திகார் சிறையில் வழுக்கி விழுந்த ஆம்ஆத்மி மாஜி அமைச்சர் சத்யேந்திர ஜெயின்.. மருத்துவமனையில் அனுமதி
டெல்லி: ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட டெல்லி ஆம்ஆத்மி அமைச்சர் சத்யேந்திர ஜெயின் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் தான் அவர் குளியலைறையில் வழுக்கி விழுந்ததாக கூறி போலீசார் மருத்துவமனையில் அனுமதித்துள்ள தகவல் வெளியாகி உள்ளது.
டெல்லியில் ஆம்ஆத்மி அரசின் ஆட்சி நடக்கிறது. முதல்வராக அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளார். இவரது அமைச்சரவையில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தவர் சத்யேந்திர ஜெயின். இவர் மீது ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் சிபிஐ கடந்த 2017-ல் வழக்கு பதிவு செய்தது.

இதுதொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தது. இந்த வேளையில் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை செய்ததாக குற்றம்சாட்டப்பட்டது. இதையடுத்து அமலாக்கத்துறை களத்தில் குதித்தது. இந்நிலையில் தான் சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பான வழக்கில் அமலாக்கத்துறை சத்யேந்திர ஜெயினை அதிரடியாக கைது செய்தது.
கடந்த ஆண்டு சத்யேந்திர ஜெயின் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இதில் உள்நோக்கம் இருப்பதாகவும், ஆம்ஆத்மி அரசுக்கு கெட்டப்பெயரை ஏற்படுத்தும் நோக்கில் பாஜக அரசு மத்திய விசாரணை அமைப்புகள் மூலம் சத்யேந்திர ஜெயினை கைது செய்ததாக ஆம்ஆத்மி குற்றம்சாட்டியது.

இதற்கிடையே தான் சத்யேந்திர ஜெயின் ஜாமீன் கோரி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்க மறுத்தது. இந்நிலையில் தான் திடீரென்று சத்யேந்திர ஜெயின் டெல்லியில் உள்ள தீன்தயாள் உபாத்யாய் மருத்துவமனையில் நேற்று இரவு அனுமதிக்கப்பட்டார்.
அதாவது சிறையில் குளியலைக்கு சென்றபோது சத்யேந்திர ஜெயின் திடீரென வழுக்கி விழுந்து காயமடைந்தார். இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது. மருத்துவமனயில் அனுமதிக்கப்பட்டுள்ள சத்யேந்திர ஜெயினுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
-
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது!












Click it and Unblock the Notifications