டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சுப்ரீம் கோர்ட்டில் பாஜக கொடி.. சர்ச்சையான டிவீட்.. சிக்கிய காமெடி நடிகர்.. பாய்ந்தது வழக்கு!

பாஜக கொடியை சுப்ரீம் கோர்ட்டில் பறப்பதுபோல ட்வீட் போட்ட நடிகர் மீது வழக்கு பாய்ந்துள்ளது

Google Oneindia Tamil News

டெல்லி: சுப்ரீம் கோர்ட் மீது பாஜக கொடி பறப்பது போல் ட்விட் போட்ட நடிகர் குணால் கமரா மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில், ஆர்க்கிடெக்ட் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் அவரை தற்கொலைக்கு தூண்டியதாக பிரபல டிவி செய்தி இயக்குனர் அர்னாப் கோசுவாமி மீது குற்றம் சாட்டப்பட்டு, கைதும் செய்யப்பட்டார். 2 நாளைக்கு முன்பு அவருக்கு சுப்ரீம் கோர்ட்டில் இடைக்கால ஜாமீனும் வழங்கப்பட்டது.. இது குறித்து பிரபல காமெடி நடிகரான குணால் குமரா 2 ட்வீட்களை பதிவிட்டிருந்தார்.

Attorney General gave permission to file case against Kunal Kamra

அதில், ஒரு போட்டோவில் சுப்ரீம் கோர்ட்டில் பாஜக கொடி பறப்பது போலவும், இன்னொரு போட்டோவில் நீதிமன்ற கட்டிடம் முழுக்க காவி நிறத்தில் இருப்பதை போலவும் ட்வீட்கள் பதிவிட்டிருந்தார்.. இது கடுமையான சர்ச்சையையும், மிகுந்த பரபரப்பையும் எழுப்பியது.

இந்த ட்வீட்களுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர பலர் அட்டர்னி ஜெனரல் அலுவலகத்திற்கு கடிதம் எழுதியிருந்தனர்.

செம செம "ஹஸ்கி"... பேசி பேசியே சொக்க வைத்த அனுசுயா.. "மயங்கி" விழுந்த மருதுபாண்டி.. அடப் பாவமே!

அதனடிப்படையில், குணாலின் ட்வீட்கள் காமெடிக்கும், நீதிமன்ற அவமதிப்பிற்குமான எல்லையை கடந்திருப்பதாக குறிப்பிட்ட அட்டர்னி ஜெனரல் கேகே வேணுகோபால், குணால் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர ஒப்புதல் வழங்கியுள்ளார்.

குனால் கம்ரா கடந்த பிப்ரவரி மாதம், பிளைட்டில் செல்லும்போது, ரிபப்ளிக் தொலைக்காட்சி அர்னாப் கோசாமியிடம் கேள்விகளைக் கேட்டு அதை வீடியோவாகவும் எடுத்து பதிவேற்றி இருந்தார்... அதனால் இண்டிகோ விமானம் இவர் வாழ்நாள் முழுவதும் தங்கள் விமானத்தில் பயணிக்க தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
Attorney General gave permission to file case against Kunal Kamra
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X