டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

லோக்சபா தேர்தல் வெற்றி கொஞ்சம் கஷ்டமான விஷயம்.. பாஜக கூட்டத்தில் மனம் திறந்த அமித் ஷா

Google Oneindia Tamil News

Recommended Video

    லோக்சபா தேர்தல் வெற்றி கொஞ்சம் கஷ்டமான விஷயம் - அமித்ஷா- வீடியோ

    டெல்லி: 2019ம் ஆண்டு லோக்சபா தேர்தல் பாஜகவுக்கு அவ்வளவு எளிதான தேர்தலாக இருக்காது என்று அக்கட்சியின் தலைவர் அமித் ஷா சூசகமாக தெரிவித்து உள்ளார்.

    சமீபத்தில் நடந்த 5 மாநில சட்டசபை தேர்தலில், பாஜக ஒரு மாநிலத்தில் கூட வெற்றி பெறவில்லை. அதனால் அந்தக் கட்சியின் முக்கிய நிர்வாகிகள், 2019-ல் நடக்கவுள்ள லோக்சபா தேர்தலை சற்றே கிலியுடன் பார்க்க தொடங்கி உள்ளனர்.

    யாரு மனசில யாரு?? மக்கள் மனசில யாரு? என்று பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகின்றனர். அவர்களில் கட்சியின் தலைவர் அமித் ஷா, தனித்தனியாகவும், முக்கிய தலைவர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

    கட்சிக் கூட்டத்தில் பேச்சு

    கட்சிக் கூட்டத்தில் பேச்சு

    தேர்தலுக்கு கட்சித் தொண்டர்களை தயார் செய்யும் நோக்கில் பல்வேறு நடவடிக்கைகளில் அவர் ஈடுபட்டு வருகிறார். அதன்படி டெல்லியில் நடைபெற்ற கட்சிக் கூட்டத்தில் அவர் பேசினார்.

    சாதாரண தேர்தல் அல்ல

    சாதாரண தேர்தல் அல்ல

    அதன் விவரம் வருமாறு: கண்டிப்பாக வரும் மக்களவைத் தேர்தல் என்பது சாதாரணமாக இருக்கப் போவதில்லை. நாம் அனைவரும் அதை எதிர்கொள்ள தயாராவோம். காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகளை ஒரே தராசில்தான் வைத்துப் பார்க்க வேண்டும்.

    ரெண்டு கட்சிகளும் ஒன்று

    ரெண்டு கட்சிகளும் ஒன்று

    இந்த இரு கட்சிகளுக்கும் எந்தவித வேறுபாடும் இல்லை. அரவிந்த் கெஜ்ரிவாலும், ராகுல் காந்தியும் தொடர்ந்து பொய் சொல்லி வருகின்றனர். அவர்கள் முன்னர் கொடுத்த வாக்குறுதிகளே இன்னும் நிறைவேற்றப்படாத நிலையில், புதிது புதிதாக வாக்குறுதிகளை மக்களிடத்தில் கொடுத்து வருகின்றனர்.

    உண்மை முகம்

    உண்மை முகம்

    காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்திக்கு, பாரத் ரத்னா வழங்கியதை திரும்ப பெற வேண்டுமென்று ஆம் ஆத்மி கேட்கிறது. அவர்களின் உண்மை முகம் தற்போது மக்களுக்குத் தெரிய தொடங்கி உள்ளது.

    மீண்டும் ஆட்சி

    மீண்டும் ஆட்சி

    காங்கிரஸ் கட்சி தொடர்ந்து, அசாமில் குடியேறும் வேறு நாட்டினருக்கு ஆதரவு தெரிவித்து வருகிறது. அவர்களுக்கு இந்திய குடிமக்கள் குறித்து எந்த கவலையும் கிடையாது. பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன், இங்கேயுள்ள அனைத்து வெளிநாட்டினரும் திரும்ப அனுப்பப்படுவார்கள்.

    இவ்வாறு கூட்டத்தில் பாஜக தலைவர் அமித்ஷா பேசினார்.

    English summary
    BJP National President Amit Shah said the 2019 lok sabha election won't be an ordinary one. He also said that, the party's win will mean the victory of nationalism over casteism and nepotism.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X