டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கிரிப்டோகரன்சிகளுக்கு செக்.. மத்திய அரசு மசோதாவால் கலங்கிய கிரிப்டோ மார்க்கெட்- சரிந்தது பிட்காயின்!

Google Oneindia Tamil News

டெல்லி: தனியார் கிரிப்டோகரன்சிகளுக்கு கட்டுப்பாடு விதிக்கும் மத்திய அரசின் மசோதா காரணமாக கிரிப்டோகரன்சிகள் மார்க்கெட் பெரிய அளவில் ஆட்டம் கண்டுள்ளது.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் இந்தியாவில் தனியார் கிரிப்டோ கரன்சியை கட்டுப்படுத்தும் மசோதா ( The Cryptocurrency and Regulation of Official Digital Currency Bill, 2021,) கொண்டு வரப்பட உள்ளது. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் வரும் நவம்பர் 29ம் தேதி தொடங்க உள்ளது.

இந்த மசோதா மூலம் பல்வேறு தனியார் கிரிப்டோ கரன்சிகள் தடை செய்யப்படவும், சில கரன்சிகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படவும் உள்ளது. அதோடு ஆர்பிஐ மூலம் ஒழுங்குபடுத்தப்பட்ட டிஜிட்டல் கரன்சி அதிகாரபூர்வமாக அறிமுகப்படுத்துவதற்கான அடிப்படை திட்டத்தை வகுக்கும் வகையிலும் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளது.

தவறானவர்கள் கையில் கிரிப்டோகரன்சி செல்வதை தடுக்க வேண்டும்- உலக நாடுகளுக்கு பிரதமர் மோடி அழைப்பு தவறானவர்கள் கையில் கிரிப்டோகரன்சி செல்வதை தடுக்க வேண்டும்- உலக நாடுகளுக்கு பிரதமர் மோடி அழைப்பு

நீக்கம்

நீக்கம்

ஆனால் மொத்தமாக தனியார் கிரிப்டோ கரன்சிகள் தடை செய்யப்படுவதற்கான வாய்ப்பு குறைவு. இந்த தொழில்நுட்பத்தை ஆதரிக்கும் வகையில் சில நிறுவன கரன்சிகளுக்கு அனுமதி அளிக்கப்படும் என்று கூறப்படுகிறது. இறுதிக்கட்ட ஆலோசனைக்கு பிறகு இந்த மசோதா மத்திய அரசு ஒப்புதல் பெற்று தாக்கல் செய்யப்படும்.

அறிவிப்பு மத்திய அரசு

அறிவிப்பு மத்திய அரசு

கிரிப்டோகரன்சி குறித்த நாடாளுமன்ற கமிட்டி அமர்வு விவாதத்திற்கு பின்பாக இந்த மசோதா குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஆர்பிஐ அமைப்பும், அதன் கவர்னர் சக்தி காந்தா தாஸும் இது தொடர்பாக அரசுக்கு ஆலோசனை வழங்கி வந்த நிலையில் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளது. கிரிப்டோகரன்சி குறித்து பிரதமர் மோடி ஆர்பிஐயுடன் ஆலோசனை மேற்கொண்ட நிலையில் இந்த அறிவிப்பு வந்துள்ளது.

கிரிப்டோகரன்சிகள்

கிரிப்டோகரன்சிகள்

இந்த நிலையில்தான் இந்த அறிவிப்பு காரணமாக பல்வேறு கிரிப்டோகரன்சிகள் பெரிய அளவில் சரிவை சந்தித்துள்ளன. நேற்று இரவே சரிவை சந்திக்க தொடங்கிய கிரிப்டோகரன்சிகள் இன்று பெரிய அளவில் இழப்பை சந்தித்தன. பிட்காயின் இன்று 20 சதவிகித சரிவை சந்தித்து $55,460.96 டாலராக மதிப்பு உள்ளது. முன்பு 69 ஆயிரம் டாலரில் இருந்த பிட்காயின் சரிந்து 55,460 டாலராகி உள்ளது.

மார்க்கெட்

மார்க்கெட்

அதேபோல் Ethereum 15 சதவிகிதம் சரிவை சந்தித்தது. $4,167 டாலர் மதிப்பில் Ethereum உள்ளது. Tether காயின்ஸ் 18 சதவிகித சரிவை சந்தித்துள்ளது. மத்திய அரசின் அறிவிப்பால் இந்தியாவில் கிரிப்டோகரன்சி மார்க்கெட் மொத்தமாக காலியாகும் நிலை ஏற்பட்டுள்ளது. பலர் இதில் முதலீடு செய்தால் எதிர்காலம் இல்லை. ஆபத்து என்று அச்சம் அடைந்துள்ளனர்.

பிட்காயின்

பிட்காயின்

இதன் காரணமாக மார்க்கெட் மொத்தமாக நெகட்டிவ் டிரெண்டில் சென்று கொண்டு இருக்கிறது. இந்தியாவின் அறிவிப்பு சர்வதேச அளவில் எதிரொலித்து மொத்தமாக கிரிப்டோ மார்க்கெட் குலுங்கி உள்ளது. மாறாக மீம்ஸ் காயின்களான டாட்ஜ் காயின், எஸ்எச்ஐபி காயின்கள் முறையே 0.30 சதவிகிதம், 1.64 சதவிகிதம் மதிப்பு உயர்ந்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
Bitcoin and Ethereum saw huge fall due to Indian Union Govts Bill to regulate Cryptocurrency in Parliament Winter Session.'
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X