திடீரென டிரோன் அட்டாக் நடந்தால் சமாளிக்குமா இந்தியா.. ராணுவத்தின் பலம்தான் என்ன? முக்கிய தகவல்
டெல்லி: காஷ்மீர் பகுதியில் இரு நாட்களுக்கு முன் டிரோன் மூலம் சிறு குண்டுவெடிப்பு நடத்தப்பட்டது. மேலும், அப்பகுதியில் டிரோன் நடமாட்டமும் அதிகரித்துள்ள நிலையில், டிரோன் தாக்குதலைச் சமாளிக்கும் திறன் இந்திய ராணுவத்திற்கு உள்ளதா என்ற கேள்வி இயல்வாகவே எழுந்துள்ளது.
Recommended Video
ஜம்மு பகுதியில் உள்ள விமானப்படைத் தளத்தில் ஜூன் 27ஆம் தேதி சிறு குண்டுவெடிப்பு ஏற்பட்டது. இதில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. இரு வீரர்கள் மட்டும் காயமடைந்தனர்.
அந்த டிரோன்கள் பாகிஸ்தான் எல்லையிலிருந்து அனுப்பப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். ஜம்மு காஷ்மீர் பகுதியில் டிரோன் மூலம் தாக்குதல் நடைபெறுவது இதுவே முதல்முறையாகும்.

காஷ்மீர் தாக்குதல்
அப்பகுதியிலுள்ள லஷ்கர்-இ-தைபா பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்களுக்கு இந்த வெடிகுண்டுகள் அனுப்பப்பட்டிருக்கலாம் என்றும் போலீசார் தெரிவித்திருந்தனர். அன்றிரவு இன்னும் சில டிரோன்கள் வந்ததாகவும் அதை நோக்கிப் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்திய பின், அது அங்கிருந்து சென்றதாகவும் பாதுகாப்புப் படையினர் குறிப்பிட்டனர். இந்நிலையில், நேற்றும் அங்கு டிரோன்களின் நடமாட்டம் இருந்ததாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

UAV என்றால் என்ன
UAV எனப்படும் ஆளில்லா விமான மூலம் நடத்தப்படும் தாக்குதல்கள் வரும் காலங்களில் அதிகரிக்கக் கூடும் என்றே அஞ்சப்படுகிறது. இது டிரோன் தாக்குதலைச் சமாளிக்கும் திறன் இந்திய ராணுவத்திற்கு உள்ளதா என்ற கேள்வி இயல்வாகவே எழுப்பியுள்ளது. அதற்கு முதலில் டிரான் தாக்குதல் எப்படி நடைபெறுகிறது என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

எப்படி தாக்குதல் நடைபெறும்
பொதுவாக டிரோன் தாக்குதல்கள் பல வகைகளில் நடத்தப்படும். அதில் முக்கியமானது swarm drones என்ற முறை. அதாவது ஒரே நேரத்தில் பல டிரோன்கள் பறக்கவிடப்படும். ஒரே நேரத்தில் இப்படிப் பல டிரோன்கள் பறக்கவிடுவதன் மூலம், ரேடார்களில் இருந்து சில டிரோன்கள் தப்பிக்க வாய்ப்புள்ளது. இதன் மூலம் எளிதாகத் தாக்குதல்கள் நடத்தப்படும்.

இந்தியாவில் டிரோன்கள்
தற்கொலைப் படை தாக்குதலைப் போலவே, டிரோன்கள் தாக்கும்போது, தன்னை தானே அழித்தும் கொள்ளும். இந்த டிரோன்களை எதிர்கொள்ள இந்தியாவிடம் உள்ள தொழில்நுட்பம் கடந்த ஜனவரி 15ஆம் தேதி நடத்தப்பட்ட ராணுவத் தின அணிவகுப்பில் இடம் பெற்றிருந்தன. இந்தியாவில் ராணுவத் தின அணிவகுப்பில் ஆளில்லா விமானங்களின் அணிவகுப்பு இடம் பெறுவது இதுவே முதல்முறையாகும்.

