Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

எல்லையில் இந்தியா சந்திக்கும் பிரச்சினை எதிர்கால மோதல்களுக்கான டிரெய்லர்.. ராணுவ தளபதி பரபர பேச்சு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்தியா எல்லை பகுதியில் தற்போது சந்தித்து வரும் பிரச்சினைகள் எதிர்கால மோதல்களுக்கான டிரெய்லர் என்று ராணுவ தளபதி எம்.எம்.நரவானே கூறியுள்ளார். சீனாவையும், பாகிஸ்தானையும் அவர் மறைமுகமாக தாக்கியுள்ளார்.

Recommended Video

    China-Pak ரொம்ப Close | Jaishankar Reply To Rahul Gandhi | Oneindia Tamil

    இந்தியாவுக்கு குடைச்சல் கொடுப்பதில் பாகிஸ்தானும், சீனாவும் போட்டி போட்டு செய்லபட்டு வருகின்றன.

    ஜம்மு-காஷ்மீர் சர்வதேச எல்லை பகுதியில் அத்துமீறுவதை பாகிஸ்தான் ராணுவம் தனது வாடிக்கையாக வைத்துள்ளது.

    குடைச்சல் கொடுக்கும் சீனா-பாகிஸ்தான்

    குடைச்சல் கொடுக்கும் சீனா-பாகிஸ்தான்

    இந்த வரிசையில் இணைந்து கொண்ட சீனாவும் இந்திய எல்லையை அபகரிக்க தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது. அருணாச்சல பிரதேச மாநில எல்லையை சீனா தொடர்ந்து சொந்தம் கொண்டாடி வருகிறது. கடந்த ஆண்டு ஜூன் 15-ம் தேதி லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய, சீன ராணுவ வீரர்களிடையே கடும் மோதல் மூண்டது. இரு நாட்டு ராணுவ வீரர்களும் கற்களால் தாக்கி கொண்டனர். இந்த பயங்கர மோதலில் நமது ராணுவ வீரர்கள் 20 பேர் வீர மரணம் அடைந்தனர். சீன தரப்பில் 45 வீரர்களும் உயிரிழந்தனர்.

    ராணுவ தளபதி எம்.எம்.நரவானே பேச்சு

    ராணுவ தளபதி எம்.எம்.நரவானே பேச்சு

    இந்த விவகாரம் தொடர்பாக தொடர்ந்து சீன-இந்திய வீரர்கள் சுமார் 10-க்கும் மேற்பட்ட பேச்சுவார்த்தைகளை நடத்திய போதிலும் சீனா திருந்துவதாக தெரியவில்லை. லடாக் எல்லையில் குறிப்பிட்ட சில பகுதிகளில் இருந்து பின்வாங்க சீனா தொடர்ந்து மறுத்து வருகிறது. இது தவிர எல்லை பகுதியில் சட்டவிரோத கட்டுமானங்களை மேற்கொண்டு இந்தியாவை அச்சுறுத்தி வருகிறது. இந்த நிலையில் 'ஆன்லைன்' வாயிலாக நடந்த கருத்தரங்கு ஒன்றில் பேசிய இந்திய ராணுவ தளபதி எம்.எம்.நரவானே இந்தியா எல்லை பகுதிகளில் தனித்துவமான, கணிசமான மற்றும் பலவிதமான பாதுகாப்பு சவால்களை எதிர்கொள்கிறது. இதனால் நமது ராணுவ படைகள் எப்போதும் முழு பலத்துடன் தயார் நிலையில் இருக்க வேண்டிய அவசியம் காணப்படுகிறது. என்று கூறினார்.

    இது ஒரு டிரெய்லதான்

    இது ஒரு டிரெய்லதான்

    சீனா மற்றும் பாகிஸ்தானின் பெயரைக் நேரடியாக குறிப்பிடாமல் பேசிய ராணுவ தளபதி எம்.எம்.நரவானே, ''நமது அண்டை நாடுகள் அணு ஆயுதம் வைத்துக்கொண்டு அரசியல், ராணுவம், இணையதளம் என, பல வழிகளிலும் இந்தியாவுக்கு பிரச்னைகளை கொடுத்து கொண்டே இருக்கின்றன. நம் மீது மறைமுக போரிலும் ஈடுபட்டு வருகின்றன'' என்று கூறினார். இப்போது இந்தியா சந்தித்து வரும் எல்லை பிரச்னை உள்ளிட்டவை அனைத்தும்,எதிர்கால மோதலுக்கான ஒரு டிரெய்லரே என்றும் இந்திய ராணுவ தளபதி கூறியுள்ளார்.

    சீனா மீது தாக்குதல்

    சீனா மீது தாக்குதல்

    இவை தகவல் போர்க்களம், நெட்வொர்க்குகள் மற்றும் சைபர்ஸ்பேஸ் ஆகியவற்றில் தினசரி செயல்படுத்தப்படுகின்றன என்று கூறிய எம்.எம்.நரவானே இந்த டிரெய்லர்களை வைத்தே, எதிர்கால சூழ்நிலை எப்படி இருக்கும் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். அதற்கு ஏற்ப நம்மை தயார் செய்து கொள்வது அவசியம் என்று கூறினார். சில நாடுகள் உலகளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட விதிமுறைகள் மற்றும் விதிகள் அடிப்படையிலான ஒழுங்குமுறைக்கு சவால் விடுகின்றன என்று சீனாவை மட்டும் மறைமுகமாக குறிப்பிட்ட எம்.எம்.நரவானே கூறினார்.

    இந்திய படைகளின் வலிமை

    இந்திய படைகளின் வலிமை

    ஆப்கானிஸ்தானில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள், பினாமிகள் மற்றும் அரச சார்பற்ற நபர்களை அங்கு பயன்படுத்துவதில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது என்று கூறிய அவர் இந்திய ராணுவம் தனது படைகளை மறுசீரமைத்தல் மற்றும் பலப்படுத்துதல் ஆகியவற்றில் கவனம் செலுத்துவதாகவும், முப்படைகளை ஒருங்கிணைத்தல் உள்ளிட்ட இதற்கான செயல்முறை ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+