டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அவ்வையார் 3,000 ஆண்டுகளுக்கு முந்தையவரா? நிர்மலா சீதாராமன் குறிபிட்டது தவறு- புது சர்ச்சை

Google Oneindia Tamil News

Recommended Video

    Budget 2020 | Nirmala Sitharaman highlights Aathichudi in budget speech

    டெல்லி: மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவ்வையார் வாழ்ந்த காலம் குறித்து குறிப்பிட்டது சர்ச்சையாகி உள்ளது.

    லோக்சபாவில் பட்ஜெட்டை தாக்கல் செய்த நிர்மலா சீதாராமன், பூமி திருத்தி உண் என்கிற ஆத்திச் சூடியை மேற்கோள் காட்டினார். அப்போது தமிழகத்தில் 3,000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பெண் புலவர் அவ்வையார் எனவும் சுட்டிக்காட்டினார்.

    Budget 2020: A controversy erupts over Nirmala Sitharaman remark on Avvaiyars period

    ஆனால் ஆத்திச்சூடியை இயற்றியது 3,000 ஆண்டுகளுக்கு முன்வாழ்ந்த அவ்வையார் அல்ல என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் எம்.பி. ரவிக்குமார் மறுப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ரவிக்குமார் தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

    பூமி திருத்தி உண் - என்ற ஆத்திச்சூடியை குறிப்பிட்டு அது , அவ்வை 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எழுதியது என நிதி அமைச்சர் கூறினார். அது தவறு.

    சங்ககால அவ்வையும் ஆத்திச்சூடி பாடிய அவ்வையும் வேறு வேறு. ஆத்திச்சூடி பாடிய ஔவை 12 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவர்.

    பட்ஜெட் 2020: வரிகளில் மாற்றம்.. எந்த பொருள் விலை ஏறும், எது விலை குறையும்?பட்ஜெட் 2020: வரிகளில் மாற்றம்.. எந்த பொருள் விலை ஏறும், எது விலை குறையும்?

    இவ்வாறு ரவிக்குமார் கூறியுள்ளார்.

    English summary
    A new controversy has erupted over the Union Finance Minister Nirmala Sitharaman remarks on Tamil Poet Avvaiyar's period.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X