B.1.1529 உருமாறிய கொரோனா.. டெல்டாவை விட ஆபத்து.. காற்றிலும் பரவ வாய்ப்பு?.. பீதியில் உலக நாடுகள்!
டெல்லி: உலகம் முழுவதும் ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக ஆட்டம் போட்டு வரும் கொரோனா தொற்றை கட்டுக்குள் கொண்டு வர முடியாமல் உலக நாடுகள் திணறிக் கொண்டிருக்கின்றன. கொரோனா வைரஸ் தொடர்ந்து உருமாறி வருவதால் அதனை கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை.
இந்தியா உள்ளிட்ட சில நாடுகளில் கொரோனாவின் ஆதிக்கம் குறைந்து இருந்தாலும் பல ஐரோப்பிய நாடுகளில் ஆதிக்கம் அதிகமாக இருக்கிறது. இது ஒருபுறமிருக்க தென்னாப்பிரிக்காவில் புதிய வகை உருமாறிய கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது உலக நாடுகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

B.1.1529 வைரஸ்
தென்னாப்பிரிக்காவில் உருவாகி மிக வேகமாக பரவும் இந்த புதிய வகை உருமாறிய கொரோனா B.1.1529 என்று அழைக்கப்படுகிறது. இந்த வைரஸ் 30 முறை உருமாற்றம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனாலும் B.1.1.529 மாறுபாடு ஒட்டுமொத்தமாக 50 பிறழ்வுகளைக்(உருமாற்றம்) கொண்டுள்ளது, இதில் ஸ்பைக் புரதத்தில் மட்டும் 30-க்கும் மேற்பட்ட பிறழ்வுகள் உள்ளன. உலக நாடுகளை ஆட்டிப்படைத்த டெல்டா வைரஸ் மாறுபாட்டிற்கான இரண்டு மாற்றங்களுடன் ஒப்பிடும்போது B.1.1529 வைரஸ் புதிய மாற்றங்களுடன் உள்ளது என்றும் இந்த வைரஸ் டெல்டாவை விட வீரியம்மிக்கது என்றும் அதிர்ச்சி தகவல்கள் கூறுகின்றன.

தோற்றம் குறித்து ஊகங்கள்
இந்த வைரஸ் மாறுபாட்டின் தோற்றம் குறித்து பல்வேறு ஊகங்கள் உலா வருகின்றன. உள்ளன. ஆனால் இது ஒரு நோயாளியிடமிருந்து உருவாகியிருக்கலாம் என்று UCL மரபியல் நிறுவனத்தின் இயக்குனர் ஃபிராங்கோயிஸ் பலூக்ஸ் கூறுகிறார். இந்த வைரஸ் "நோய் எதிர்ப்பு சக்தி குறைந்த நபரின் நீண்டகால நோய்த்தொற்றின் போது, அதாவது சிகிச்சை அளிக்கப்படாத எய்ட்ஸ் நோயாளிக்கு ஏற்பட்டிருக்கலாம் என்று அவர் அடித்து கூறுகிறார்.

2 டோஸ் தடுப்பூசி போடப்பட்ட மக்கள்
தென்னாப்பிரிக்காவில் முதன்முதலில் அடையாளம் காணப்பட்ட B.1.1529 வைரஸ் போட்ஸ்வானா உட்பட அருகிலுள்ள நாடுகளுக்கும் பரவியுள்ளது. முழுமையாக 2 டோஸ் தடுப்பூசி போடப்பட்ட மக்கள் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதுதான் வேதனையான விஷயம். இதேபோல் ஹாங்காங்கில் தென்னாப்பிரிக்காவின் சில பகுதிகளிலிருந்து வந்த பயணிகளிடம் புதிய வைரஸ் பாதிப்பு இருக்கிறது. இந்த புதிய B.1.1529 வைரஸ் மாறுபாடு காற்றில் மூலமும் பரவலாம் என்று மருத்துவ நிபுணர்கள் குண்டை தூக்கி போடுகின்றனர்.
Recommended Video

இந்தியாவில் கட்டுப்பாடுகள்
B.1.1529 வைரஸ் பரவி வருவதால் இந்தியா தென்னாப்பிரிக்கா, போட்ஸ்வானா மற்றும் ஹாங்காங்கில் இருந்து வரும் பயணிகளையும், அவர்களுடன் தொடர்பில் இருப்பவர்களையும் கடுமையாகப் பரிசோதிக்க தொடங்கியுள்ளது. இதேபோல் இங்கிலாந்து, சிங்கப்பூர் மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் தென்னாப்பிரிக்கா, போட்ஸ்வானா மற்றும் நான்கு ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து வரும் விமானங்களுக்கு தடை விதித்துள்ளன. ஜெர்மனியும் இத்தாலியும் தென்னாப்பிரிக்காவிலிருந்து பெரும்பாலான விமான பயணங்களுக்கு தடை விதித்துள்ளன.
-
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி












Click it and Unblock the Notifications