டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தமிழக சட்டசபை தேர்தல் ரேஸில் இருந்து விலகிய ஆம் ஆத்மி கட்சி... அதிர்ச்சியில் ஆண்டவர்

தமிழக சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி போட்டியிடாது என்று அந்த கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

டெல்லி : தமிழக சட்டசபைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி போட்டியிடாது என்று அக்கட்சியின் தலைவரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். ஆம் ஆத்மி கட்சியின் அறிவிப்பு மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் கமல்ஹாசனுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Recommended Video

    #TNElection2021 தமிழக சட்டப்பேரவை தேர்தலில் ஆம் ஆத்மி போட்டியில்லை: அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு!

    தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் குறித்து மக்கள் நீதி மய்யத்துடன் ஏற்கனவே ஆம் ஆத்மி கட்சி சார்பில் ஆலோசனை நடத்தப்பட்டிருந்தது. இந்த நிலையில், தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி போட்டியிடாது என்று கட்சித் தலைமை அறிவித்துள்ளது.

    Arvind Kejriwals Aam Aadmi Party withdraws from Tamil Nadu Assembly election 2021

    அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி கட்சி டெல்லியில் ஆட்சி செய்து வருகிறது. அந்த கட்சி பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களிலும் தேர்தலில் போட்டியிட்டு குறிப்பிடத்தகுந்த அளவில் வெற்றியை பெற்றது.

    இதற்கிடையே தமிழக சட்டசபை தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடுவது தொடர்பாக ஆம் ஆத்மி கட்சியும், கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யமும் ஆலோசனையில் ஈடுபட்டு வந்தன. இது தொடர்பாக கெஜ்ரிவாலும், கமல்ஹாசனும் ஆலோசனை நடத்தி இருந்தனர். கூட்டணி குறித்து முக்கிய அறிவிப்பு வெளியாகும் என்ற எதிர்பார்க்கப்பட்டது.

    இந்தநிலையில் தமிழக சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி போட்டியிடாது என்று அந்த கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். மக்கள் நீதி மய்யம் கட்சி பாரி வேந்தரின் ஐஜேகே, சரத்குமார் சமத்துவ மக்கள் கட்சியுடன் இணைந்து கூட்டணி அமைத்துள்ளது. இந்த கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக கமல்ஹாசன் அறிவிக்கப்பட்டுள்ளார்.

    இந்துத்துவத்தை பற்றி.. யாரும் எங்களுக்கு பாடம் எடுக்க வேண்டாம்.. சட்டசபையில் கர்ஜித்த உத்தவ் தாக்கரேஇந்துத்துவத்தை பற்றி.. யாரும் எங்களுக்கு பாடம் எடுக்க வேண்டாம்.. சட்டசபையில் கர்ஜித்த உத்தவ் தாக்கரே

    நல்லவர்கள் எங்கள் கூட்டணியில் இணைவார்கள் என்று கூறி வந்தார் கமல்ஹாசன், சட்டப்பஞ்சாயத்து இயக்கம், ஆம் ஆத்மி கட்சி போன்ற கட்சிகளை மனதில் வைத்துதான் கமல்ஹாசன் அவ்வாறு கூறி வந்தார். இந்த நிலையில்தான் திடீரென ஐஜேகே, சமக கட்சிகளுடன் கூட்டணி ஏற்பட்டது.

    தமிழக சட்டசபைத் தேர்தல் களத்தில் ஆம் ஆத்மி கட்சிக்கு என்று சரியான கட்டமைப்பு எதுவும் இல்லை என்பதை உணர்ந்துதான் அரவிந்த் கெஜ்ரிவால் தேர்தலில் போட்டியிடும் முடிவில் இருந்து விலகியிருக்கிறார். கெஜ்ரிவாலின் இந்த அறிவிப்பு கமல்ஹாசனுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் என்றே அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

    English summary
    Aam Aadmi Party (AAP) leader and Delhi Chief Minister Arvind Kejriwal has announced that the party will not contest the Tamil Nadu Assembly elections. Aam Aadmi Party's announcement has come as a shock to MNM party leader Kamal Haasan.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X