அமெரிக்கா ஒப்பந்தம்
அமெரிக்காவின் ஜெனரல் அடாமிக்ஸ் நிறுவனத்திடம் இருந்து 30 ஆயுத ட்ரோன்களை வாங்க 3 பில்லியின் டாலர் ஒப்பந்தம் வரும் காலங்களில் இறுதி செய்யப்படும். இதன் மூலம் இந்திய ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படைக்கு தலா 10 ட்ரோன்கள் கிடைக்கும். MQ9 Reaper எனப்படும் இந்த டிரோன்களை ஈரான், ஆப்கானிஸ்தான், சிரியா நாடுகளில் அமெரிக்கா பயன்படுத்தியுள்ளது. இந்த டிரோன்கள் இந்தியா பாதுகாப்புப் படைக்கு கிடைக்கும்பட்சத்தில் அது பாதுகாப்பு கட்டமைப்பைப் பல மடங்கு வலுப்படுத்தும்.

ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ்
ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் நிறுவனம் ஆளில்லா ஹெலிகாப்படர் தொடர்பாக ஆய்வுகளை மேற்கொள்கிறது. மேலும், தேஜாஸ் உள்ளிட்ட போர் விமானங்களுடன் இணைந்து செயல்படக் கூடிய டிரோன்கள் தொடர்பாகவும் ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் ஆய்வு செய்து வருகிறது. மேலும் நாட்டிலுள்ள பல தனியார் நிறுவனங்களும் டிரோன்கள் தொடர்பாக தங்கள் ஆய்வுகளைத் தீவிரப்படுத்தியுள்ளன.

வலுப்படுத்த வேண்டும்
இவரை அனைத்தும் வரும் காலங்களில் இந்திய ராணுவத்தில் இணைத்துக் கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவை மூலம் டிரோன்களால் நடைபெறும் தாக்குதல்களை எளிதாகத் தடுக்கலாம், ஜம்மு காஷ்மீரில் நடந்த டிரோன் தாக்குதலில் யாரும் பலியாகவில்லை. ஆனால், இந்த நிலை விரைவாக மாறக் கூடும். அதற்குள் இந்தியா தனது டிரோன் தொழில்நுட்பத்தை வலுப்படுத்த வேண்டும்.
-
இந்தியா மிஸ் செய்த பொக்கிஷம்.. இப்போ அமெரிக்காவே அலறுதே! கேம் சேஞ்சர் மிக்-35 -
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் வன்முறை.. 30 பேர் பலியானது எப்படி? பிரச்சனை ஏன்? எளிய விளக்கம் -
அந்த 3 கேள்விகள்! பதில் சொல்ல கூட முடியாமல் திணறல்! Starlink சேவையை இந்தியாவில் தொடங்குவதில் சிக்கல் -
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டக்காரர்கள் - பாதுகாப்புப் படை மோதல்.. 30 பேர் சுட்டுக்கொலை -
"வயிற்றுப்போக்கில் வரும் ரத்தம்.." கேரளாவில் உயிரை குடிக்கும் நோய்.. அதிர வைக்கும் ஷிகெல்லா பாதிப்பு -
இந்தியாவை கபளீகரம் செய்த சரிவு.. நிலைமை ரொம்ப மோசம்.. இது தொடர்ந்தால் டேஞ்சர் தான்! -
அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்! 8வது ஊதியக்குழு வந்தால்.. பண மழை! எவ்வளவு கிடைக்கும்னு பாருங்க -
கிட்டத்தட்ட ரூ. 25 குறைவு! ஆனால் தப்பி தவறியும் "இந்த" பெட்ரோலை உங்க காரில் போடாதீங்க! ஏன் தெரியுமா -
“காங்கிரஸ் வளர்ச்சியால் அச்சம் வேண்டாம்”.. திருமாவளவன் குற்றச்சாட்டுக்கு மாணிக்கம் தாகூர் பதில் -
இந்தியா கூட்டணியில் மிஸ்ஸான விஜய் கட்சி.. காங்கிரஸ் ஒன்னு சொல்ல.. திருமா வேற சொல்ல..! பெரிய குழப்பம் -
40 ஆண்டுகளில் இல்லாத மாற்றம்.. ரயில் புக்கிங் மொத்தமாக மாற போகுது.. 60 நாட்களில் வரும் இன்ப செய்தி -
காங்கிரஸின் அணுகுமுறை இப்படித்தான் இருக்கும் என்றால்.. இந்தியா கூட்டணியை அதிர வைத்த ஜான் பிரிட்டோ எம்பி












Click it and Unblock the Notifications