திரெளபதி முர்மு உள்பட இந்தியாவின் 15 ஜனாதிபதிகளும்.. 15 சுவாரசிய தகவல்களும்.. முழுவிபரம்
டெல்லி: இந்தியாவில் அப்துல் கலாம் உள்பட 14 பேர் ஜனாதிபதியாக பொறுப்பு வகித்துள்ள நிலையில் புதிதாக திரெளபதி முர்மு பொறுப்பு ஏற்க உள்ளார். இந்நிலையில் தான் இந்தியாவின் 15 ஜனாதிபதிகள் பற்றிய 15 சுவாரஸ்யமான தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் ஜூலை 24ம் நிறைவு பெறும் நிலையில் ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டது. புதிய ஜனாதிபதிக்கான தேர்தலில் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் திரெளபதி முர்முவும், எதிர்க்கட்சிகள் சார்பில் யஷ்வந்த் சின்ஹாவும் களமிறங்கினர்.
கடந்த 18 ம் தேதி நாடு முழுவதும் ஓட்டுப்பதிவு நடந்தது. டெல்லி நாடாளுமன்றம், ஒவ்வொரு மாநிலங்களின் சட்டசபைகளில் எம்பி, எம்எல்ஏக்கள் வாக்களித்தனர். இதில் திரெளபதி முர்மு வெற்றி பெற்றுள்ளார். இவர் நாட்டின் 15வது ஜனாதிபதியாக ஜூலை 25ல் பதவி ஏற்க உள்ளார். இந்நிலையில் தான் இந்தியாவின் 15 ஜனாதிபதிகள் பற்றிய 15 சுவாரஸ்யமான தகவல்கள் வருமாறு:

தொடர்ந்து 2 முறை ஜனாதிபதி பதவி
நாட்டின் முதல் ஜனாதிபதியாக ராஜேந்திர பிரசாத் பொறுப்பு வகித்தார். இன்று வரை இவர் மட்டுமே தொடர்ந்து 2 முறை ஜனாதிபதி பதவி வகித்த பெருமையை பெற்றுள்ளார். இரண்டாவது ஜனாதிபதியாக டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் செயல்பட்டார். துணை ஜனாதிபதியாக இருந்து ஜனாதிபதி பொறுப்புக்கு வந்த பெருமையை இவர் பெற்றுள்ளார்.

பதவிக்காலத்தில் மரணமடைந்த ஜனாதிபதிகள்
நாட்டின் 3வது ஜனாதிபதியாக ஜாகீர் உசேன் தேர்வு செய்யப்பட்டார். இதன்மூலம் இந்தியாவின் முதல் முஸ்லிம் ஜனாதிபதி என்ற பெயரை பெற்றார். இவர் தனது பதவிக்காலத்தில் இறந்தார். இதனால் 2 ஆண்டுக்கும் குறைவான நாட்கள் மட்டுமே ஜனாதிபதியாக இவர் இருந்தார். இதையடுத்து விவி கிரி என்பவர் இடைக்கால ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டார். இதன்மூலம் நாட்டின் 4வது ஜனாதிபதியானர். இவரையடுத்து 5வது ஜனாதிபதியாக பக்ருத்தீன் அலி அகமது தேர்வானார். இவர் 2வது முஸ்லிம் பிரதமர் ஆவார். இவரது காலக்கட்டத்தில் தான் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டது. இவரும் தனது பதவியில் இருக்கும்போது இறந்தார். இதனால் பதவியில் இருந்தபோது இறந்த 2வது ஜனாதிபதியானார். இதற்கு முன்பு ஜாகீர் உசேன் தனது பதவிக்காலத்தில் மரணம் அடைந்திருந்தார்.

இளம் ஜனாதிபதி
நாட்டின் 6வது ஜனாதிபதியாக நீலம் சஞ்சீவ ரெட்டி பொறுப்பேற்றார். இவருக்கு 64 வயதில் இந்த பதவி கிடைத்தால் நாட்டின் இளம் ஜனாதிபதி என்ற பெயரை பெற்றிருந்தார். அதோடு இவர் போட்டியின்றி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டது அவருக்கு சிறப்பான ஒன்றாக இன்று வரை அமைந்துள்ளது. 7 வது ஜனாதிபதியாக ஜியானி ஜெய்ல் சிங் தேர்வானார். இதன்மூலம் சீக்கியர் ஒருவர் முதல் முதலாக ஜனாதிபதி இருக்கையை அலங்கரித்த வரலாறு எழுதப்பட்டது.

