மோடி ஸ்டைல் இல்லையே இது.. திடீரென திமுக ஸ்டைலில் பேசிய நிர்மலா.. அதுவும் அந்த வார்த்தை.. ட்விஸ்ட்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மத்திய பட்ஜெட் 2024-25ல் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டு வரும் அறிவிப்புகள் பெரிய அளவில் கவனம் பெற்றுள்ளது. முக்கியமாக திமுக ஸ்டைலில் அவர் வெளியிட்டு வரும் அறிவிப்புகள் மிகப்பெரிய அளவில் கவனம் பெற்று இருக்கிறது.

2024-25ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை பிப்ரவரி 1ஆம் தேதி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். தேர்தலுக்கு முன்பாக தாக்கல் செய்யப்பட்ட இந்த பட்ஜெட் பாதி பட்ஜெட் ஆகும். இன்று முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது.

budget 2024

2024 லோக்சபா தேர்தல் நடந்து முடிந்து உள்ள நிலையில் இந்த பட்ஜெட் மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. லோக்சபா தேர்தல் நடந்து முடிந்துவிட்டதால்.. முழு பட்ஜெட் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

2024 மக்களவை தேர்தலுக்கு பின் மோடி 3.0 அரசு தாக்கல் செய்யும் முழுமையான பட்ஜெட் என்பதால் இதன் மீது பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. மத்திய பட்ஜெட் 2024-25ல் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டு வரும் அறிவிப்புகள் பெரிய அளவில் கவனம் பெற்றுள்ளது. முக்கியமாக திமுக ஸ்டைலில் அவர் வெளியிட்டு வரும் அறிவிப்புகள் மிகப்பெரிய அளவில் கவனம் பெற்று இருக்கிறது.

என்ன குறிப்பிட்டார்?: நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், 2024 பட்ஜெட்டில், வேலைவாய்ப்பு, திறன் மேம்பாடு, நடுத்தர மக்களின் நலன், சிறு, குறு தொழில் நிறுவனங்கள் மீது அதிக கவனம் செலுத்தப்படும். உள்நாட்டு கல்வி நிறுவனங்களில் உயர்கல்விக்காக ₹10 லட்சம் வரை கடனுக்கான நிதியுதவியை அரசு வழங்கப்படும்.

இந்த பட்ஜெட்டில், அதிக கவனம் செலுத்தப்பட உள்ளவை,

▪️ விவசாயத்தில் உற்பத்தித்திறன் மற்றும் பின்னடைவு;
▪️ வேலைவாய்ப்பு மற்றும் திறன்;
▪️ மேம்பட்ட மனித வளம், சமூக நீதி;
▪️ உற்பத்தி மற்றும் சேவைகள்;
▪️ நகர்ப்புற வளர்ச்சி;
▪️ ஆற்றல் பாதுகாப்பு;
▪️ உள்கட்டமைப்பு;
▪️ புதுமை, ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு;

அரசின் முன்னெடுப்பால் அடுத்த 2 ஆண்டுகளில் ஒரு கோடி விவசாயிகள் இயற்கை விவசாயத்தில் ஈடுபடுவார்கள். வேளாண் மற்றும் அதுசார்ந்த துறைகளுக்கு ₹1.52 லட்சம் கோடி பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்படும். 5 ஆண்டுகளில் 4.1 கோடி இளைஞர்களுக்கான பிரதமரின் 5 அம்சத் திட்ட அமலாக்கத்துக்கு ₹2 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

80 கோடி மக்களுக்கு இலவச உணவு தானியம் வழங்கும் 'பிஎம் கரீப் அன்ன யோஜனா' திட்டம் அடுத்த 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படும். 2024 பட்ஜெட்டில், வேலைவாய்ப்பு, திறன் மேம்பாடு, நடுத்தர மக்களின் நலன், சிறு, குறு தொழில் நிறுவனங்கள் மீது அதிக கவனம் செலுத்தப்படும். பெண்கள், விவசாயிகள், இளைஞர்கள், வேலைவாய்ப்பு, தொழில்துறை வளர்ச்சிக்கு பட்ஜெட்டில் முக்கியத்துவம் வழங்கப்படும், என்று நிர்மலா சீதாராமன் பேசி உள்ளார்.

வியப்பு, சமூக நீதி குறித்தும் பட்ஜெட்டில் நிர்மலா சீதாராமன் பேசி இருப்பது கவனம் பெற்றுள்ளது. புதிதாக பணிக்கு சேர்பவர்களுக்கு 1 மாத சம்பளம் இலவசம், மாணவர்களுக்கு ரூ10 லட்சம் வரை கல்விக் கடன் வழங்கப்படும், ஆண்டுக்கு 1 லட்சம் மாணவர்களுக்கு ரூ10 லட்சம் கல்வி கடன், பெண்களுக்கு தங்கும் விடுதி என்று திமுக ஸ்டைல் திட்டங்களை நிர்மலா சீதாராமன் வெளியிட்டு உள்ளார்.,. முக்கியமாக சமூக நீதி குறித்து பேசியது பெரிய அளவில் விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.
.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+