடுவீங்களா? நடிகர்களை விளாசிய சீமான்!

துரித கதியில் ரெடியாகும் புதிய திட்டம்

துரித கதியில் ரெடியாகும் புதிய திட்டம்

இந்நிலையில் மோடி தலைமையில் புதிய அமைச்சரவை அமைந்தவுடன் அடுத்து வரும் 100 நாட்களுக்குள் சுமார் ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்திற்கு தேசிய நெடுஞ்சாலைகளை அமைக்க, சாலை போக்குவரத்து அமைச்சகம் இலக்கு நிர்ணயித்துள்ளதாக தெரிகிறது. கடந்த நிதியாண்டில், சாலை போக்குவரத்து அமைச்சராக நிதின் கட்கரி இருந்த போது 5,489 கிலோ மீட்டர் அளவிற்கு நெடுஞ்சாலை அமைக்க திட்டமிடப்பட்டு, 10,855 கிலோ மீட்டர் தூரத்திற்கு தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டன. இந்நிலையில் தற்போது புதிய ஆட்சி அமைந்ததிலிருந்து 100 நாட்களில் ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவிற்கு தேசிய நெடுஞ்சாலை அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த இலக்கை அடைவது தொடர்பான விரிவான திட்டத்தை தயாரித்து தரும்படி பிரதமர் அலுவலகம் கேட்டுக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. இத்திட்டம் குறித்து புதிய மத்திய அமைச்சரவை கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட உள்ளது.

வரும் நிதியாண்டில் செலவிடப்பட உள்ள தொகை

வரும் நிதியாண்டில் செலவிடப்பட உள்ள தொகை

பிரதமர் அலுவலகம் கேட்டுக் கொண்டபடி 100 நாள் திட்டத்தை தயாரிக்க போக்குவரத்து செயலர் சஞ்சய் ரஞ்சன் தலைமையில் உயரதிகாரிகள் கூடி ஆலோசனை நடத்தியுள்ளனர். இந்த கூட்டத்தில் நடப்பு நிதியாண்டில் நாடு முழுவதும் ரூ.86,660 கோடி செலவில் சுமார் 6,000 கிலோ மீட்டர் தூரத்திற்கு தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

தாமதமாகும் பல முக்கிய திட்டங்கள்

தாமதமாகும் பல முக்கிய திட்டங்கள்

கடந்த 2014 முதல் தற்போது வரையிலாக காலக்கட்டத்தில் சுமார் 56, 566 கிலோ மீட்டர் தூரத்திற்கு தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் தேர்தலின் போது பாஜக அளித்த வாக்குறுதியில், தேசிய நெடுஞ்சாலைகளின் தூரம் 1,32,500 கிலோ மீட்டரிலிருந்து 2 லட்சம் கிலோ மீட்டராக மாற்றப்படும் என கூறியிருந்தது. இந்நிலையில் போக்குவரத்து அமைச்சகம் நடத்திய ஆய்வு ஒன்றில் ரூ.1.66 லட்சம் கோடி மதிப்பிலான 19,738 கிலோ மீட்டர் தொலைவிற்கு நெடுஞ்சாலை அமைக்கும் சுமார் 442 முக்கிய திட்டங்கள் தாமதமாவது தெரிய வந்துள்ளது. இதில் இந்திய நெடுஞ்சாலை ஆணையம் செயல்படுத்தி வரும் முக்கிய 13 திட்டங்களும் அடக்கம்.

கான்ட்ராக்டர்களின் மோசமான செயல்பாடுகள்

கான்ட்ராக்டர்களின் மோசமான செயல்பாடுகள்

2 ஆண்டுகளுக்கு மேல் தாமதமாகியுள்ள தேசிய நெடுஞ்வாலை திட்டங்கள் குறித்து ஆய்வறிக்கையும் தயாரிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் நெடுஞ்சாலை திட்டங்களுக்கு நிலம் கையகப்படுத்துவதில், ஏராளமான இடங்களில் பிரச்சனைள் நிலவி வருவதாக கூறப்பட்டுள்ளது. மேலும் பொருட்களை இடமாற்றம் செய்வதில் ஏற்படும் இடர்பாடு, தேவையான பொருட்கள் மற்றும் மண் தக்க சமயத்தில் கிடைக்காதது, கான்ட்ராக்டர்களின் மோசமான செயல்பாடுகள் உள்ளிட்டவற்றாலும் பல திட்டங்கள் மந்த கதியில் நடப்பதாக கூறப்பட்டுள்ளது. இவை தவிர சுற்றுச்சூழல் துறை ஒப்புதல் கிடைப்பதில் ஏற்படும் தாமதம் , வனவிலங்கு நடமாட்டம் உள்ளிட்டவையும் கூறப்பட்டுள்ளது

English summary
In the 100 days after Modi's new government took over, the target is set to set the national highway for a thousand kilometers....
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X