டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சீனாவுக்கு செக்.. அடுத்த வாரம் இந்தியா வரும் 3 ரபேல் விமானங்கள்.. விமானப்படை அதிரடி திட்டம்

Google Oneindia Tamil News

டெல்லி: அடுத்த கட்டமாக மூன்று ரபேல் போர் விமானங்கள் பிரான்ஸ் நாட்டில் இருந்து அடுத்த வாரம் இந்தியாவுக்கு வரவுள்ளது.

கடந்த 2016ஆம் ஆண்டு சுமார் 59 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் 36 ரபேல் போர் விமானங்களை வாங்க பிரான்ஸ் நாட்டுடன் இந்தியா ஒப்பந்தம் மேற்கொண்டது. இது இந்திய ராணுவத்தை மேலும் வலுவானதாக மாற்றும்.

சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட அண்டை நாடுகளுடன் தற்போது இணக்கமான சூழ்நிலை இல்லாத நிலையில், இந்த விமானங்கள் இந்தியாவின் பாதுகாப்பு திறனை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த வாரம் 3 ரபேல் விமானங்கள்

அடுத்த வாரம் 3 ரபேல் விமானங்கள்

இந்நிலையில், அடுத்த கட்டமாக மூன்று ரபேல் போர் விமானங்கள் பிரான்ஸ் நாட்டில் இருந்து அடுத்த வாரம் இந்தியாவுக்கு வரவுள்ளது. ஐக்கிய அமீரகத்தில் தரையிறங்க வாய்ப்பு கிடைத்தால் அங்கு எரிபொருள் நிரப்பப்படும் என்றும் இல்லையென்றால் வானத்திலேயே பறக்கும்போது எரிபொருள் நிரப்பப்படும் என்றும் இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுவரை எத்தனை

இதுவரை எத்தனை

ஏற்கனவே, 2020ஆம் ஆண்டு ஜூலை முதல் 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வரையிலான காலகட்டத்தில் 11 ரபேல் விமானங்களை பிரான்ஸ் அளித்துள்ளது. இதுபோக ஏழு ரபேல் விமானங்களில் இந்தியா விமானப்படை வீரர்கள் பிரான்ஸில் பயிற்சி பெற அளிக்கப்பட்டுள்ளது. மேலும், ஒன்பது விமானங்கள் அடுத்த மாதம் இந்தியாவுக்கு டெலிவரி செய்யப்படவுள்ளது.

அம்பாலா தளம்

அம்பாலா தளம்

முதல் 18 விமானங்கள் அம்பாலா போர் தளத்தில் தற்போது பணி அமர்த்தப்பட்டுள்ளன. அம்பாலா தளம் லடாக் பகுதிக்கு அருகிலேயே அமைந்துள்ளது. தற்போது லடாக் பகுதியிலும் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ள நிலையில் இந்த விமானங்கள் இந்தியாவுக்குச் சாதகமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஹசிமாரா போர் தளம்

ஹசிமாரா போர் தளம்

அதேபோல அடுத்த 18 போர் விமானங்கள் ஹசிமாரா போர் தளத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. இது அருணாச்சல பிரதேசம் மற்றும் சீக்கிம் எல்லைகளில் சீனாவின் நடவடிக்கைகளைக் கண்காணிக்க உதவும். இந்த ஹசிமாரா போர் தளம் ஒப்பிட்டளவில் சற்று பழைய போர் தளமாகும். எனவே உடனடியாக தளத்தை இந்த காலத்திற்கு ஏற்ற வகையில் மாற்றியமைக்கும் முயற்சிகளிலும் இந்திய ராணும் ஈடுபட்டுள்ளது.

English summary
India to receive the next batch of Rafael jets next week
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X