டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மாறி மாறி பதிவாகும் கொரோனா! இந்தியாவில் 24 மணி நேரத்தில் அதிகரித்த பாதிப்பு! பலி எண்ணிக்கை எவ்வளவு?

Google Oneindia Tamil News

டெல்லி : இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு ஏற்ற இறக்கத்துடன் பதிவாகி வரும் நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 20,408 பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 49 பேர் உயிரிழந்துள்ளனர் என மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா மூன்றாவது அலையின் தாக்கம் ஜனவரி மாத இறுதியிலும், பிப்ரவரி மாதத் தொடக்கத்திலும் தீவிரமாக இருந்தது. அப்போது குறையத் தொடங்கிய கொரோனா பாதிப்பு தற்போது மீண்டும் வேகமாக அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

இந்தியாவில் மட்டுமல்லாது உலகம் முழுவதிலும் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தியாவை பொறுத்தவரை நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக கையாளப்படாததாலேயே கொரோனா பாதிப்பு மாறி மாறி பதிவாகி வருகிறது.

7 மாதங்களில் இல்லாத உச்சம்.. ஒரே நாளில் 2,726 பேருக்கு கொரோனா தொற்று.. அச்சத்தில் தலைநகர் மக்கள்! 7 மாதங்களில் இல்லாத உச்சம்.. ஒரே நாளில் 2,726 பேருக்கு கொரோனா தொற்று.. அச்சத்தில் தலைநகர் மக்கள்!

கொரோனா பாதிப்பு

கொரோனா பாதிப்பு

மும்பை, டெல்லி போன்ற நகரங்களில் அதிகமாகி வரும் நோய்தொற்று காரணமாக கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையிலும், பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக மொத்த பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்துள்ளது. சில மாநிலங்களில் நோய் பாதிப்பு எண்ணிக்கையை வெளியிடுவதில் தாமதம் காரணமாகவே நோய் பாதிப்பு எண்ணிக்கையில் ஏற்றத்தாழ்வு இருப்பதாக மருத்துவ நிபுணர்கள் கூறிவருகின்றனர்.

லேசாக உயர்வு

லேசாக உயர்வு

இந்நிலையில் இந்தியாவில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் சுமார் 20 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியான நிலையில், மீண்டும் பாதிப்பு சிறிது சிறிதாக குறைந்து, கடந்த 3 நாட்களாக 16 ஆயிரம் என்ற அளவில் வருகிறது. நேற்று முன்தினம் 16,047 பேருக்கும், நேற்று 16,299 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்று பாதிப்பு லேசாக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 16,561பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4 கோடியே 42 லட்சத்து 23 ஆயிரத்து 557 ஆக அதிகரித்துள்ளது.

பலி எண்ணிக்கை

பலி எண்ணிக்கை

அதேபோல் கொரோனா காரணமாக இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் ஒரே நாளில் 49 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 26 ஆயிரத்து 928 ஆக உயர்ந்துள்ளது. சுமார் சில நாட்களாக கொரோனா மரணங்கள் 50க்கு மேலே பாதிவாகி வருந்துள்ள நிலையில் தற்போது லேசாக குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது . கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 18 ஆயிரத்து 53 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 35 லட்சத்து 73 ஆயிரத்து 94 ஆக உயர்ந்துள்ளது.

தடுப்பூசி அளவு

தடுப்பூசி அளவு

மேலும் கொரோனா தொற்றுக்கு தற்போது 1 லட்சத்து 23 ஆயிரத்து 535 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், சிகிச்சை பெறுவோர் சிக்கல் அளிக்கும் விதமாக ஒரு லட்சத்திற்கு மேலேயே தொடர்வது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் இதுவரை 207 கோடியே 47 லட்சத்து 40 ஆயிரத்து 951டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதில் முதல் தவணையாக 102 கோடியே 28 லட்சத்து 4 ஆயிரத்து 816 டோஸ்களும், இரண்டாம் தவணையாக 93 கோடியே 70 லட்சத்து 61 ஆயிரத்து 259 டோஸ்களும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 11 கோடியே 48 லட்சத்து 74 ஆயிரத்து 876 டோஸ்களும் போடப்பட்டுள்ளது என மத்திய அரசு கூறியுள்ளது.

English summary
20408 people have been infected and 49 people have died due to Corona in the last 24 hours In India ; இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 20408 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் 49 பேர் உயிரிழந்துள்ளனர்.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X