4 பிரதமர்களுடன் பணி
நாட்டின் 8 வது ஜனாதிபதியாக ராமசாமி வெங்கடராமன் செயல்பட்டு வந்தார். இவர் தனது பதவிக்காலத்தில் 4 பிரதமர்களை பார்த்த அனுபவம் கொண்டவர். மேலும், விபி சிங், சந்திரசேகர், பிவி நரசிம்மராவ் உள்ளிட்டவர்களை பிரதமராக நியமித்தார். நாட்டின் 9 வது ஜனாதிபதியாக சங்கர் தயால் சர்மா செயல்பட்டார். இவரும் தனது பதவிக்காலத்தில் 4 பிரதமர்களுடன் பணி செய்தார். குறிப்பாக தனது பதவிக்காலத்தில் கடைசி ஆண்டில் மட்டும் வாஜ்பாய், தேவேகவுடா, ஐகே குஜ்ரால் ஆகியோருக்கு பதவிபிரமாணம் செய்த வைத்தார்.

ஏபிஜே அப்துல் கலாம்
நாட்டின் 10வது ஜனாதிபதியாக கேஆர் நாராயணன் இருந்தார். தலித்தாக இருந்து ஜனாதிபதியான முதல் நபர் இவர் தான். மேலும் அதிக வயதில் 76 வயது 271 நாளில் ஜனாதிபதியானார். இதன்மூலம் நாட்டில் அதிக வயதில் ஜனாதிபதியாக தேர்வான நபர் என்ற பெருமையை பெற்றார். நாட்டின் 11வது ஜனாதிபதியாக தமிழகத்தின் ஏபிஜே அப்துல் கலாம் தேர்வு செய்யப்பட்டார். எளிமையான செயல்பாட்டால் மக்கள் ஜனாதிபதி என பெயர் பெற்றார். மேலும் ஜனாதிபதியாக தேர்வான முஸ்லிம்களில் ஒருவர் கூட முழு பதவிக்காலத்தை பூர்த்தி செய்யாத நிலையில் அதனை ஏபிஜே அப்துல் கலாம் நிறைவேற்றி அசத்தினார்.

முதல் பெண் ஜனாதிபதி
நாட்டின் 12வது ஜனாதிபதியாக பிரதீபா பட்டீல் தேர்வானார். இதன்மூலம் ஜனாதிபதியாக தேர்வான முதல் பெண் என்ற பெயரை பெற்றார். 14வது ஜனாதிபதியாக தேர்வான பிரனாப் முகர்ஜி தேர்வு செய்யப்பட்டார். இதன்மூலம் பெங்காலி மொழி பேசும் ஒருவர் ஜனாதிபதி அரியனையை அலங்கரித்தார். நாட்டின் 14வது ஜனாதிபதியாக இருந்த ராம்நாத் கோவிந்த் செயல்பட்டு வருகிறார். இவர் எதிர்க்கட்சிகளின் வேட்பாளரை தோற்கடித்து ஜனாதிபதி பதவிக்கு வந்த பாஜக வேட்பாளர் என்ற பெருமையை இவர் பெற்றிருந்தார். இதன் தொடர்ச்சியாக தான் தற்போது திரெளபதி முர்மு வெற்றி பெற்று நாட்டின் 15வது ஜனாதிபதியாகவும், பழங்குடி வகுப்பை சேர்ந்த முதல் ஜனாதிபதியாகவும் பதவி ஏற்க உள்ளார்.
Recommended Video

கட்சிகள் சார்ந்தவர்கள் அதிக தேர்வு
நாட்டில் தற்போது வரை 14 பேர் ஜனாதிபதியாக செயல்பட்டுள்ளனர். இதில் 11 பேர் அரசியல் கட்சிகளின் பின்புலம் கொண்டவர்களாகும். இதில் 8 பேர் காங்கிரஸ் கட்சியையும், 2 பேர் பாஜகவையும், ஒருவர் ஜனதா கட்சியையும் சேர்ந்தவர்கள் ஆவார்கள். தற்போது புதிதாக ஜனாதிபதி பொறுப்பு ஏற்க உள்ள திரெளபதி முர்முவும் பாஜகவை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications