Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பெங்களூர் டூ மைசூர் போக ஜஸ்ட் 90 நிமிடங்கள்.. இறுதிகட்டத்தில் எக்ஸ்பிரஸ் சாலை.. வருகிறார் கட்கரி

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பெங்களூரு-மைசூரு இடையே 10 வழி விரைவு சாலை (எக்ஸ்பிரஸ் வே) அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ளது. இந்த சாலைப் பணிகளை ஆய்வு செய்ய வரும் ஜனவரி 5 ஆம் தேதி மத்திய சாலைப்போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி வர உள்ளார். இந்த சாலையால் பெங்களூரு- மைசூரு இடையேயான 118 கி.மீட்டர் தொலைவு தூரத்தை வெறும் 90 நிமிடங்களில் கடக்க முடியும்.

இந்தியாவின் சாலை போக்குவரத்தை மேம்படுத்தும் திட்டங்களில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு கவனம் செலுத்தி வருகிறது.

வருகிற 2024- ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் அமெரிக்காவிற்கு இணையான சாலைகள் ஏற்படுத்தப்படும் என்று கூறும் மத்திய சாலைப்போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி இதற்கான நிதிகளை ஒதுக்குவது, திட்டங்கள் குறித்த ஆலோசனையிலும் ஈடுபட்டு வருகிறார்.

தேசிய நெடுஞ்சாலையாக..

தேசிய நெடுஞ்சாலையாக..

அந்த வகையில், கர்நாடகாவின் எப்போது பரபரப்பாக காணப்படும் சாலைகளில் ஒன்றாக பெங்களூரு - மைசூரு சாலையை எக்ஸ்பிரஸ் வே சாலையாக மாற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன. சுமார் 8 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் நடைபெறும் பணிகள் வரும் மார்ச் மாதம் நிறைவு அடையும் என்று எதிர்பார்க்கபப்டுக்கிறது. கர்நாடகாவின் இரண்டு நகரங்களை இணைக்கும் சாலை என்பதால் வாகன போக்குவரத்து எப்போதும் பரபரப்பாக காணப்படும் சாலைகளில் ஒன்றாக இது உள்ளது.

5-ஆம் தேதி வருகிறார் கட்கரி

5-ஆம் தேதி வருகிறார் கட்கரி

தேசிய நெடுஞ்சாலையாக இருந்த இந்த சாலை எக்ஸ்பிரஸ் வே-யாக மாற்றப்பட உள்ளது. 10 வழிச்சாலையாக அமையும் இந்த சாலைப் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. பெங்களூரு - மைசூரு இடையேயான எக்ஸ்பிரஸ் வே நெடுஞ்சாலையை பிரதமர் மோடி வரும் மார்ச் மாதம் திறந்து வைக்க இருக்கிறார். இந்த நிலையில், இந்த சாலையில் ஆய்வு பணிகளை பார்வையிடுவதற்காக வரும் ஜனவரி 5 ஆம் தேதி நிதின் கட்கரி வர இருப்பதாக கர்நாடக பொதுப்பணித்துறை அமைச்சர் சிசி படீல் தெரிவித்தார்.

சாலையை ஆய்வு செய்வதற்காக

சாலையை ஆய்வு செய்வதற்காக

கர்நாடக சட்டமன்றத்தில் ஜேடிஎஸ் கட்சி எம்.எல்.சி எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த சிசி பட்டீல் இது தொடர்பாக மேலும் கூறியதாவது: - கர்நாடாகாவில் வழக்கத்தை விட கூடுதலாக பெய்த மழையால் எக்ஸ்பிரஸ் வேயின் சில பகுதிகள் நீரில் மூழ்கின. இதற்கு ஆக்கிரமிப்புகளும் ஒரு காரணம் ஆகும். இந்த சாலையை ஆய்வு செய்வதற்காக வரும் 5 ஆம் தேதி மத்திய அமைச்சர் நிதின் கட்காரி வருகை தர இருக்கிறார். ராம்நகர், சென்னபட்டணா, மண்டியா மற்றும் மத்தூர் ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் தங்கள் நகரங்களை எக்ஸ்பிரஸ் வேவுடன் இணைக்க வேண்டும் என்று விரும்புகின்றனர்.

பணிகள் முழுமை அடையவில்லை

பணிகள் முழுமை அடையவில்லை

ஆனால், விவசாயநிலங்கள் இருப்பதால் விவசாயிகளின் வாழ்வாதாரம் கருதி இதை செயல்படுத்த முடியாத நிலை உள்ளது. 8,453 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும் இந்த அதிவிரைவு சாலை அடுத்த ஆண்டு மார்ச்சில் திறக்கப்பட இருந்தாலும், பெங்களூரு - மாண்ட்யா வரை வாகனங்கள் இந்த சாலையை பயன்படுத்த தற்போது தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அனுமதி அளித்துள்ளது. மீதமுள்ள சாலைகளில் இன்னும் பணிகள் முழுமை அடையவில்லை" என்றார்.

வெறும் 90 நிமிடத்தில் செல்ல முடியும்

வெறும் 90 நிமிடத்தில் செல்ல முடியும்

தற்போது 118 கி.மீட்டர் தொலைவு கொண்ட இந்த சாலையில் மைசூருவில் இருந்து பெங்களூரு செல்ல 3.5 மணி நேரம் ஆகிறது. எக்ஸ்பிரஸ் வே ஆக மாற்றிய பின்னர் வெறும் 90 நிமிடத்தில் இந்த தொலைவை எட்டிவிட முடியும். இதனால், பயணிகளின் நேரம் வெகுவாக மிச்சமாகும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். தற்போது 16 இடங்கள் விபத்துக்கள் நடப்பதற்கான அபாயமான பகுதிகளாக கண்டறியப்பட்டுள்ளது.

சிசிடிவி கேமரா பொருத்துதல்

சிசிடிவி கேமரா பொருத்துதல்

இதற்கு எச்சரிக்கை பலகைகள் இல்லாததும் ஒரு காரணமாக சொல்லபப்டுகிறது. அதிவேகம் மற்றும் அஜாக்கிரதையால் அதிக விபத்துக்கள் நடப்பதாகவும் வாகனங்களின் வேகத்தை கண்காணிக்க 500 மீட்டருக்கு ஒரு சிசிடிவி கேமரா பொருத்துதல், எச்சரிக்கை குறியீடுகள் வைப்பது உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த சாலையில் அதிகபட்சமாக 100 கி.மீட்டர் வரைதான் செல்ல வேண்டும். அதற்கு மேல் செல்ல அனுமதி கிடையாது என்றும் நெடுஞ்சாலைத்தூறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+