அக்னிபாத் பாரத் பந்த்- டெல்லியில் கடும் போக்குவரத்து நெரிசல்-ஜார்க்கண்ட்டில் கல்வி நிறுவனங்கள் மூடல்
டெல்லி: அக்னிபாத் எனும் மத்திய பாஜக அரசின் புதிய ராணுவ ஆட்சேர்ப்பு கொள்கைக்கு எதிராக நாடு தழுவிய பாரத் பந்த் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. தலைநகர் டெல்லியில் போராட்டக்காரர்கள் குவிவதைத் தடுக்க நடத்தப்பட்ட வாகன சோதனையால் மிகப் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

அக்னிபாத் ராணுவ ஆட்சேர்ப்புத் திட்டத்தில் பணிக்காலம் 4 ஆண்டுகள் என குறைக்கப்பட்டுள்ளது. இது நாடு முழுவதும் ராணுவத்தில் சேர விரும்பும் இளைஞர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக வட இந்தியாவில் இளைஞர்கள் கொதிநிலையில் உள்ளனர்.

அக்னிபாத் திட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி வட இந்திய இளைஞர்கள் தொடர் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இந்த போராட்டங்கள் மிகப் பெரும் வன்முறையாக வெடித்துள்ளன. இதுவரை 60க்கும் மேற்பட்ட ரயில்கள் தீக்கிரையாக்கப்பட்டன. பீகாரில் பல ரயில் நிலையங்கள் சூறையாடப்பட்டன. பாஜக தலைவர்கள் வீடுகள், பாஜக அலுவலகங்கள் தாக்கப்பட்டன. தென்னிந்தியாவில் தெலுங்கானாவின் செகந்திராபாத்திலும் இத்தகைய வன்முறை நிகழ்ந்தது. இதனால் வட இந்தியாவில் பல மாநிலங்களில் பதற்றம் நீடிக்கிறது.

இதனிடையே இன்று அக்னிபாத் திட்டத்துக்கு எதிராக நாடு தழுவிய பாரத் பந்த் முழு அடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. நாட்டின் பல மாநிலங்களில் இயல்பு வாழ்க்கை தொடர்ந்தாலும் வட இந்திய மாநிலங்களில் கடும் பாதிப்பு உள்ளது. தலைநகர் டெல்லியில், பிற மாநில போராட்டக்காரர்கள் உள்ளே நுழைவதை தடுக்க போலீசார் தீவிர வாகன சோதனை நடத்துகின்றனர். இதனால் டெல்லியில் மிக மோசமான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சாலைகளில் பல கிலோ மீட்டர் தொலைவுக்கு வாகனங்கள் வரிசையில் நிற்கின்றன. டெல்லியில் பல ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டும் இருக்கின்றன.

Recommended Video
ஜார்க்கண்ட் மாநிலத்தில் அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன. உ.பி. உள்ளிட்ட மாநிலங்களில் 22 ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டன. இதனால் பயணிகள் ரயில் நிலையங்களில் பரிதவித்து வருகின்றனர். மேற்கு வங்கத்தில் ஏற்கனவே போர்க்களமான ஹவுராவில் உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications