உஷார்.. இந்தியாவில் திடீரென்று 16 சதவீதம் வரை அதிகரித்த கொரோனா பாதிப்பு.. மக்களே கவனமாக இருங்க!
டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 19,893 பேர் பாதிக்கப்பட்டனர். நேற்றைய தினத்தை ஒப்பிடும்போது இன்று 16 சதவீதம் வரை கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் தகவல் மூலம் தெரியவந்துள்ளது.
இந்தியாவில் கடந்த 2020ம் ஆண்டின் துவக்கத்தில் கொரோனா பரவ துவங்கியது. அதன்பிறகு ஊரடங்கு அமலானது. தற்போது வரை கொரோனா 3 அலைகளாக பொதுமக்களை தாக்கியுள்ளது.
இந்நிலையில் கடந்த சில காலமாக குறைந்த கொரோனா பாதிப்பு தற்போது மீண்டும் தலைத்தூக்க ஆரம்பித்துள்ளது. இந்நிலையில் இந்தியாவில் அனைத்து மாநில கொரோனா பாதிப்பு குறித்து மத்திய அரசின் சுகாதாரத்துறை தினமும் அறிக்கை வெளியிட்டு வருகிறது.

19,893 பேர் பாதிப்பு
அந்த வகையில் இன்று காலை சுகாதாரத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் கொரோனாவால் 19,893 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் இந்தியாவில் கெரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 கோடியே 40 லட்சத்து 87 ஆயிரத்து 037 ஆக அதிகரித்துள்ளது.

16 சதவீதம் வரை அதிகரிப்பு
நேற்றைய தினம் இந்தியாவில் கொரோனாவால் மொத்தம் 17,135 பேர் மட்டுமே பாதிக்கப்பட்ட நிலையில் இன்று அது அதிகரித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 19,863 பேர் பாதிக்கப்பட்டதால் நேற்றைய தினத்தை ஒப்பிடும்போது இன்று 16 சதவீதம் வரை கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. இதனால் பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டியது அவசியமாகும்.

98.50 சதவீதம் பேர் மீண்டனர்
மேலும் கடந்த 24 மணிநேரத்தில் 20,419 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி உள்ளனர். இதன்மூலம் இந்தியாவில் கெரோனா குணமானவர்களின் எண்ணிக்கை 4 கோடியே 34 லட்சத்து 24 ஆயிரத்து 029 ஆக அதிகரித்துள்ளது. அதாவது நாட்டில் கொரோனா பாதித்து மீண்டவர்களின் எண்ணிக்கை என்பது 98.50 சதவீதமாக உள்ளது.

53 பேர் பலி
மேலும் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் 53 பேர் பலியாகி உள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை 5 லட்சத்து 26 ஆயிரத்து 530 ஆக அதிகரித்துள்ளது. தற்போது இந்தியாவில் 1 லட்சத்து 36 ஆயிரத்து 478 பேர் கொரோனா சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தடுப்பூசி தான் ஆயுதம்
பொதுமக்கள் கொரோனா தொற்றில் இருந்து தங்களை தற்காத்து கொள்ள தடுப்பூசி தான் சிறந்த ஆயுதம் என மத்திய அரசு, மாநில அரசு கூறி வருகிறது. ஏற்கனவே 2 டோஸ் கொரோனா தடுப்பூசி இலவசமாக போடப்பட்டு வரும் நிலையில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசியும் செப்டம்பர் மாதம் 28 ம் தேதி வரை 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் அரசு மருத்துவமனை, முகாம்களில் இலவசமாக போடப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் 38 லட்சத்து 20 ஆயிரத்து 676 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications