டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அடிக்கடி குலுங்கும் டெல்லி! நிலநடுக்கம் திடீரென அதிகரிக்க என்ன காரணம்! தமிழ்நாட்டின் உண்மை நிலை என்ன

Google Oneindia Tamil News

டெல்லி: இன்று தேசிய தலைநகர் டெல்லி உட்பட சில பகுதிகளில் நிலநடுக்கம் உணரப்பட்டது. சமீப காலங்களில் நிலநடுக்கம் குறித்து அதிக செய்திகள் வரும் நிலையில், டெல்லியில் உண்மையில் நிலநடுக்கம் அதிகரித்துள்ளதா என்பதைப் பார்க்கலாம். மேலும், சென்னை மற்றும் தமிழ்நாடு இதனால் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதா என்பதையும் பார்க்கலாம்.

தலைநகர் டெல்லியில் இன்று மதியம் திடீரென நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. சக்திவாய்ந்த இந்த நிலநடுக்கம் பிற்பகல் 2:28 மணியளவில் தலைநகர் டெல்லி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உணரப்பட்டுள்ளது.

நேபாளத்தை மையமாகக் கொண்டு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.8ஆக இருந்ததாகத் தேசிய நிலநடுக்கவியல் மையம் தகவல் தெரிவித்துள்ளது. டெல்லி மட்டுமின்றி உத்தரப் பிரதேசத்திலும் சில பகுதிகளில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாகக் கூறப்படுகிறது.

குலுங்கிய டெல்லி.. கடும் நில அதிர்வு.. அச்சத்தில் வீடுகளை விட்டு ஓடி வந்த மக்கள்.. பரபரப்பு குலுங்கிய டெல்லி.. கடும் நில அதிர்வு.. அச்சத்தில் வீடுகளை விட்டு ஓடி வந்த மக்கள்.. பரபரப்பு

 தலைநகர் டெல்லி

தலைநகர் டெல்லி

இதேபோல தலைநகர் டெல்லியில் புத்தாண்டு தினத்தன்றும் நிலநடுக்கம் ஏற்பட்டது. வடமாநிலங்களில் குறிப்பாக டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சமீப காலங்களாக நிலநடுக்கம் தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. அதிலும் குறிப்பாக 2022 இரண்டாம் பாதியில் டெல்லி என்சிஆர் உள்ளிட்ட பகுதிகளில் அடிக்கடி நில அதிர்வுகள் ஏற்பட்டுள்ளது. இதன் நிலநடுக்கம் மெல்ல வலுவாகிக் கொண்டே வருவதாகவும் ஆய்வாளர்கள் கூறியுள்ளது கவலையை ஏற்படுத்துவதாக உள்ளது. நிலநடுக்கம் பேரழிவை ஏற்படுத்தும் என்பதால் மக்களிடம் இது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து நாம் விரிவாக பார்க்கலாம்..

 பெரிய பூகம்பங்கள்

பெரிய பூகம்பங்கள்

நிலநடுக்கம் என்பது எப்போதும் ரிக்டர் அளவுகோலில் கணக்கிடப்படும். வலுவான நிலநடுக்கம் என்றால் ரிக்டரில் அதன் அளவு அதிகமாக இருக்கும்.. ஒவ்வொரு ஆண்டும் நமது பூமியில் சுமார் 15 பெரிய பூகம்பங்கள், (அதாவது ரிக்டரில் 7க்கு மேல் இருப்பது) ஏற்படுவதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரிவித்துள்ளது. கடந்த 2022ஆம் ஆண்டு உண்மையில் வலிமையான நிலநடுக்கம் குறைந்தே உள்ளது. கடந்தாண்டு முழுவதும் சேர்த்தும் கூட வலிமையான நிலநடுக்கம் 15க்கும் குறைவாகவே பதிவாகியுள்ளது.. எனவே, நிலநடுக்கம் ஓராண்டில் இவ்வளவு தான் ஏற்படும் என்று யாராலும் குறிப்பிட்டுச் சொல்ல முடியாது.

 எங்கே அதிகம் ஏற்படும்

எங்கே அதிகம் ஏற்படும்

அதேபோல இங்குதான் நிலநடுக்கம் ஏற்படும் என்றும் சொல்ல முடியாது. ரேண்டமாகவே இது ஏற்படும். சில நேரங்களில் சில நாட்களுக்குள்ளும், மற்ற நேரங்களில் வாரங்கள் அல்லது மாதக் கணக்கில் இடைவெளியிலும் கூட நிலநடுக்கம் ஏற்படலாம். உலகில் சில குறிப்பிட்ட பகுதிகளில் நிலநடுக்கம் அதிகம் ஏற்படும்.. குறிப்பாக ரிங் ஆப் பயர் எனப்படும் ஜப்பான், இந்தோனேஷியா பகுதிகளை உள்ளடக்கிய இடங்களில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படும். அங்கு எரிமலைகளும் அதிகம் இருக்கும் நிலையில் எரிமலை வெடிப்புகளும் கூட அடிக்கடி ஏற்படும்..

 எதனால் ஏற்படும்

எதனால் ஏற்படும்

பூமியின் மேற்பரப்பு என்பது ஒட்டுமொத்தமாக ஒரு தொடர்ச்சியான மேற்பரப்பு இல்லை.. மாறாக அது பல டெக்டோனிக் தட்டுகள் எனப்படும் பெரிய பிரிவுகளால் ஆனதாகும். பூமிக்கு அடியே இந்த டெக்டோனிக் தட்டுகள் இணைந்துள்ளதே மேற்பரப்பில் நமக்கு ஒரே நிலப்பரப்பாக உள்ளது. இவை கீழே ஒன்றுடன் ஒன்று மோதும்போது நிலநடுக்கம் ஏற்படுகிறது. இதுவே கடலுக்கு அடியே இந்த டெக்டோனிக் தட்டுகள் மோதிக் கொண்டால்.. அது சுனாமியை ஏற்படுத்துகிறது. அதாவது பூமிக்கு அடியே இருக்கும் இந்த டெக்டோனிக் தட்டுகள் ஒன்றுக்கொன்று சரியும்போது, ​​உராய்வு ஏற்பட்டு காலப்போக்கில் அழுத்தம் அதிகரிக்கிறது.

 புவி வெப்ப மயமாதல்

புவி வெப்ப மயமாதல்

ஒரு கட்டத்தில் அழுத்தம் தாங்கிக் கொள்ள முடியாத ஒன்றாக மாறும்போது, அதன் ஒரு பகுதி உடைந்து மேலெழுகிறது. இதுவே நிலநடுக்கத்தை ஏற்படுத்துகிறது. இதை அல்லது மாறுகின்றன, நில அதிர்வு அலைகள் டெக்டோனிக் பூகம்பம் என்றும் அழைப்பார்கள். பருவநிலை மாற்றம் காரணமாக நாம் ஏகப்பட்ட பிரச்சினைகளைச் சந்தித்து வருகிறோம். அதிகரிக்கும் வெப்பம், கொடுமையான குளிர் என்று வானிலை இதுவரை இல்லாத வகையில் வைத்துச் செய்து வருகிறது. இது போதாது என்று கடல் மட்டம் அதிகரிப்பதும் மற்றொரு புதிய பிரச்சினையைக் கடலோர நகரங்களுக்கு முக்கிய பிரச்சினையாக உருவாகியுள்ளது.

 என்ன தொடர்பு

என்ன தொடர்பு

இருப்பினும், நிலநடுக்கத்திற்கும் இதற்கும் ஆய்வாளர்கள் எந்தவொரு தொடர்பையும் கண்டறியவில்லை. இருப்பினும், சமீபத்திய ஆய்வுகள் உள்ளூர்ப் பகுதியில் சிறிய நிலநடுக்கங்கள் ஏற்பட பருவநிலை மாற்றங்கள் காரணமாக இருக்கலாம் என்று எச்சரித்துள்ளனர். பருவநிலை மாற்றம் காரணமாக வடக்கு மற்றும் தென் துருவங்களில் பனிப்பாறைகள் கரைவது அனைவருக்கும் தெரியும். துருவப் பகுதிகளில் இருக்கும் இந்த பனிப்பாறைகள் அடியே இருக்கும் பாறையின் மீது பெரும் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. இதனால் அது மேலும் கீழ்நோக்கிச் செல்கிறது. பனி உருகும்போது ​​​​அழுத்தம் குறைந்து மெல்ல அது மீண்டும் எழுகிறது. இந்த மீள் எழுச்சியானது நிலநடுக்கத்திற்கு மைனர் காரணமாக இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்

 இந்தியா, தலைநகர் சென்னை

இந்தியா, தலைநகர் சென்னை

பூமிக்கு அடியே இருக்கும் இந்தியத் தட்டு நேபாளத் தட்டு என இரண்டு இருக்கிறது. இவை மோதிக்கொள்வதால் அங்கு நிலநடுக்கம் அதிகம் ஏற்படுகிறது. இதன் காரணமாகவே டெல்லி உட்படப் பகுதிகளில் கடந்த 2017 முதல் 2020 வரை 3 ஆண்டுகளில் மட்டும் 26 முறை நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இவை அனைத்தும் ரிக்டர் அளவுகோலில் 3க்கு மேல் உள்ளதாகும். நமது தமிழ்நாட்டின் தலைநகர் சென்னை நிலநடுக்க மண்டலம் ஜோன் 3இல் உள்ளது. இங்கு நிலநடுக்கம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் ரொம்பவே குறைவு. அதேபோல தமிழ்நாட்டில் அனைத்து பகுதிகளும் ஜோன் 2,3இல் தான் உள்ளது என்பதால் நாம் அச்சப்பட தேவையில்லை.

English summary
Tamilnadu and Chennai are is zone 2 and zone 3 in earthquakes: India is not having more earthquakes.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X