எங்கே வெட்ட வேண்டும்? கூகுளில் தேடிய அப்தாப்.. காதலியை 35 துண்டாக வெட்டியது எப்படி? ஷாக் வாக்குமூலம்
டெல்லி: டெல்லியில் தன்னுடன் லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்த காதலியை கொலை செய்த அப்தாப் அமீன் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டு உள்ளார். இவர் இந்த கொலையை செய்தது எப்படி என்பது தொடர்பான விவரங்கள் வெளியாகி உள்ளன. இந்த கொலை தொடர்பாக அதிர்ச்சி அளிக்கும் சில விவரங்களும் வெளியாகி உள்ளன.
டெல்லியில் மெஹ்ராவுளி பகுதியில் வசித்து வந்துள்ளார் அப்தாப் அமீன். 26 வயது நிரம்பிய சாரதா என்ற பெண்ணுடன் இணைந்து இவர் ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளார்.
இவர்கள் மும்பையில் டேட்டிங் ஆப் ஒன்றின் மூலம் நண்பர்கள் ஆகி உள்ளனர். இருவருக்கும் பிடித்து போய் காதலில் விழுந்து உள்ளனர். அதன்பின் மும்பையிலேயே லிவ் இன் ரிலேஷன்ஷிப்பை தொடங்கி வாழ்ந்து வந்துள்ளனர்.

லிவ் இன்
இவர்கள் ஒன்றாக சந்தோசமாக வாழ்ந்து வந்துள்ளனர். இவர்கள் ரிலேஷன்ஷிப்பில் இருப்பதும் இவர்களின் குடும்பத்தினர் பலருக்கும் தெரிந்து உள்ளது. ஆனால் அவர்கள் இதற்கு அனுமதி அளிக்கவில்லை. இதையடுத்தே இவர்கள் மும்பையில் இருந்து டெல்லிக்கு தப்பி சென்றுள்ளனர். இந்த நிலையில்தான் அப்தாப் அமீனை திருமணம் செய்து கொள்ள சாரதா முடிவு செய்துள்ளார். சாரதா இதை பற்றி பேச்சு எடுத்த போதெல்லாம் அப்தாப் அமீன் அதை தவிர்த்து உள்ளார். இந்த நிலையில்தான் கடந்த மே 18ம் தேதி சாரதாவை கொலை செய்தார்.

கொலை
தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று தொடர்ந்து தொந்தரவு செய்த காரணத்தால் அப்தாப் அமீன் சாரதாவை கழுத்தை நெரித்து கொலை செய்து உள்ளார். அதோடு சாரதாவின் உடலை 35 பாகங்களாக வெட்டி உள்ளார். இந்த பாகங்களை தனது வீட்டின் பிரிட்ஜில் வைத்து உள்ளார். அதன்பின் வரிசையாக அடுத்த 18 நாட்களுக்கு சாரதாவின் உடல் பாகங்களை டெல்லியில் பல இடங்களில் அப்புறப்படுத்தி உள்ளார். தினமும் இரவு 2 மணிக்கு இதற்காக அவர் வீட்டை விட்டு வெளியே செல்வார்.

உடல் பாகம்
தினமும் 2 மணிக்கு அவர் உடல் பாகங்களை யாருக்கும் தெரியாமல் அப்புறப்படுத்தி உள்ளார். இதில் அவர் வெற்றியும் பெற்றுள்ளார். ஏனென்றால் சாரதாவின் உடல் பாகங்களை அப்புறப்படுத்தும் போது இவர் போலீசிடம் மாட்டவில்லை. அதேபோல் கடந்த 6 மாதங்களாக இவர் எந்த பிரச்சனையும் இன்றி சுதந்திரமாக வலம் வந்துள்ளார். இந்த நிலையில்தான் சாரதாவின் பெற்றோர், தனது மகள் பேஸ்புக்கில் போஸ்ட் எதுவும் போடவில்லையே என்று சந்தேகத்தில் அவருக்கு கால் செய்துள்ளனர்.

போன்
அவரின் போனும் ஸ்விட்ச் ஆப் என்று வந்துள்ளது. மேலும் சாரதாவை தேடி அவரின் அப்பா டெல்லி சென்று உள்ளார். சாரதா வசிப்பதாக கூறப்பட்ட வீட்டிலும் அவர் இல்லை. இதையடுத்து சாரதாவின் பெற்றோர் அப்தாப் அமீன் குறித்து போலீசில் புகார் அளித்து உள்ளனர். இதையடுத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்து உள்ளனர். அப்தாப் அமீனை அவருக்கு தெரியாமல் கண்காணித்து கடைசியில் கைது செய்துள்ளனர். போலீசார் விசாரணையில்தான் அப்தாப் அமீன் இந்த கொலை தொடர்பான உண்மைகளை தெரிவித்து உள்ளார்.

காட்டு பகுதி
காட்டு பகுதியில் உடல் பாகங்களை வீசியதையும் இவர் குறிப்பிட்டு உள்ளார். இந்த நிலையில் போலீசார் சில உடல் பாகங்களை மட்டும் மீட்டு உள்ளனர். இந்த நிலையில் போலீஸ் விசாரணையில் இரண்டு அதிர்ச்சி அளிக்கும் தகவலைகளை அப்தாப் அமீன் தெரிவித்து உள்ளார். அதன்படி சாரதா உடலை எப்படி வெட்ட வேண்டும் என்று தெரியவில்லை. இதையடுத்து கூகுளில் உடலை வெட்டுவது பற்றி படித்தேன்.

எலும்பு
எங்கே எலும்புகளின் இணைப்புகள் இருக்கும் என்று உடல்கூறியல் தொடர்பாக படித்தேன். அதை பயன்படுத்தி உடலை எளிமையாக வெட்டினேன். அதேபோல் உடலை வெட்டிய போது நிறைய ரத்தம் வந்தது. இதை எப்படி அகற்றுவது என்று தெரியவில்லை. இதற்காக கூகுளில் ரத்தத்தை அகற்றும் முறைகளை படித்தேன் என்றும் கூறி உள்ளார்.

டெக்ஸ்டர்
அமெரிக்காவில் டெக்ஸ்டர் என்ற தொடர் மிகவும் பிரபலம். தற்போது இந்தியாவிலும் நெட் பிளிக்சில் இந்த தொடர் உள்ளது. இதை பார்த்தும் அப்தாப் அமீன் அந்த கொலையை செய்து இருக்கிறார். அந்த தொடரில் டெக்ஸ்டர் செய்யும் கொலை முறைகளை தன்னுடைய கொலையிலும் இவர் பயன்படுத்தி உள்ளார் என்று போலீசார் தெரிவித்து உள்ளனர். சாரதாவின் மற்ற உடல் பாகங்களை தேடும் பணியில் போலீசார் இறங்கி உள்ளனர்.












Click it and Unblock the Notifications