டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மாணவர்களின் மண்டையை உடைத்தார்கள்.. மோசமாக தாக்கினார்கள்.. உச்ச நீதிமன்றத்தில் காரசார வாதம்!

Google Oneindia Tamil News

டெல்லி: குடியுரிமை சட்ட திருத்த போராட்டத்தின் போது மாணவர்கள் போலீசாரால் மிக மோசமாக தாக்கப்பட்டு, மண்டை உடைக்கப்பட்டது என்று உச்ச நீதிமன்றத்தில் மாணவர்கள் தரப்பு வாதம் வைத்துள்ளது.

குடியுரிமை சட்ட திருத்த போராட்டத்தின் போது போலீசால் கல்லூரி மாணவர்கள் தாக்கப்பட்டதற்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கை ஒவ்வொரு மாநிலத்தில் உள்ள உயர் நீதிமன்றம் விசாரிக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. இந்த வழக்கை உச்ச நீதிமன்றத்தில் விசாரிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று தலைமை நீதிபதி எஸ்.ஏ போப்டே தெரிவித்துள்ளார்.

நேற்று முதல்நாள் நடந்த மாணவர்கள் போராட்டத்தில் டெல்லி மற்றும் உத்தர பிரதேசத்தில் மாணவர்கள் போலீசார் மூலம் தாக்கப்பட்டனர். இதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங் வழக்கு தொடுத்தார்.

என்ன வாதம்

என்ன வாதம்

இந்த வழக்கில் மாணவர்கள் தரப்பு வைக்கப்பட்ட வாதத்தில், படிக்கும் மாணவர்களை ஆயுதம் ஏந்திய போலீஸ் தாக்கியுள்ளது. மாணவர்கள்தான் நமது எதிர்காலம்: அவர்கள் தாக்கப்பட்டுள்ளனர். இதற்கு எதிராக நாடே எழுந்து போராட்டம் செய்து வருகிறது. நாடு முழுக்க பெரிய புரட்சியே நிகழ்ந்து வருகிறது.

போராடும் உரிமை

போராடும் உரிமை

எங்களின் போராடும் உரிமையை பறிக்க கூடாது. நாடு முழுக்க போராட்டம் நடக்கிறது என்றார். இதற்கு பதில் அளித்த தலைமை நீதிபதிபல பகுதிகளில் போராட்டங்கள் நடந்து வருகிறது. இதில் பல அரசுகள், பல அதிகாரிகள் சம்மந்தப்பட்டு இருக்கிறார்கள். எல்லோருக்கும் தனி தனியாக ஆலோசனைகள் வழங்க முடியாது.

தனி தனியாக விசாரிக்க முடியாது

தனி தனியாக விசாரிக்க முடியாது

எல்லோரையும் தனி தனியாக விசாரிக்க முடியாது. நாங்கள் ஒன்றும் கீழமை நீதிமன்றம் கிடையாது.இது தொடர்பான ஏன் எங்களிடம் முறையிட்டீர்கள்.டெல்லியில் எத்தனை பேருந்து கொளுத்தப்பட்டது.பேருந்தை எரித்தது யார்?.

அமைதி

அமைதி

ஜாமியா போராட்டம் அமைதியாக நடந்தது என்றால் பேருந்து, பொதுச்சொத்துகளுக்கு தீ வைத்தது யார்?
மாணவர்கள் மீது எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.அதை வாபஸ் வாங்க வேண்டும். இதற்கு பதில் அளித்தது மாணவர் தரப்பு.

மாணவர்கள் வன்முறை

மாணவர்கள் வன்முறை

போலீசை கல்லால் தாக்கினால் அவர்கள் என்ன செய்வார்கள்.மாணவர்கள் இப்படி வன்முறையில் ஈடுபட கூடாது.பல்கலைக்கழகம் தனியார் இடம்: அங்கு போலீஸ் அனுமதி இன்றி சென்றுள்ளது. முன்னாள் நீதிபதி தலைமையில் இதை விசாரிக்க வேண்டும், என்றனர்.

சரியானது எது

சரியானது எது

இதையடுத்து தலைமை நீதிபதி, முதலில் இந்த வழக்கை ஹைகோர்ட் விசாரிக்கட்டும். அதன்பின் உங்களுக்கு சந்தேகம் என்றால் சுப்ரீம் கோர்ட் வாருங்கள்.இந்த வழக்கை டெல்லி ஹைகோர்ட் விசாரிப்பது தான் சரியாக இருக்கும், என்றனர்.

கூடாது தவறு

கூடாது தவறு

இதற்கு பதில் அளித்த மாணவர் தரப்பு, டெல்லியில் போலீசால் மாணவர்கள் தாக்கப்பட்டனர்.உத்தர பிரதேசத்தில் அலிகார் முஸ்லிம் பல்கலையில் மாணவர்கள் தாக்கப்பட்டனர். அங்கு பலரின் மண்டையை உடைத்துள்ளனர். இந்த விஷயத்தை அப்படியே உச்ச நீதிமன்றம் கை கழுவி விட கூடாது. இதற்கு தலைமை நீதிபதி, செய்தி தாளில் வரும் செய்திகளை நம்பி எங்களால் முடிவு எடுக்க முடியாது.

டெல்லி ஹைகோர்ட்

டெல்லி ஹைகோர்ட்

இனிமேலும் எங்களால் மீண்டும் மீண்டும் சொல்ல முடியாது.டெல்லி ஹைகோர்ட்டில் இதை முறையிடுங்கள், அங்கு விசாரிப்பார்கள். டெல்லி ஹைகோர்ட் தலைமை நீதிபதி இதை விசாரிப்பார், என்று குறிப்பிட்டார்.

English summary
Citizenship Amendment: Police lathi-charged students, the head skull was broken for few says Student Side in Supreme Court.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X