மக்களே உஷார்.. முடிக்கு ஆசைப்பட்டு உயிர் பலியான டிவி பிரபலம்.. வலைவிரிக்கும் ஆபத்து!
டெல்லி: முடி மாற்று அறுவை சிகிச்சை செய்த இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் நான்கு பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முடி உதிர்தல் என்பது ஆண்களின் பிரதான பிரச்னைகளில் ஒன்றாக இருக்கிறது. இதற்கென லட்சக்கணக்கில் அவர்கள் செலவு செய்ய தயாராக இருக்கிறார்கள்.
ஆனால் இதனை பயன்படுத்தி சில போலி கிளினிக்குகள் பணம் பறிப்பதை வேலையாக தொடர்ந்து செய்து வருகிறது. அப்படியொரு இடத்தில் சிக்கிதான் டெல்லி இளைஞர் உயிரிழந்துள்ளார்.

விளம்பரம்
டெல்லியில் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிந்து வந்தவர்தான் அதர் ரஷீத். இவர் இந்த தொலைக்காட்சியின் நிர்வாகியும் கூட. இவ்வாறு இருக்கையில் கடந்த சில ஆண்டுகளாக தலைமுடி உதிர்தல் இவருக்கு பெரும் பிரச்னையாக இருக்கிறது. இதனையடுத்து முடி மாற்று அறுவை சிகிச்சை செய்தால் பலன் இருக்கும் என்று நண்பர்கள் பலர் இவரிடம் கூறியுள்ளனர். இவருக்கும் இது தொடர்பான யோசனை இருந்திருக்கிறது. ஆனால் செலவுகளுக்கு பயந்து அந்த பக்கம் போகாமல் இருந்திருக்கிறார். இந்த நேரத்தில்தான் ஒரு விளம்பரத்தை இவர் பார்த்திருக்கிறார். குறைந்த விலையில் முடி மாற்று அறுவை சிகிச்சை செய்யப்படும் என்பதுதான் அந்த விளம்பரம்.

பரிசோதனை
உடனடியாக அவர் சம்பந்தப்பட்ட எண்ணுக்கு அழைத்து பேசியுள்ளார். மறுமுனையில், "செஞ்சுடலாம் சார். உங்களை ஆளையே மாத்திடுறோம் பாருங்க" என இனிமையான பதில்கள் வந்துள்ளன. இதனையடுத்து அவர் கிளினிக் சென்று பார்த்திருக்கிறார். விளம்பரத்தில் இருந்ததைப் போல ஆடம்பரமான கிளினிக் இல்லையென்று தெரிந்த அதர் ரஷீத் சற்று ஏமாற்றம் அடைந்துள்ளார். பின்னர் அவரிடம் நைசாக பேசிய கிளின் ஊழியர்கள் சிகிச்சைக்கு சம்மதம் பெற்றுள்ளனர். முதல் கட்டமாக குறிப்பிட்ட அளவு தொகையை செலுத்த வலியுறுத்தப்பட்டுள்ளது. பின்னர் பரிசோதனைகளை மேற்கொள்ளவும் பணம் கறக்கப்பட்டுள்ளது. ஒருவழியாக பரிசோதனைகள் முடிந்து அறுவை சிகிச்சை நாளும் வந்துள்ளது.

அறுவை சிகிச்சை
திட்டமிட்டபடி சிலர் அதர் ரஷீதுக்கு அறுவை சிகிச்சையை செய்து முடித்துள்ளனர். ஆனால் அடுத்த நாளிலிருந்து அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இது குறித்து கிளினிக்கை அணுகியபோது சில மருந்துகளை கொடுக்கப்பட்டுள்ளது. அதை எடுத்துக்கொண்ட பின்னரும் அவருக்கு உடல்நலக்குறைவு சரியாகவில்லை. கடுமையான உடல் வலியினால் அவதிப்பட்ட அதர் ரஷீதுக்கு உடல் முழுவதும் கருப்பு நிறத்தில் கொப்பளங்கள் தோன்ற ஆரம்பித்தன. இறுதியில் அவர் உயிரிழந்துவிட்டார். இந்த சம்பவம் டெல்லியில் பெரும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக கிளினிக் நடத்தி வந்த இருவரும், அறுவை சிகிச்சை செய்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

உயிரிழப்பு
இதனையடுத்து இந்திய முடி மறுசீரமைப்பு அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கத்தின் மருத்துவர்கள் சில விழிப்புணர்வு செய்திகளை கூறியுள்ளனர். அவர்கள் கூறியதாவது, "இந்த முடி மாற்று அறுவை சிகிச்சை செய்ய அதிக அளவில் பணம் செலவாகும். குறைந்தபட்சம் ரூ.3.5 லட்சம் செலவாகும். அதேபோல, இந்த சிகிச்சைக்கு 8-9 மணி நேரங்கள் வரை எடுத்துக்கொள்ளப்படும். எனவே இவை இரண்டும் குறைவாக இருக்கிறது என்று யாரேனும் விளம்பரம் செய்தால் உஷாராக இருங்கள். சமீப நாட்களாக காளான்களை போல கிளினிக்குகள் முளைக்க தொடங்கிவிட்டன. இதில் YouTube பார்த்துவிட்டு கற்றுக்கொண்டுவிட்டு பலர் அறுவை சிகிச்சைகளை மேற்கொள்கின்றனர்.

விழிப்புணர்வு
முறையான பயிற்சி பெற்ற பின்னர்தான் இந்த அறுவை சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும். அதேபோல அறுவை சிகிச்சையின்போது மயக்க மருந்து நிபுணர்கள், பிளாஸ்டிக் சர்ஜரி நிபுணர்களின் ஆலோசனைகளையும் பெற வேண்டும். இவையனைத்தும் எல்லா கிளினிக்குகளிலும் சாத்தியப்படுவதில்லை. எனவே சிகிச்சை மேற்கொள்ளும் முன் இவற்றையெல்லாம் உறுதி செய்துகொள்ள வேண்டும்" என்று கூறியுள்ளனர். முறையற்ற சிகிச்சையால் இளைஞர் ஒருவர் உயிரிழந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்!












Click it and Unblock the Notifications