Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

குழந்தைகளுடன் ராகுல்.. பாரத் ஜோடோ யாத்திரைக்கு செக்.. தேர்தல் கமிஷனுக்கு பறந்த என்சிபிசிஆர் புகார்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பாரத் ஜோடோ யாத்திரயைில் ராகுல் காந்தி குழந்தைகள், சிறுவர்-சிறுமிகளுடன் நடந்து செல்லும் நிலையில் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் (என்சிபிசிஆர்) சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சி சமீபத்திய தேர்தல்களில் சரிவை சந்தித்து வருகிறது. இந்நிலையில் 2024 நாடாளுமன்ற தேர்தலையொட்டி காங்கிரஸ் கட்சி தொண்டர்களுக்கு உற்சாகப்படுத்தும் வகையிலு, இந்தியாவில் காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கை நிரூபிக்கும் நோக்கத்திலும், பாரத் ஜோடோ யாத்திரை எனும் இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தை ராகுல்காந்தி துவங்கி உள்ளார்.

இந்த நடைப்பயணமானது கன்னியாகுமரில் இருந்து காஷ்மீர் வரை 12 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்கள் வழியாக 150 நாட்கள் நடைபெறுகிறது. கடந்த 7 ம் தேதி கன்னியாகுமரியில் உள்ள காந்தி மண்டபத்தில் இருந்து இந்த பாதயாத்திரை துவங்கியது.

பாரத் ஜோடோ யாத்திரை

பாரத் ஜோடோ யாத்திரை

இந்த பயணத்தை திமுக தலைவரும், தமிழக முதல்வருமான முக ஸ்டாலின் துவங்கி வைத்தார். தேசியக்கொடியை ராகுல்காந்தியிடம் வழங்கி முக ஸ்டாலின் பாரத் ஜோடோ யாத்திரையை துவக்கி வைத்தார். அதன்பிறகு 4 நாட்கள் வரை தமிழகத்தில் நடைப்பயணம் நடந்தது. தற்போது ராகுல்காந்தியின் நடைப்பயணம் கேரளாவை அடைந்துள்ளது. கேரளாவில் கடந்த 11ம் தேதி முதல் நடைப்பயணம் துவங்கி நடந்து வருகிறது. இன்று 4வது நாளாக கேரளாவில் ராகுல்காந்தி நடைப்பயணத்தை துவங்கி உள்ளார்.

சிறுவர்-சிறுமிகள்

சிறுவர்-சிறுமிகள்

ராகுல் காந்திக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்து வருகின்றனகள். பெண்கள், சிறுவர், சிறுமிகள் என அனைவரும் அவருடன் கைக்கோர்த்து நடைப்பயணத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பலர் ராகுல் காந்தியுடன் செல்பி எடுத்து மகிழ்வதோடு, அவருக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். மேலும் பூங்கொத்து கொடுத்து ராகுல்காந்திக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

தேர்தல் ஆணையத்தில் புகார்

தேர்தல் ஆணையத்தில் புகார்

இந்நிலையில் தான் அரசியல் லாபத்துக்காக ராகுல் காந்தி சிறுவர்களை பாரத் ஜோடோ யாத்திரையில் பயன்படுத்துவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதுதொடர்பாக தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக எழுதப்பட்டுள்ள கடிதத்தில், ‛‛குழந்தைகளை அரசியல் லாபத்துக்கு பயன்படுத்துவது விதிமீறலாகும். இது இந்திய அரசியலமைப்பின் 21வது பிரிவுக்கு எதிரானது. எனவே, குழந்தைகளை அரசியல் கருவிகளாக தவறாக பயன்படுத்துவதற்காக காங்கிரஸ், ராகுல்காந்தி பற்றி விசாரித்து தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் " என்ற சாராம்சங்கள் உள்ளன.

காங்கிரஸ் விமர்சனம்

காங்கிரஸ் விமர்சனம்

இதனை தற்போது காங்கிரஸ் கட்சி கடுமையாக எதிர்த்துள்ளது. பாஜகவின் கைப்பாவையாக தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் மாறிவிட்டதாக காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார். இதுபற்றி அவர் ‛‛முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அரசால் தொடங்கப்பட்ட என்சிபிசிஆர் இப்போது ஆர்எஸ்எஸ்ஸின் துணை அமைப்பாக மாறிவிட்டது. பாரத் ஜோடோ யாத்திரையை தடம்மாற்றும் வகையில் பரிதாபகரமான முயற்சியை இது மேற்கொள்கிறது'' என விமர்சனம் செய்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+