டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

விலங்குகளுக்கும் வந்தாச்சு கொரோனா தடுப்பூசி..நாய், சிங்கம், சிறுத்தை, எலி, முயல்களை பாதுகாக்கலாம்

சிங்கம், சிறுத்தை, எலி, முயல்களை கொரோனாவில் இருந்து பாதுகாக்க தடுப்பூசி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விலங்குகளுக்கான கொரோனா தடுப்பூசியை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் அறிமுகப்படுத்தினார்

Google Oneindia Tamil News

டெல்லி: விலங்குகளுக்கான கொரோனா தடுப்பூசியை மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் அறிமுகப்படுத்தினார். நாய், சிங்கம், சிறுத்தை, எலி, முயல்களை கொரோனாவில் இருந்து பாதுகாக்க அனோகோவாக்ஸ் தடுப்பூசி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக உலக மக்களை தன் கைப்பிடிக்குள் வைத்துள்ளது. கொரோனாவால் மனிதர்கள் மட்டுமல்ல விலங்குகளும் பாதிக்கப்பட்டனர். கொரோனாவில் இருந்து தப்பிக்க பல தடுப்பூசிகள் மனிதர்களுக்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

 தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 185; சென்னையில் 94 பேருக்கு தொற்று! தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 185; சென்னையில் 94 பேருக்கு தொற்று!

Anocovax: India launches its first COVID-19 vaccine for animals name Anocovax

விலங்குகளை ஹரியானாவைச் சேர்ந்த ஐ.சி.ஏ.ஆர். தேசிய ஆராய்ச்சி நிறுவனம் விலங்குகளுக்கு செலுத்தக் கூடிய அனோகோவாக்ஸ் கொரோனா தடுப்பூசியை உருவாக்கி உள்ளது. பல கட்ட சோதனைகளுக்கு பிறகு தற்போது அந்த தடுப்பூசிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. டெல்லியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய வேளாண்துறை அமைச்சர் நரேந்திரசிங் தோமர், விலங்குகளுக்காக இந்தியா தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசியை அறிமுகம் செய்து வைத்தார்.

Anocovax: India launches its first COVID-19 vaccine for animals name Anocovax

இந்த தடுப்பூசி நாய்கள், சிங்கங்கள், சிறுத்தைகள் மற்றும் முயல்களுக்கு பாதுகாப்பானது என்று மத்திய விவசாயிகள் நல அமைச்சகம் தெரிவித்துள்ளது, அனோகோவாக்ஸால் தூண்டப்பட்ட நோய் எதிர்ப்பு சக்தி, விலங்குகளை தாக்கும் டெல்டா மற்றும் ஓமிக்ரான் வைரஸ்களை கட்டுப்படுத்துகிறது என்றும் இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

விஞ்ஞானிகளின் அயராத பங்களிப்புகளால், இறக்குமதி செய்வதை விட, சொந்த தடுப்பூசிகளை உருவாக்குவதில் நாடு தன்னிறைவு பெற்றுள்ளது, இது உண்மையில் ஒரு பெரிய சாதனை என்றும் மத்திய வேளாண்மைத்துறை அமைச்சர் நரேந்திரசிங் தோமர் குறிப்பிட்டுள்ளார்.

English summary
The Corona vaccine for animals was introduced by Union Agriculture Minister Narendra Singh Tomar. Anovax vaccine has been introduced to protect dogs, lions, leopards, rats and rabbits from corona.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X