விஐபி கலாச்சாரத்திற்கு எதிரான 'ஆம் ஆத்மி' அமைச்சரா இப்படி.. சிறைக்குள் மசாஜ்.. வெளியான வீடியோ
டெல்லி: குஜராத்தில் தேர்தல் பிரசாரம் விறுவிறுப்படைந்துள்ள நிலையில், தற்போது திகார் சிறையில் உள்ள ஆம் ஆத்மியின் டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் தொடர்பான பழைய வீடியோவை பாஜக மீண்டும் பகிர்ந்திருக்கிறது.
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான அமைச்சரவையில் 'சத்யேந்தர் ஜெயின்' சுகாதாரத்துறை அமைச்சராக பணியாற்றி வந்த நிலையில் 'சட்டவிரோத பணப் பரிமாற்ற' வழக்கில் கடந்த மே 30 அன்று இவர் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் கடந்த 17ம் தேதி ஜாமீன் கோரி நீதிமன்றத்தை அணுகியிருந்தார். ஆனால் அவருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டுவிட்டது. தற்போது குஜராத்தில் மும்முனை போட்டி நிலவி வரும் நிலையில் சத்யேந்தர் ஜெயினின் பழைய வீடியோ ஒன்றை பாஜக பகிர்ந்திருக்கிறது.

ஜாமீன் மறுப்பு
சுகாதாரத்துறை அமைச்சராக சத்யேந்தர் பணியாற்றி வந்த காலத்தில் கடந்த 2017ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சிபிஐ இவர் மீது வழக்குப் பதிவு செய்தது. இதனை அடிப்படையாக கொண்டு அமலாக்கத்துறையும், இவர் மீதும் இவரது மனைவி உட்பட 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியது. இந்நிலையில் விசாரணைக்கு சத்யேந்தர் ஜெயின் ஒத்துழைக்கவில்லை என்று கூறி அமலாக்கத்துறை கடந்த மே மாதம் இவரையும் இவரது நண்பர்கள் இரண்டு பேரையும் கைது செய்து டெல்லி திகார் சிறையில் அடைத்தது. இவ்வாறு, இருக்கையில் தனக்கு ஜாமீன் வேண்டும் என்று கோரி கடந்த ஜூன் மாதம் சத்யேந்தர் நீதிமன்றத்தை நாடியிருந்தார். ஆனால் ஜாமீன் மறுக்கப்பட்டது.

நடவடிக்கை
இதனையடுத்து கடந்த 17ம் தேதி மீண்டும் ஜாமீன் கோரி விண்ணப்பித்திருந்தார். இதற்கிடையில் சிறையில் இவருக்கு சிறையில் சொகுசான வசதிகள் செய்து தரப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. அமலாக்கத்துறை இதனை நீதிமன்றத்திற்கு கொண்டு சென்றது. இது தொடர்பான வீடியோ ஆதாரம் ஒன்றும் வெளியாகின. அதாவது, ஜெயின் படுத்திருப்பதை போலவும், அவரது காலுக்கு அடையாளம் தெரியாத நபர் ஒருவர் மசாஜ் செய்வதை போலவும் அந்த வீடியாவில் காட்சிகள் பதிவாகியிருந்துள்ளன. இதனையடுத்து இந்த வீடியோவை ஆதாரமாக கொண்டு சிறை காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.

விமர்சனம்
திகார் சிறை கண்காணிப்பாளர் அஜித் குமார் இந்த விவகாரம் தொடர்பாக சஸ்பெண்ட் செய்யப்பட்டார். பாஜக சத்யேந்தர் ஜெயினின் நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்தது. சிறையில் கூட இவ்வளவு சொகுசாக இருக்க முடியுமா? என்றும் கேள்வியெழுப்பியிருந்தது. இது குறித்து பாஜகவின் தேசிய செய்தி தொடர்பாளர்களில் ஒருவரான ஷெஹ்சாத் கடுமையான விமர்சனத்தை முன்வைத்திருந்தார். "ஏன் சிறையில் கூட அவரால் சொகுசு இல்லாமல் இருக்க முடியாதா? இவரை கெஜ்ரிவால் பாதுகாக்க முடியுமா? இவரை ஏன் அமைச்சர் பதவியிலிருந்து தூக்கியெறிய கூடாது?" என்று ஷெஹ்சாத் கேள்வியெழுப்பியிருந்தார்.

பழைய வீடியோ
ஆனால் இந்த குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்று ஆம் ஆத்மி அடியோடு மறுத்தது. பாஜக இந்த விவகாரத்தில் சதி செய்வதாகவும், வேண்டுமென்றே எங்கள் அமைச்சர் மீது வீண் பழி சுமத்தப்பட்டிருப்பதாகவும் கட்சி மறுப்பு தெரிவித்திருக்கிறது. இந்த விவகாரம் எல்லாம் சர்ச்சையாகி ஓய்ந்துவிட்டது. இவ்வாறு இருக்கையில் இரண்டாவது முறையாக ஜாமீன் கோரி கடந்த 17ம் மனுத்தாக்கல் செய்திருந்த சத்யேந்தர் ஜெயினுக்கு நீதிமன்றம் ஜாமீன் மறுத்துள்ளது. எனவே பாஜக மீண்டும் இந்த வீடியோவை சமூக ஊடகங்களில் பாஜக பதிவேற்றியுள்ளது.

தேர்தல்
இது குறித்து சிறைத்துறை அதிகாரிகள் கூறுகையில், "இது பழைய வீடியோ, இந்த சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" என்று கூறியுள்ளனர். குஜராத்தில் தற்போது தேர்தல் களம் பரபரபாகியுள்ள நிலையில் அங்கு மும்முனை போட்டி நிலவுவதால் ஆம் ஆத்மியின் செல்வாக்கை சரிக்க இந்த வீடியோ வெளியிடப்பட்டிருக்கலாம் என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications