தடுப்பூசி .. இந்திய அரசின் உறுதியை நம்பாத ஆசிய அபிவிருத்தி வங்கி.. வளர்ச்சி கணிப்பை குறைத்தது!
டெல்லி: ஆசிய அபிவிருத்தி வங்கி (ஏடிபி) இந்த ஆண்டுக்கான இந்தியாவின் வளர்ச்சி கணிப்பை 11 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாகக் குறைத்துள்ளது, கடந்த ஏப்ரல் மாதத்தில் 11 சதவீதம் ஆக இருக்கும் என்று கணிக்கப்பட்ட நிலையில் , நாடு முழுவதும் கொரோனாவின் இரண்டாவது அலை கட்டுப்பாடுகளை மேற்கோள்காட்டி வளர்ச்சிக்கான கணிப்பை குறைத்துள்ளது.
அத்துடன் 2022-23 வாக்கில் தான் இந்தியாவின் பெரும்பாலான மக்களுக்கு தடுப்பூசி போடப்படும் என்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி எதிர்பார்க்கிறது. 2021ம் ஆண்டு டிசம்பருக்குள் அனைவருக்கும் COVID-19 தடுப்பூசிகள் வழங்கப்படும் என்று இந்திய அரசு உறுதியளித்து உள்ளது, ஆனால் ADB வங்கியோ இந்த கருத்தை நம்பவில்லை.
இந்தியாவில் எரிபொருள் மற்றும் உணவு விலைகள் எதிர்பார்த்ததை விட வேகமாக உயந்துள்ளது . இதனால் 2021-22 ஆம் ஆண்டிற்கான சராசரி பணவீக்கம் 5.2 இருக்கும் என்று கணித்திருந்த ஆசிய அபிவிருத்தி வங்கி இப்போது அதை 5.5 சதவீதமாக உயர்த்தி உள்ளது. ஆனால் இந்திய ரிசர்வ் வங்கி இந்த காலகட்டத்தில் சில்லறை பணவீக்கத்தை 5.1% ஆகத்தான் கணித்து இருந்தது.

இந்தியாவில் எப்படி
சில்லறை பணவீக்கம், மே மற்றும் ஜூன் மாதங்களில் 6.3% ஆக இருக்கிறது. இது 2022-23 ஆம் ஆண்டில் இந்திய ரிசர்வ் வங்கியின் விருப்பமான இலக்கு 4% ஐ விட 4.8% ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

6 சதவீதத்தை தாண்டியது
2020-21 ஆம் ஆண்டில் இந்தியாவின் சராசரி பணவீக்கம் 6.2% ஆக இருந்தது. நாணயக் கொள்கை படி, ரிசர்வ் வங்கி பராமரிக்க வேண்டிய 2% -6% புள்ளிகளுக்குள் 3வது ஆண்டாக இருந்தது. ஆனால் இப்போது ஏடிபியின் கணிப்பு படி 6 சதவீதத்திற்கு மேல் இருக்கிறது.

இடையூறு
2022-23 நிதியாண்டில் இந்தியா 7.5% வளர்ச்சியைப் பதிவு செய்யும் என்று எதிர்பார்ப்பதாக ஆசிய வளர்ச்சி வங்கி தெரிவித்துள்ளது. COVID-19 தொற்றுநோயின் இரண்டாவது அலை காணமாக தெற்காசியா முழுவதும் பொதுமுடக்கம் உள்ளிட்ட புதிய கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் பின்பற்றப்பட்டதால் பொருளாதார நடவடிக்கைகளுக்கு இடையூறாக ஏற்பட்டது என்றும் அந்த வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.

ஆசிய அபிவிருத்தி வங்கி
ஆசிய வளர்ச்சி வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பில், "2021 நிதியாண்டிற்கான தெற்காசியாவின் வளர்ச்சி பார்வை 9.5% இலிருந்து 8.9% ஆக குறைக்கப்படுகிறது. இந்தியாவுக்கான கணிப்பு 11ல் இருந்து 10.0% ஆக குறைக்கப்பட்டுள்ளது. 2021 ஆம் ஆண்டில் தெற்காசியாவின் பணவீக்க கணிப்பு 5.5% முதல் 5.8% வரை உயர்த்தப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பு
2020-21 ஆம் ஆண்டின் இறுதி காலாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி 1.6% ஆக மீண்டது, தொற்றுநோயின் இரண்டாவது அலை பல மாநில அரசாங்கங்களை கடுமையான கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளியது. ஏனெனில் புதிய COVID-19 கேஸ்கள் மே மாத தொடக்கத்தில் ஒரு நாளைக்கு 400,000 க்கும் அதிகமாக உயர்ந்தன. ஜூலை தொடக்கத்தில் 40,000 க்கும் அதிகமாக உள்ளது.

வெளியிட்ட புள்ளி விவரம்
தெற்காசிய அளவில் வளர்சசி விகிதம் எப்படி இருக்கும் என்பதையும் ஏடிபி கணித்துள்ளது. அதன்படி பொருட்கள் மற்றும் எரிபொருள் விலைகள் அதிகரித்துள்ளதால் தெற்காசியாவில் வருடாந்திர பணவீக்க கணிப்பை ஏப்ரல் மாதத்தில் 2.3 சதவீதத்திலிருந்து 2.4 சதவீதமாக உயர்த்தி உள்ளது, விலை உயர்வு போக்குகள் காரணமாக அடுத்த ஆண்டு 2.7 சதவீதமாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறது. தெற்காசிய பிராந்தியத்தின் வளர்ச்சி முன்னறிவிப்பு இந்த ஆண்டில் 7.3% இல் இருந்து 7.2% ஆக குறைக்கப்பட்டுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications