டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"பொது சிவில் சட்டம்.." மசோதாவை கொண்டு வந்த பாஜக எம்பி! கொந்தளித்த திருச்சி சிவா! ஆனாலும் நிறைவேறியது

Google Oneindia Tamil News

டெல்லி: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், பொது சிவில் சட்டம் தொடர்பாக முக்கிய மசோதா நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டது.

கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின்னர் தேர்தல் சமயத்தில் பாஜக சார்பில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்பட்டு வருகிறது. காஷ்மீர் சிறப்புச் சட்டம் முதலில் ரத்து செய்யப்பட்டது. பின்னர் சிஏஏ மற்றும் என்ஆர்சி கொண்டு வரப்பட்டது.

அதற்கு முன்பாகவே, உத்தரப் பிரதேசத்தில் உள்ள அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் பணிகள் தொடங்கப்பட்டன. தேர்தல் சமயத்தில் பாஜக அளித்த மற்றொரு முக்கிய வாக்குறுதிகளில் ஒன்று பொது சிவில் சட்டம். இப்போது அதற்கான பணிகளையும் பாஜத ஆரம்பித்துள்ளது.

 'பொது சிவில் சட்டம்’ இஸ்லாமியர்களை அச்சுறுத்தும் வகையில் பேசுகின்றனர்: பாஜக வேலுார் இப்ராஹிம் ஆவேசம் 'பொது சிவில் சட்டம்’ இஸ்லாமியர்களை அச்சுறுத்தும் வகையில் பேசுகின்றனர்: பாஜக வேலுார் இப்ராஹிம் ஆவேசம்

 பொது சிவில் சட்டம்

பொது சிவில் சட்டம்

நமது இந்தியாவில் நாடு முழுக்க குற்றவியல் நடவடிக்கைக்கான சட்டம் ஒரே போலத் தான் உள்ளது. அதாவது கொலை, கொள்ளை போன்ற குற்றவியல் சம்பவங்களில் யார் ஈடுபட்டாலும் ஒரே தண்டனை தான். அதேநேரம் சிவில் சட்டங்களைப் பொறுத்தவரை நாட்டில் ஒவ்வொரு மதங்களுக்கும் ஒவ்வொரு சிவில் சட்டங்கள் பின்பற்றப்படுகிறது. அதாவது திருமணம், விவகாரத்து உள்ளிட்ட விஷயங்களுக்கு பல்வேறு மதங்களுக்கு பல்வேறு சட்டங்கள் பின்பற்றப்படுகிறது. அதாவது நமது நாட்டில் தனிநபர்களுக்கான சிவில் சட்டம் மதங்களுக்கு மதம் மாறுபடும்.

பாஜக

பாஜக

இப்படி நமது நாட்டில் பல சிவில் சட்டங்கள் உள்ளன. இந்த பல்வேறு சிவில் சட்டங்களை நீக்கி, அனைத்து தரப்பினருக்கும் ஒரே சிவில் சட்டத்தைக் கொண்டு வர வேண்டும் என பாஜக உள்ளிட்ட ஒரு தரப்பினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இருப்பினும், பல்வேறு மதங்களை உள்ளடக்கிய இந்தியா போன்ற நாட்டில் பொது சிவில் சட்டம் என்பது சரியாக இருக்காது என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கூறி வருகின்றனர். இருந்த போதிலும், பொது சிவில் சட்டத்தை உருவாக்குவதற்கான நடவடிக்கைகளை பாஜக தொடங்கிவிட்டது என்றே சொல்லலாம்.

 தனிநபர் மசோதா

தனிநபர் மசோதா

இப்போது நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், பாஜக எம்பி கிரோடி லால் மீனா, ராஜ்யசபாவில் பொது சிவில் சட்டம் தொடர்பாக தனிநபர் மசோதாவை அறிமுகம் செய்தார். தனிநபர் மசோதா என்பது தனிப்பட்ட எம்பியால் அறிமுகப்படுத்தும் மசோதாவாகும். அதாவது இந்த மசோதாவை மத்திய அரசு கொண்டு வரவில்லை. மாறாக கிரோடி லால் மீனா என்ற அந்த எம்பி தனிப்பட்ட முறையில் அந்த மசோதாவை கொண்டு வந்தார்.

 கடும் எதிர்ப்பு

கடும் எதிர்ப்பு

நாடு முழுவதும் பின்பற்றக்கூடிய வகையில் ஒரு பொது சிவில் சட்டத்தை உருவாக்கத் தனியாக ஒரு குழுவை அமைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கிரோடி லால் மீனா இந்த தீர்மானத்தைக் கொண்டு வந்தார். அவர் இந்த மசோதாவை கொண்டு வந்ததும் எதிர்க்கட்சிகள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பொது சிவில் சட்டம் நாட்டை சிதைக்கும் என்றும் நாட்டின் பன்முக கலாச்சாரத்தைப் பாதிக்கும் எனக் கூறி எதிர்க்கட்சிகள் இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் ராஜ்யசபாவில் கடுமையான கூச்சல் குழப்பம் நிலவியது.

 மத்திய அமைச்சர்

மத்திய அமைச்சர்

எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் பேசுகையில், "நமது அரசியலமைப்பின் வழிகாட்டுதல் கொள்கைகளில் உள்ள விஷயம் தொடர்பாக மசோதா கொண்டு வருவது ஒரு உறுப்பினரின் சட்டப்பூர்வமான உரிமை.. இந்த விஷயத்தைச் சபையில் விவாதிக்கலாம். இது தனிநபர் மசோதா தான். இந்த நேரத்தில் அரசுக்கு எதிராக அவநம்பிக்கையை ஏற்படுத்துவது, மசோதாவை விமர்சிக்க முயல்வது தேவையற்றது" என்று அவர் கூறினார்.

 கொந்தளித்த திருச்சி சிவா

கொந்தளித்த திருச்சி சிவா

பல்வேறு எதிர்க்கட்சி உறுப்பினர்களும் இந்த மசோதாவுக்கு எதிராகக் கருத்துகளைத் தெரிவித்தனர். இதுபோன்ற ஒரு சட்டத்தை பல்வேறு சமூகங்களின் ஆலோசனை இல்லாமல் கொண்டு வரக் கூடாது என்று எதிர்க்கட்சி எம்பிக்கள் தெரிவித்தனர். சட்ட கமிஷன் அறிக்கையைக் குறிப்பிட்ட சிபிஎம் எம்பி ஜான் பிரிட்டாஸ், நாட்டில் பொது சிவில் சட்டம் தேவையில்லை என்றும் அது விரும்பத்தக்கது இல்லை என்றும் தெரிவித்தார். ஒரே மாதிரியான சிவில் சட்டம் மதச்சார்பின்மைக்கு எதிரானது என்று திமுகவின் திருச்சி சிவா கூறினார்.

 வாக்கெடுப்பு

வாக்கெடுப்பு

அதேபோல சமாஜ்வாதி கட்சியின் ஆர்ஜி வர்மாவும் இந்த மசோதாவை எதிர்த்தார், இது அரசியலமைப்பின் விதிகளுக்கு எதிரானது என்று அவர் தெரிவித்தார். இதையடுத்து இந்தத் தனிநபர் மசோதா தொடர்பாக வாக்கெடுப்பு நடைபெற்றது. அதில் தனிநபர் மசோதாவுக்கு எதிராக 23 வாக்குகள் பதிவானது. அதேநேரம் பொது சிவில் சட்டம் தொடர்பாக பாஜக எம்பி கிரோடி லால் மீனா கொண்டு வந்த மசோதாவுக்கு ஆதரவாக 63 வாக்குகள் பதிவானது. இருப்பினும்,

 குளிர்கால கூட்டத்தொடர்

குளிர்கால கூட்டத்தொடர்

இதற்கிடையே நாட்டில் ஒரே மாதிரியான பொது சிவில் சட்டத்தைக் கொண்டு வருவது தொடர்பாக விவாதிக்க பாஜக எம்பி ஹர்நாத் சிங் யாதவ் ராஜ்யசபாவில் ஜீரோ ஹவர் நோட்டீஸ் அளித்தார். வரும் நாட்களில் குளிர்கால கூட்டத்தொடரில் பொது சிவில் சட்டம் முக்கிய பேசுபொருளாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் நடந்த முடிந்த குஜராத் சட்டசபைத் தேர்தலிலும் கூட பொது சிவில் சட்டத்தைக் கொண்டு வருவோம் என பாஜக வாக்குறுதி அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

English summary
Private bill tabled by BJP MP on Uniform Civil Code: Uniform Civil Code latest updates in parliament winter session.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X